தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டிலிருந்து
இதுவரை 8, 087 உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு பயனாளிகளுக்குப்
பொருத்தப்பட்டிருப்ப தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் அதிகபட்சமாக
சிறுநீரகமும் அடுத்தபடியாக கருவிழிப் படலம், கல்லீரல் ஆகியவை உறுப்பு
மாற்று சிகிச்சைக்காக கொடையாகப் பெறப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள்
கூறியதாவது: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பு
நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு
வந்தது. அதன் காரணமாக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நாட்டின்
தலைநகராகவே தமிழகம் விளங்கி வருகிறது. அதனால்தான், தொடர்ந்து நான்கு
ஆண்டுகளாக உடல் உறுப்பு கொடையில் நமது மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
மூளைச் சாவு அடைந்த ஒருவரால் 7 பேருக்கு
மறுவாழ்வு அளிக்க முடியும். அதன் அடிப்படையில், ஒருவரிடம் இருந்து
பெறப்படும் உடல் உறுப்புகள், உரிய விதிகளின்படியே பயனாளிகளுக்கு பொருத்தப்
படுகின்றன.
தமிழகத்தில் இதுவரை 1, 368
கொடையாளர்களிடம் இருந்து 8, 087 உறுப்புகள் கொடையாக பெறப்பட்டுள்ளன.
அவற்றில் 2,459 சிறுநீரகங்களும், 2, 068 கருவிழிப் படலங்களும், 1, 260
கல்லீரல்களும், 860 இதய வால்வுகளும், 597 இதயங்களும், 525 நுரையீரல்களும்
கொடையாக பெறப்பட்டுள்ளன.
அதில் பெரும்பாலானாவை பயனாளிகளுக்குப் பொருத்தப்பட் டுள்ளன. இதன் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
உடல் உறுப்புகளை பயனாளிகளுக்கு அளிப்பதில்
அரசு மருத்துவமனைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே
தனியார் மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் வழங்கப்படு கின்றன என்று அவர்கள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment