Thursday, December 20, 2012

புளுகுணிப் பூணூல்களே, புரியாதோ நோக்கு?



தந்தை பெரியார் அவர்களை நாக்கில் நரம்பின்றி, வாக்கில் நாணயமின்றி எழுதித் தாக்கு வதையே வாடிக்கையாக வைத் துள்ள சோவின் துக்ளக் ஏடு (இது கல்கி குழுமத்தால் - கூட்டத்தால் வெளியிடப்படும் ஏடு என்பதுகூட பலருக்குத் தெரியாது) யாரையாவது ஒரு அரைவேக்காடு எழுத்தாளரை விட்டு எழுதி காசாக்கிக் கொண்டு திரிகிறது.
முன்பெல்லாம் இப்படி எழுது வதற்கு யோசிப்பார்கள்; இப்போது ஒரு தனி தைரியமும், ஆணவமும் ஏற்பட்டுள்ளன. அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு.
1) தங்கள் இனத்தின் ஏகபோக ஆட்சி இங்கே நடக்கிறது;  என்ற திமிர்வாத மனப்பான்மை. (இது அந்த ஆட்சிக்கே ஆபத்தாக முடியப் போகிறது என்பது போகப் போகப் புரியும்).
2) தமிழர்களில் சில பதவி தேடிகளும், நாற்காலிக்காக எதை யும் தியாகம் செய்யும் வீடண சுக்ரீவர் அனுமார் கூட்டமும் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறி அக்கிரகார ஏடுகளின் சடகோபத்தை, சாங்கோ பாங்கமாகி, விரும்பி  சரணாகதி அடைவதுமாக இருப்பது!
ஆனால் இவை மணல் வீடுகளைப் போல் சரியப் போவது உறுதி. இறுதியில் சிரிப்போர் திராவிடர் இயக்கத்தவர். இடையில் சிரித்து, கடைசியில் அழுபவர்கள் அதன் எதிரிகள்.
சென்ற வாரமும், இந்த வாரமும் அக்கிரகாரத்தின் ஏவுகணையான அப்பு ஒன்று எழுதுகிறது!
தமிழ்ப் பேச ஆரம்பித்தால் அதற்காக பிராயச்சித்தம் செய்து கொள்வார்கள் பிராமணர்கள் என்ற கூற்று உண்மையல்ல என்று எழுது கிறாரே,
அத்தகைய கோயபெல்ஸ் களுக்கு நாம் ஆதாரபூர்வமாக மறுப்புரை தருகிறோம்.
இன்றும் உடுமலைப்பேட்டையில் வாழுபவர் பிரபல வரலாற்றுப் பேரா சிரியரான 98 வயது நிறைந்த  டாக்டர் என். சுப்ரமணியன் அவர் கள்; இவர்  பேராசிரியர்களின் பேராசிரியர் என்ற பெருமை பெற்றவர்.
தனித் தன்மையான சிந்தனை யாளர், அவர் இன்றும் இடையறாமல் எழுதிக் கொண்டே இருக்கும் இணையற்ற சிந்தனையாளர்.
பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய தன் வரலாற்றில் குறிப்பிட் டுள்ள தகவல்:   அவர் காரைக் குடியில் இருந்தபோது தமிழாசிரிய ரான அவரது தந்தையார் வித்து வான் பலராம அய்யர் அவர்கள் (இவர் பழைய சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரருக்கு ஆசிரியர்)  அவரிடம் படித்தவர் - விழுப்புரத்தில் இருந்தவர்.
சுவாமிகள் வந்து ஒரு வாரத்திற்கு மேலாக அங்குத் தங்கியிருந்தாராயினும், தலைமை யாசிரியர் உட்படப் பல பிரமுகர்கள் சுவாமிகளைப் போய்ப் பார்த்து ஆசி பெற்று வந்தனராயினும், எந்தையார் மட்டும் போகாமலே இருந்தார்.
தாங்கள் போகும்போது இவரையும் உடன் அழைத்துச் செல்ல விரும்பிய சிலருக்கு ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பி விட்டார்.
தமிழ்ப் பண்டிதர் மாசிலாமணி தேசிகர் எனக்கு 12.7.1960இல் எழுதிய ஒரு விரிவான கடிதத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு மேலும் கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.
சுவாமி கள் ந.ப. (ந. பலராமன், சுப்ரமணியம் அவர்களின் தந்தையார்  தமிழா சிரியர்) அவர்களிடம் பயின்ற பழக்கத் தால் வலுவிலே அழைத்துப் பார்த்தார்கள். ந.ப. அவர்கள் சுவாமிகளிடம் செல்லவில்லை. யான் ஒரு சமயம் தனித்து ஏன் மறுக்கிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு ந.ப. அவர்கள் மறைக்காமல் சொன்னதாவது: தமிழ் நாட்டில் தமிழ் மக்களாலே பாராட்டப்படும் பீடத்தினர்.
அப்படியிருந்தும் பூஜைக்குச் செல்ல நீராடிய பிறகு வடமொழியிலேதான் பேசுவார் களாம். தமிழிலே பேசினால் ஆச்சாரக் குறைவு என்று கருது கிறார்கள். பூஜை முடிந்து போஜனம் ஆனபின் தான் தமிழிலேயே பேசுவார்களாம். ஆதலால்  அரிய தமிழை அநாதரவு செய்கிறவர்களை ஏன் பார்த்தல் வேண்டும்? என் றார்கள்.
இத்தகவலை பேராசிரியர் டாக்டர் என். சுப்ரமணியம் அவர்கள் என் வாழ்க்கை வரலாறு நூலில் (பக்கம் 83-84) எழுதியுள்ளார்!
இவர் இன்னமும் உடுமலைப் பேட்டையில் வாழ்ந்து கொண் டுள்ளார்.
தந்தை பெரியார் கூறிய கருத்து முன்னாளில் எப்படி தமிழை நடத்தினார்கள் என்று கூறியதின் உண்மையே தவிர வேறென்ன?
தமிழை நீச்சப் பாஷை என்று ஒதுக்கி வைத்து, கோயில்களில் திருவாசகத்தையோ, தேவாரத் தையோ ஓதாமல், திருப்பாவை, திருவெம்பாவைகளுக்கு இடமின்றிச் செய்து, சமஸ்கிருத மந்திரங்களில் தான்வழிபாடு, பூஜை புனஸ்காரம் நடத்த வேண்டும் என்று இன்றும் நடைமுறையில் கடைப்பிடிப்பது பொய்யா?
எந்தப் பார்ப்பனராவது - எவ்வளவு சீர்திருத்தம் - லவுகீகம் பேசினாலும்கூட, தங்கள் திருமணச் சடங்கில் தமிழை, தமிழரைப் பயன் படுத்தி நடத்திக் கொண்டதுண்டா?
கலைஞர் கருணாநிதி அவர்கள் குடும்பத் திருமணம் ஒன்றில் வாழ்த்த சோவை அழைத்தபோது, அவர் பேசி, சமஸ்கிருத சுலோகத் தோடு, அப்பேச்சை முடித்தது இக்கட்டுரையாளரால் மறுக்க முடியுமா? அந்த மனப்பான்மைக்கு என்ன அடையாளம்?
முன்பு திருவையாறு தியாகப் பிரம்ம உற்சவத்தில், தியாகய்யர் அஞ்சலியில் பாட்டுப் பாடிய தண்ட பாணி தேசிகர் சித்தி விநாயகனே என்ற பக்தித் தமிழ்ப் பாட்டுப்பாடி மேடையை அசுத்தப்படுத்தி தீட் டாக்கி விட்டார் என்றுகூறி, அடுத்துப் பாட வந்த பார்ப்பன சங்கீத வித்துவான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மேடையை சாணம் போட்டு மெழுகி சுத்தம் செய்த பிறகே பாடுவேன் என்று அடம் பிடித்ததை மறுக்க முடியுமா?  இதுபற்றி குடிஅரசில் (9.2.1946) தீட்டாயிடுத்து என்று கலைஞர் எழுதியதுண்டே!
முதன்முதலாக பழைய தமிழ் ஏடுகளை - தமிழ் இலக்கியங் களைத் திரட்டியவர் உ.வே.சாமி நாதய்யர் என்பதேகூட சரியான தகவல் அல்ல.
அதற்குப் பலகாலம் முன்பே தமிழறிஞர் தாமோதரனார் இந்த அரும்பணியை முன்னோடியாக இருந்து துவக்கியவர் என்பது மறைக்கப்பட்ட வரலாறாக ஆகி விட்டதே!
குருவாக இருந்தவருக்கு மரியாதை செலுத்திய பிறகும் சாப்பாடு என்பதற்குப் பதிலாக போஜனம் என்று சொல்லப் படாதோ என்று கேட்டவர்தானே இந்த தமிழ்த் தாத்தா! புரியாதோ நோக்கு?

ஊசி மிளகாய்-


Adobe Flash Player not installed or older than 9.0.115!
Get Adobe Flash Player here

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...