பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், மதுக்
கடைகளை மூடவும் கோரி வடலூரிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட
மாதர் சங்கத்தினரை (சி.பி.எம்.) தாம்பரத்தில் தடுத்து நிறுத்தி
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த இரு கோரிக்கைகளும் அ.தி.மு.க. அரசுக்கு உடன்பாடு அற்றவையா?
தடையை மீறினார்கள் என்பதற்காக காவல்துறை
அத்துமீறி நடந்துகொண் டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகம், கருத்துரிமை
என்பதெல்லாம் பேணப்பட வேண்டிய சட்ட ரீதியான உரிமையாகும்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment