Monday, February 24, 2020

பாஜகவின் மக்கள் விரோதப் போக்கு

மானியங்கள் தருவதை தவிர்க்க 90 விழுக்காடு குடும்ப அட்டைகளை ரத்துசெய்த அவலம்


ஜார்க்கண்டில் ஆட்சியிலிருந்த பாஜக அரசு மானியங்கள் தருவதைத் தவிர்க்க 90 விழுக்காடு குடும்ப அட்டை களை செல்லாதவைகள் என்று அறிவித்துள்ளது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
2016-_2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாஜக ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆட்சி செய்தது. அப் போது மாநிலத்தில் மானியங்களின் வருவாயை தக்கவைத்துக்கொள்ள  பல்வேறு காரணம் காட்டி குடும்ப அட்டைகள் செல்லாது என்று அறிவித்தது, அவ்வாறு அறிவித்த குடும்ப அட்டைகளில் கிட்டத் தட்ட 90% உண்மையானவை என்று அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வ கத்தின் ஆய்வு கூறி இருக்கிறது.
இந்த நீக்கப்பட்ட குடும்ப அட் டைகளில் கிட்டத்தட்ட 56% ஆதார் உடன் இணைக்கப்பட வில்லையாம். அதேநேரத்தில் போதிய ஊட்டச்சத்து இல்லாதது, உணவு பற்றாக்குறையால் 2015ஆம் ஆண்டு முதல் 2019 வரை பட்டி னியால் 23 இறப்புகள் பதிவாகி இருக்கின்றன என சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
2017ஆம் ஆண்டு அக்டோபரில் சிம்டேகா மாவட்டத்தில் 11 வயது சிறுமி பட்டினியால் இறந்தார். அவரது குடும்பத்தின் 'ரேஷன் கார்டு' ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்று ரத்து செய்யப்பட்ட சில மாதங்க ளுக்குப் பிறகு  அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
2017 ஆம் ஆண்டில், பாஜக அரசு, லட்சக்கணக்கான குடும்ப அட்டைகளை செல்லாது என்று அறிவித்திருந்தது.  அவற்றில் பெரும்பாலானவை போலி என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஆதாருடன் இணைக்கப்படாதவை என்று 11 லட்சம் குடும்ப அட் டைகள் ரத்து செய்யப்பட்டதாக அரசாங்கம்  கூறியது. பின்னர் இந்த எண் ணிக்கை 6.96 லட்ச மாக மாற்றப்பட்டது.
பொருளாதார வல்லுநர்களான கார்த்திக் முரளிதரன், பால் நிஹாஸ் மற்றும் சந்தீப் சுக்தங்கர் ஆகியோரால் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
2016_-2018க்கு இடையில் ஜார்க்கண்டில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாவட் டங்களில் குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்தது. இந்த 10 மாவட்டங்களில் 1.44 லட்சம் குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப் பட்டது.  தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்டில் ஆட்சி நடந்து வருகிறது, இந்த நிலையில் கடந்த ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல் களும் மெல்ல மெல்ல வெளியாகிக் கொண்டு உள்ளன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...