Tuesday, May 31, 2011

மாணவர்களுக்கு அண்ணா அறிவுரை

நமது கலாசாரமும் நாகரிகமும் முதிர்ந்ததுதான் ஆனால் அவற்றின்மீது வடுக்களும், சுருக்கங்களும் ஏற்பட்டு உருக்குலைந்து போயிருக்கின்றன.

ஆகவே, நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து, பிறநாடுகளின் சாதனைகளில் நமக்குத் தேவையானவற்றைத் தாராளமாகப் பின்பற்றி முன் னேற்ற வேண்டும்.

இப்படிச் செய்யாமல் நாம் வடுக்களையும், சுருக்கங்களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார் போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.

பட்டம் பெற்றுவிட்ட நீங்கள் சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளி உண்டாக்குவதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும் பாடுபட வேண்டும்.

- 18.11.1967ஆம் நாள் அன்று
அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா


மேலும் பகுத்தறிவு செய்திகளுக்கு விடுதலை படிக்கவும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...