அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள
தனியார் நிறுவனங்கள் இணைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி
மாணவர்களுக்கு இணையம் வாயிலாக நடத்திய அறிவியல் தேர்வில் நாமக்கல்
மாவட்டத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி அபிநயா வெற்றி பெற்றார். இதை
யடுத்து, அவர் நாசா விண்வெளி ஆய்வு மய்யத்திற்கு செல்ல உள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில்
வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள
தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய அறிவியல் தேர்வில் வெற்றி பெற்று,
நாசா செல்லும் வாய்ப்பை அபிநயா பெற்றுள்ளார். மாணவி அபிநயாவின் சாதனையை
பாராட்டியும், வருங் கால இளைய தலை முறையினரை ஊக்குவிக்கும் வித மாகவும்
அவருக்கு 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விண்வெளி
துறையில் இதுபோன்று பல சாதனைகள் படைத்து தமிழ கத்திற்கு பெருமை சேர்க்க
வேண் டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment