Wednesday, July 17, 2019

இந்திய எல்லையில் கடத்தலை முழுமையாக தடுக்க இயலாது: வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை



டாக்கா, ஜூலை 17- இந்திய--வங்கதேச எல்லைப் பகுதியில்  கடத்தல்களை முழுமையாக தடுக்க இயலாது என்று வங்கதேச எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. மேலும், இந்த கடத்தலை தடுப்பதற்கு இந்திய எல் லைப் பாதுகாப்பு படை ஒத்துழைக்க வேண்டும் என்றும் அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு கால்நடைகள், போதைப் பொருள்கள், ஆயுதங்கள், தோல் பொருள்கள் ஆகியவை கடத்தப்படு கின்றன. அதேபோல் வங்கதேசத்தில் இருந்தும் இந்தியாவுக்கு சில பொருள் கள் கடத்தப்படுகின்றன. இந்த கடத் தல்களை கட்டுப்படுத்துவது, இந்திய மற்றும் வங்கதேச எல்லைப் பாது காப்பு படைகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

முன்னதாக, கடந்த 1-ஆம் தேதி, மேற்கு வங்கத்தில் உள்ள இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வங்கதேச கடத்தல் கும்பல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து வங்கதேச எல்லைப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வங்கதேசத்தில் கால்நடைகளுக்கு அதிக தேவை உள்ளது. அதனால் கடத்தல்காரர்கள் எந்தஒரு வாய்ப் பையும் தவற விடுவதில்லை. எல்லைத் தாண்டிய கடத்தல்கள் எளிமையாக நிகழ்ந்து விடுகின்றன. ஒரு கால் நடைக்கு ரூ. 400 செலுத்தினால் போதும். அதிகாரிகள், இந்திய கால் நடைகளை வங்கதேசத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதியளித்து விடு கின்றனர். எல்லைத் தாண்டியதும் அவர்கள் வர்த்தகக்காரர்களாக மாறிவிடுகின்றனர்.

இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மிகவும் ஏழ்மையா னவர்கள். தங்களது வாழ்க்கைக்காக இந்த தொழிலைச் செய்து வருகின்ற னர். அதனால் அவர்கள் மீது நாம் கடும் நடவடிக்கை மேற்கொள்ள இயலாது.

கடத்தலில் ஈடுபடுவர்களை எப் போதும் பிடித்து விசாரித்த பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவோம். இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரும் இதையே செய்வர். ஆனால் சில நேரங்களில் கடத்தல்காரர்களை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொலை செய்கின்றனர். இத்தகைய கடத்தலில் ஈடுபடுவர்கள் அதிக அளவுக்கு துன்புறுத்தப்படு கின்றனர். இவையெல்லாம் நிறுத்தப் பட வேண்டும்.

வங்கதேசம் நட்புநாடாக திகழவே விரும்புகிறது. எங்கள் நாட்டுக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் எல்லைத் தாண்டிய கடத்தல், ஊடு ருவல், கள்ள நோட்டு புழக்கம், கால் நடைகள் கடத்தல் ஆகியவைதான். இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஒத்துழைக்க வேண்டும். எல்லையில் வசிக்கும் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சினை களை தீர்த்து வைக்க மாற்று வழிகளை பரிந்துரைக்கலாம். இதன் மூலம் கடத்தல்களை தடுக்க முயற்சிக்கலாம். கடந்த மாதம் நடைபெற்ற இருநாட்டு எல்லை பாதுகாப்பு படை அதிகாரி கள் கூட்டத்தில், இரு நாடுகளும் இணைந்து இந்த கடத்தல் சம்பவங்க ளுக்கு எதிராக போராட முடிவெடுக் கப்பட்டது. இந்த கடத்தல் வர்த்த கத்தை முழுமையாக தடுக்க இந்திய எல்லைப் பாதுகாப்பு படையும் ஒத் துழைக்க வேண்டும் என்று கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...