Monday, February 24, 2020

செல்லிடப் பேசி, கணினி பயன்பாட்டால் கண் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!


செல்லிடப் பேசி, கணினி பயன்பாட்டால் கண் பார்வை பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கண் சோர்வு, உலர் விழி பாதிப்பு உள்ளிட்ட பிரச்சி னைகளை 50 சதவீதத்துக்கும் அதிக மான மாணவர்கள் எதிர் கொண்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள் ளனர்.
கடந்த பத்தாண்டுகளாக செல் லிடப்பேசி மற்றும் கணினியின் பயன்பாடு பல மடங்குகள் அதிக ரித்து விட்டன. குறிப்பாக வளரிளம் பருவத்தினார் அதிக அளவில் செல்லிடப்பேசிகளை உபயோகித்து வருகின்றனர் இந்தியாவைப் பொறுத்த வரை ஏறத்தாழ 95 சதவீத இளைஞர்கள் செல்லிடப்பேசி மற்றும் கணினியில்தான் அதிக நேரம் செலவிடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் வாயிலாக தகவல் - தொடர்பு மேம்பட்டிருப்பது உண்மை என்றாலும், மறுபுறம் பல்வேறு எதிர்வினைகளும் ஏற்பட் டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து டாக்டர் அகர் வால்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் கலாதேவி சதீஷ் கூறியதாவது:
பகலில் மட்டுமன்றி இரவிலும் கண் விழித்து செல்லிடப் பேசி களிலும், கணினியிலும் நேரத்தை செலவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அவ்வாறு டிஜிட்டல் திரைகளைப் பார்ப்ப தால் கண் பாதிப்பு நேரிடும். குறிப் பாக, கண் அழுத்த பாதிப்புகளுக்கு அது வழிவகுக்கும். அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், கண்களில் எரிச்சல் ஏற்படும். மங்கலான பார்வை, கவனக் குறைபாடு உள் ளிட்டவற்றுக்கும் அது வித்திடும். அதனுடன், தலைவலி, கழுத்து, தோள்பட்டை வலி மற்றும் தூக்கப் பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். இதுபோன்ற பாதிப்புகளை எதிர் கொண்டு சிகிச்சைக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களை தற்போது அதிகமாகப் பார்க்க முடிகிறது.
அதுமட்டுமன்றி கணினி சார்ந்த கண் நோய்கள் எனப்படும் சில பிரச்சினைகளாலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மிக சிறிய வயதிலேயே பார்வைத் திறன் குறையும்.
இதுகுறித்து உரிய விழிப்புணர்வு அவசியம். அதற்காக செல்லிடப் பேசியையோ அல்லது கணினி யையோ பயன்படுத்தக் கூடாது என்று அர்த்தமில்லை. அவற்றை பாதுகாப்பாக எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதைத்தான் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
கணினி, செல்லிடப்பேசிகளை பயன்படுத்துகிறபோது உரிய கால அளவுகளில் கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். 20-20-20 என்ற விதிப்படி அவற்றை பயன்படுத்தினால் கண் பாதிப்புகளில் இருந்து தவிர்க்கலாம்.
அதாவது, செல்லிடப்பேசிகள், கணினியை பயன்படுத்தும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அதில் இருந்து பார்வையை விலக்கி 20 அடி தொலைவில் உள்ள ஓரிடத்தை, 20 விநாடிகள் பார்க்க வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் திரையைத் தொடர்ந்து பார்ப்பதனால் ஏற் படும் கண் பாதிப்புகளை குறைக்க முடியும்.
மேலும், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை கண் களை மூடித் திறக்க வேண்டும்; கண்களை இமைக்க வேண்டும்.

இதைத் தவிர, ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், இரவில் கண்விழிக்காமல் குறைந்தது 7 மணி நேரம் தூங்குதல் ஆகியவையும் கண்களை பாதுகாப்பதற்கான வழி முறைகளாகும் என்றார் அவர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...