Wednesday, July 17, 2019

"நீட்" விலக்கு கிடையாதாம் மத்திய அரசு திட்டவட்டம்



புதுடில்லி, ஜூலை 17  'மருத்துவக் கல்விக்காக நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றக்  கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மக்களவையில், கேள்வி ஒன் றுக்கு, பா..,வைச் சேர்ந்த, மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், நேற்று எழுத்து மூலம் அளித்துள்ள பதில்: மருத்துவக் கல்வி,

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச் சகத்தின் கீழ் வருகிறது. 'மருத்துவ கல்விக்காக தேசிய அளவில் நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய மருத்துவ கவுன் சில் சட்டத்தில், நாடு முழுவ தும், ஒரே மாதிரியான நுழை வுத் தேர்வு நடத்த வேண்டும் என, கூறப்பட்டுள் ளது.

அதன்படியே, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப் படுகிறது. இந்த சட்டம், நாடு முழுவதற்குமானது; அதில் எந்த விலக்கும் அளிக்க முடியாது.

அதனால், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்த விலக்கும் அளிக்க முடியாது. இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு கேள்விக்கு, அமைச்சர், ரமேஷ் போக்ரி யால் நிஷாங்க் அளித்து உள்ள பதில்:

குறிப்பிட்ட சில நாடு களில் வழங்கப்படும், ஒரு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புகளை அங்கீ கரிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. அதே நேரத்தில், சில நாடுகளில் நடைமுறையி லுள்ள பட்டப் படிப்புகள், நாம் அங்கீகாரம்அளித்துள்ள பட்டப் படிப்புகளில் இருந்து வேறுபட்டுள்ளன.

இது போன்ற பட்டப் படிப்புகளை அங்கீகரிப்பது குறித்து ஆராய, குழு அமைக் கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் படி, இது போன்ற நாடுகளுடன் பேசவுள்ளோம்.

இவ்வாறு, பதிலில் கூறப் பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...