Saturday, July 14, 2012

இராமனின் மறுபக்கம் (2)


இராமன் ஒரு சுயநலக்காரன் என்பது தந்தை சொல்லை மீறி காட் டிற்குச் செல்வது அபாயம் என்று கருதித்தானே லட்சுமணனை உடன் அழைத்துச் செல்ல ஒப்புக் கொண் டான்? கானகத்தில் குடிசை வேயவும், உணவு முதலியவைகளை சேகரித்துக் கொண்டு வந்து தரவும், மிருகங் களாலோ அல்லது மற்றவர்களாலோ தனக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் இலட்சுமணன் தனக்குப் பாது காப்பாக இருப்பான் என்று கருதித் தானே அவனை உடன் அழைத்துச் சென்றான்? இராமனைப் போல அவனுக்குத் திருமணமான அன்று தானே இலட்சுமணனுக்கும் திரு மணம் நடந்தது. தான் சீதையைப் பிரிய மனமில்லாமல் உடன் அழைத் துச் சென்றபோது இலட்சுமணன் உடன் வருகிறேன் என்றபோது, நீயும் உன் மனைவியை அழைத்துவா என்று சொல்லியிருக்க வேண்டாமா? அப்படி இலட்சுமணன் அவன் மனைவியை அழைத்து வந்திருந்தால் இராமனுக்கு உதவி செய்யாமல் அவன் மனைவியை அல்லவா கவனிப்பான் என்று கருதித்தானே மனைவியை அழைத்துவா என்று சொல்லாமல் இலட்சுமணனைத் தன்னோடு அழைத்துச் சென்றான். இதனால் கானகத்தில் இலட்சு மணனும், அரண்மனையில் அவன் மனைவியும் தனித்திருந்து வேதனைப் பட நேர்ந்தது. இதிலிருந்து இராமன் தன்னலமே பெரிதெனக் கருதிய சுயநலக்காரன் என்பது தெரிய வில்லையா? சிந்தித்துப் பாருங்கள்.
இராமன் ஒரு வஞ்சகன். காட்டில் இராமனைச் சந்தித்த பரதன் இராமனை அயோத்திக்கு வந்து முடி சூட்டிக் கொள்ளும்படி கேட்க, இராமன் மறுக்கிறான். மறுத்தவன் என்ன செய்ய வேண்டும்? தந்தை சொல்படி நீ போய் முடி சூட்டிக் கொள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? அப்படிக் கூறாததுடன் இராமனது பாதுகையைக் கேட்டதும் கொடுத்துவிடுகிறானே! அண்ணா நீ வரும்வரை இந்த பாதுகைகள்தான் நாட்டை ஆளும் என்றதும் சம் மதித்தானே. பாதுகைகளைத் தரு கிறான்; தான் ஆளாவிட்டாலும் தன் பாதுகைகள் ஆளட்டும். ஆனால் பரதன் ஆளக்கூடாது என்ற வஞ்சக எண்ணம்தானே காரணம்? இராமன் வஞ்சகன்தானே? சிந்தித்துப் பாருங்கள்.
இராமன் ஈவு இரக்கமற்றவன். சூர்ப்பனகை தன்னை அடைய விரும்புகிறாள் என்றதும் சீதைக்குப் பயந்து அவளை லெட்சுமணனிடம் அனுப்புகிறான். இலட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து விடுகிறான். இதைக் கடவுள் அவ தாரமான இராமன் கொஞ்சமும் இரக்கமின்றி லட்சுமணனைத் தடுக் காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். சீதையை இராவணன் தூக்கிச் சென்ற போது அவளைத் தடுக்க முயன்ற சடாயுவை இராவணன் தன் வாளால் வெட்டி வீழ்த்துகிறான். இறக்கும் நிலையில உள்ள சடாயுவிடம்  இராமன் இரக்கம் கொள்ளாமல் சீதையை இராவணனா தூக்கிச் சென்றான் என்று கேட்கிறானே தவிர சடாயுவுக்கு இப்படி ஒரு நிலை வந்ததே என்று கவலை கொள்ள வில்லை. ஆனால் இறுதி சடங்கு செய்கிறான். எப்படி தற்போது உயி ருடன் பெற்றோர்கள் இருக்கும் போது அவர்களைப் பராமரிக்காமல் இறந்ததும் தடபுடலாக சடங்குகள் செய்கிறார்களோ! அப்படி! இராமன் சாதாரணமான மனிதனைவிட ஈவு இரக்கமற்ற தன்மையில்தானே நடந்திருக்கிறான். இராமன் ஈவு இரக்கமற்றவன்தானே! சிந்தித்துப் பாருங்கள்.
இராமன் ஒரு கோழை. இராமா யணம் பூராவிலுமே அவன் ஒரு வீரனாக நடந்து கொள்ளவில்லை. உதாரணமாக சீதையை இராவ ணனிடமிருந்து மீட்க சுக்ரீவனை நாடியபோது வாலியிடமிருந்து நாட்டை மீட்டுத் தரவேண்டும் என்று சுக்ரீவன் கேட்டபோது இராமன் என்ன சொல்லியிருக்க வேண்டும். எனக்கு எந்தக் கெடுதியும் செய்யாத வாலியை நான் ஏன் கொல்லவேண்டும்? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? அது தர்மத் துக்குப் புறம்பாயிற்றே என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்? சீதையை மீட்க உதவி செய்கிறேன் என்றதும் அறமாவது? தர்மமாவது? என் றெண்ணி எந்த பாதகத்தையும் செய்யத் துணிகிறான் இராமன். அது மட்டுமல்ல. வாலி மகாவீரன். அவனை எதிர் நின்று யாரும் வெல்ல முடியாது. எனவே சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும் என்று கருதிய இராமன் சுக்ரீவனிடம் வாலியை சண்டைக்கு இழுத்து தான் மறைந் திருக்கும் மரத்துக்கு அருகில் வந்து சண்டையிடச் சொல்லி மரத்தின் மறைவிலிருந்து அம்பெய்து வாலியைக் கொல்கிறான். இது கடவுள் அவதாரத்திற்கு அழகா? (சக்ரவர்த்தித் திருமகன் எழுதிய இராஜாஜியே இது தவறான செயல்தான் என்று குறித்ததுடன் பெரியோர் என்னை மன்னிப்பார் களாக என்றும் குறிப்பிட்டுள்ளார். இராமன் ஒரு சுத்த வீரனாக இருந்திருப்பானேயாகில் நேருக்கு நேர் நின்றல்லவா வாலியுடன் சண்டை யிட்டு அவனைக் கொன்றிருக்க வேண்டும். இது கோழையின் செயல்தானே? இராமன் ஒரு கோழைதானே? சிந்தித்துப் பாருங்கள்.
இராமன் ஓர் காமாந்தகாரன். இராமன் காட்டுக்குப் புறப்பட்ட போது சீதை வருகிறேன் என்று சொன்னவுடன் வேண்டாம் என்று சொல்லாமல் தன்னுடன் அழைத்துச் செல்ல சம்மதித்ததில் இருந்தே அவன் தன் மனைவியைப் பிரிந்து செல்ல விரும்பவில்லை என்பது தெரிகிற தல்லவா? மேலும் காட்டில் சபரி என்ற வயதான மூதாட்டியை சந்தித்த போதும் அவன் எல்லை மீறியிருக் கிறான் என்பது தெரிய வருகிறது. அது மட்டுமல்ல, சீதை இருக்கும் போதே அயோத்தியில் போகத்திற்காக பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தான் என்றும் தெரி கிறது. அது மட்டுமல்ல. இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றதும் சீதையைப் பிரிந்த துயரம் தாளாமல் பல நாள் அழுதிருக்கிறான். தம்பி இலட்சுமணனிடமே சீதையுடன் தான் சல்லாபித்ததையும், சீதையைப் பிரிந்து விரகதாபத்தால் தவிப்பதையும், சீதையுடன் தான் அனுபவித்த இன்பத்தையும் வெளிப்படையாகச் சொல்லி புலம்புகிறான். கடவுள் அவதாரத்தின் லட்சணமா இது? இதிலிருந்து இராமன் ஒரு காமாந்த காரன் என்பது தெரிகிறதல்லவா? சிந்தித்துப் பாருங்கள்.
இராமன் ஒரு சந்தேகப் பேர்வழி. சீதை இராவணன் பாதுகாப்பில் இருந்ததை இராமன் சந்தேகிக்கிறான். இராவணனைக் கொன்று அயோத்திக்குத் திரும்பும் நிலையில் சீதையின் கற்பை சந்தேகித்து அவள் கற்பு நிலையை சோதிக்கத் தீக்குளிக்கச் சொல்கிறான். இராவணன் கைது செய்து வைத்திருந்தவர்களில் ஒருவ னான தீக்கடவுள் என்பவனை விட்டு கற்புத் தீ என்னைச் சுடுகிறது. தீ ஜூவாலையில் நான் தவிக்கிறேன். சீதை கற்பு கெடவில்லை என்று சொல்லி சீதையை ஏற்றுக் கொள் ளும்படி விபீடணனும், லெட்சுமண னும், அனுமனும் ஏற்பாடு செய் கின்றனர். அதன் பிறகு சீதையின் கற்பின் மேல் இராமன் சந்தேகப் படவில்லை. ஊரார் சீதையின் கற்பின் மேல் சந்தேகப்படக்கூடாது என்ப தற்காகவே அக்னி பரீட்சை செய்தேன் என்கிறான் இராமன். மேலும் அயோத்தி திரும்பி அரசுக் கட்டில் ஏறியபின் வண்ணானும் ஊராரும் சீதையின் கற்பை சந்தேகிக்கிறார்கள் என்று தெரிந்ததும் இராமன் லெட்சு மணனை அழைத்து சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு விடச் சொல்கிறான். இதிலிருந்து இராமன் சந்தேகப் பேர்வழி என்பது தெரிகிறதல்லவா? சிந்தித்துப் பாருங்கள்.
இராமன் ஓர் பதவிப் பிரியன். ஆரண்யத்திலே அண்ணனை சந்தித்த பரதன் அரியணையை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்ட போது மறுத்த இராமன் அவனது பாதுகையைப் பரதன் கேட்டதும் மறுப்பேதும் தெரிவிக்காமல் கொடுத்துவிடுகிறான். தான் ஆளா விட்டாலும் தன் பாதுகை ஆளட்டும் என்ற பதவி மோகமே காரணம். இராவண வதம் முடிந்து அயோத்தி திரும்பும் நிலையில் அனுமனை அழைத்து நீ விரைந்து அயோத்திக்குச் சென்று பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து நாடு திரும்பிக் கொண்டிருப்பதாக பரதனிடம் சொல் என்று அனுப்புகிறான். ஏன் அனுப்புகிறான்? தான் அயோத்தி சென்றடைய சற்று தாமதமானாலும் பரதன் அரியணை ஏற விடாமல் இடையூறு செய்து விட்டால் என்ன செய்வது? தான் ஆளமுடியாமல் போய்விடுமே என்று எண்ணியே அனுமனை அனுப்புகிறான். இதிலி ருந்து இராமன் பதவிப் பிரியன் என்பது தெரிகிறதல்லவா? சிந்தித்துப் பாருங்கள்.
இராமராஜ்ஜியம் ஒரு வர்ணாசிரம ராஜ்ஜியம். இராமன் வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்பி முடி சூட்டிக் கொண்டு நாட்டை ஆட்சி செய்து வரும்போது, அக்ரகாரத்தில் பார்ப்பனச் சிறுவன் ஒருவன் திடீரென்று இறந்துவிடுகிறான். உடனே பார்ப்பனர்கள் இராமனிடம் சென்று முறையிடுகிறார்கள். இராமன் காரணம் கேட்ட போது உன் ராஜ்ஜியத்தில் எங்கோ தர்மம் மீறப்படுகிறது, எங்கோ அதர்மம் நடைபெறுகிறது. அதனால்தான் இந்தச் சிறுவன் இறந்துவிட்டான் எனப் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். தர்மம் மீறப்படுகிறதா? என் ஆட்சியிலா? எங்கே? என்று இராமன் கேட்க, சூத்திரன் தவம் செய்கிறான். சூத்திரனுக்கு தவம் செய்யும் உரிமை இல்லை என்று பார்ப்பனர்கள் கூற, அப்படி யார் தர்மத்தை மீறி யாகம் செய்வது என்று இராமன் கேட் கிறான். உடனே பார்ப்பனர்கள் உன் ராஜ்ஜியத்தில் சம்புகன் என்னும் திராவிட அரசன் கடவுளை நோக்கி, தவம் செய்கிறான். அது மனு தர்மத்துக்கு மீறிய செயல் என்று சொல்லவும், இராமன் சம்புகன் தவம் செய்யும் இடத்திற்குச் சென்று சம்புகனை தன் வாளால் வெட்டி வீழ்த்துகிறான். உடனே அக்ரகாரத்து பார்ப்பனச் சிறுவன் பிழைத்துக் கொள்கிறான். பார்ப்பனர்கள் மகிழ்ச் சியோடு இராமனை வாழ்த்துகின் றனர். (இது வேண்டுமென்றே சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்பதற்காக பார்ப்பனச் சிறுவனை இறந்தது போல நடிக்கச் செய்த நிகழ்ச்சி!)  இராம ராஜ்ஜியம் வர்ணாசிரம தர்மராஜ்ஜியம்தானே? சிந்தித்துப் பாருங்கள்.
கடவுள் அவதாரம் என்று சொல்லப்படுகிற இராமன் பல நேரங்களில் சாதாரண மனிதனை விட மிகக் கீழாக நடந்திருக்கிறான். இந்த ராமனைத்தான் நம் நாட்டில் கடவுள் என வணங்கி வருகின்றனர். அயோத்தியில் மசூதியை இடித்து அந்த இடத்தில் இராமர் கோவில் கட்டியே தீருவோம் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர். இது நியாயந்தானா? தேவைதானா? இராமனின் மறுபக்கத்தை மக்கள் புரிந்து கொண்டால் கடவுளாகக் கொண்டாடுவார்களா? அல்லது கோவில் தான் கட்டத் துணிவார்களா? சிந் தித்துப் பாருங்கள்.
(நிறைவு)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...