Thursday, December 5, 2019

காவல்துறை தேர்வுக்கு திருநங்கையரை அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

'காவல்துறைப் பணிக்கான உடல் தகுதித் தேர்வுக்குத் தயாராகியுள்ள திரு நங்கையர் அய்ந்துபேரை அனுமதிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வில், தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கையர் சாரதா, தேன்மொழி, சென் னையைச் சேர்ந்த தீபிகா ஆகியோர் பங்கேற்றனர். சாரதா 32மதிப்பெண்கள், தேன்மொழி 30மதிப் பெண்கள், தீபிகா 32மதிப்பெண்கள் பெற்றனர். இவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தப் பிரிவுக்கு நிர்ண யிக்கப்பட்ட, 44மதிப்பெண் எடுக்காததால், உடல் தகுதி தேர்வுக்கு, இவர்களை அழைக்க வில்லை.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், மூவர் உள்ளிட்ட அய்ந்து திருநங்கையர், மனுக் கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, நீதிபதி தண்டபாணி விசாரித்தார்.
உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள, அய்ந்து பேரையும் அனுமதிக்கவும், அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை, சீலிட்ட உறையில் தாக்கல் செய்யவும், சீருடை பணியாளர் தேர் வாணையத்துக்கு, நவம்பர் 14இல், நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 'இந்த உத்தரவை நிறை வேற்றவில்லை' என, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், வழக்குரைஞர் ஆஜராகி தெரிவித்தார்.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, இடைக்கால உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். விதிகளில் திருத்தம் வராமல் நிவாரணம் பெற, திருநங்கையருக்கு உரிமையில்லை என்றும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
மற்ற சாதாரணமான வழக்குகளை போல, இந்த மனுக்களை கருத முடியாது. திருநங்கை யருக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருதி, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.
எனவே, நவம்பர் 14இல் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை, நாளைக்குள் நிறைவேற்ற வேண்டும். உத்தரவை நிறைவேற்ற வில்லை என்றால், இரண்டாம் நிலை காவலர் தேர்வு நடவடிக்கை முழுவதற்கும், தடை விதிக்கப் படும். எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கை தாக்கல் செய்ய, நாளை மறுநாளுக்கு வழக்கு தள்ளி வைக்கப் படுகிறது.
இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...