சென்னையை அடுத்த வண்டலூரில் தலைக் கவசம்
மற்றும் சீட்பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள்
சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன்
அவசியம், மரம் வளர்ப்பு ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் கிரீன்வாய்ஸ்
அமைப்பு சார்பில், இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வண்டலூரில்
சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கிரீன்வாய்ஸ் என்ற
சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் ராகவன் சீனிவாசன் தலைமை வகித்தார்.
இதில், அவ்வழியே தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன
ஓட்டிகள் 100-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர்
ஹேமந்த்குமார் இலவச மரக்கன்றுகள், துணிப்பைகளை வழங்கியதுடன், விபத்துகளைத்
தவிர்க்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலம்
விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
No comments:
Post a Comment