அப்பெருமகன்
பற்றிய சில செய்தித்துளிகள்
- சு.குமார தேவன்
* நீதித்கட்சியைத்
தோற்றுவித்தவர்களில் டாக்டர் நடேசனார்,
சர் பிட்டி தியாகராயருக்குப் பின்
மூன்றாவது மிகப் பெரிய தலைவர்
டாக்டர் நாயர் என்று அன்புடன்
அழைக்கப் பட்ட "தாரவார்ட் மாதவன் நாயர் "ஆவார்.
* கேரளாவின்
பாலக்காடு அருகே உள்ள திரூருக்குப்
பக்கம் உள்ள தாரவார்ட்டில் சங்கரன்
நாயரின் மகனாக ஒரு செல்வந்தக்
குடும்பத்தில் பிறந்தார்.
* டாக்டர் நாயர் தான்
பயின்ற எல்லாப் பாடங்களிலும் எல்லாத்
தேர்வுகளிலும் முதலிடத்தில் தேறி, சென்னை மருத்துவக்
கல்லூரியிலும், பின்பு இங்கிலாந்திலும் மருத்துவம்
பயின்று MPCM என்ற உயர்ந்த பட்டம்
பெற்றார். பின்பு பிரான் சிலும்
பயின்று ENT மருத்துவத்தில் பட்டமும், எடின்பரோ பல்கலையில் M.D.யும் படித்து மருத்துவத்தில்
சாதனை படைத்தார்.
* சென்னை
திரும்பி Anti Septic என்ற சென்னை ராஜதானியின்
முதல் மருத்துவ இதழை நடத்தினார். Madras Standard என்ற ஆங்கில நாளேட்டிற்கும்
ஆசிரியராக இருந்தார். இந்த இதழே சென்னையின்
முதல் மருத்துவ இத ழாகும். இந்த
இதழில் வந்த கட்டுரைகள் டி.எம். நாயருக்கு மிகப்
பெரும் புகழினைப் பெற்றுத் தந்தது.
* பொது
வாழ்வில் தீவிர ஈடுபாடு கொண்டு
காங்கிரசில் பணியாற்றிய டாக்டர் நாயர் 1904 முதல்
1916 வரை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றி னார். அவர் காலத்தில்
Madras Medical Registration Act கொண்டு
மருத்துவத் தொழில் செய்வதை ஒழுங்குபடுத்த
வகை செய்தார்.
* ஆறரை
அடி உயரம், அகன்ற நெற்றி,
ஒளி மிகுந்த ஊடுருவிப் பார்க்கும்
கண்கள், முறுக்கு மீசை என்று கம்பீரத்
தோற்றம் கொண்ட டாக்டர் நாயர்
பொது வாழ்வில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டும், சுயமரியாதையோடும் பணி யாற்றினார். 1908ஆம்
ஆண்டு சென்னை திருவல்லிக் கேணி
பார்த்தசாரதிக் கோவில் குளத்திற்கு வரியில்லாமல்
தண்ணீர் விட வேண்டுமென்று அப்போது
மேயராக இருந்த சர்.பிட்டி
தியாகராயரின் தீர்மா னத்தை எதிர்த்த
நாயர் அப்படி செய்தால் மிகுந்த
வருமான இழப்பும், தவறான முன்னுதாரணமாகவும் ஆகிவிடும்
என்றார். சிலர் (மயிலாப்பூர் கூட்டத்தினர்)இதற்காக அவரைக் கடுமையாக
விமர்சித்தும் பதவி விலக வேண்டும்
என்றும் எழுதியும் பேசியும் வந்ததை அறிந்த தன்மானத்
சிங்கமான டாக்டர் நாயர் நேர்மையாகவும்,
உண்மையாகவும், நாணயமாகவும் பாடுபடுவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் இடமில்லை
என்று கூறி பதவி விலகினார்.
இதனால் பொது வாழ்வின் தூய்மைக்கு
எடுத்துக் காட்டாய் விளங்கினார்.
* காங்கிரசில்
இருந்த டாக்டர் நாயர் 1915இல்
டெல்லி இம்பீரியல் சட்டமன்றத் திற்கு தேர்ந்தெடுக்க நடந்த
தேர்தலில் பார்ப்பனர்கள் சொல்லி வைத்து தோற்க
வைத்தனர். அப்படித் தோல்வியுற்றதே அவரது பொது வாழ்வில்
நீதிக் கட்சியின் பக்கம் திரும்ப வைத்தது.
* அப்போது
டாக்டர் நடேசன், தியாகராயர் சந்தித்து
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் சேர வற்புறுத்தி அவரை
இயக்கத்தில் சேர்த்தனர். நன்கு ஆலோ சித்து
ஒரு தீவிர உறுதியோடு பார்ப்பன
ரல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு சமரசமின்றிப் பாடு படத் தயாராகி
நீதிக் கட்சியில் இணைந்தார் டாக்டர் நாயர்.
* டாக்டர்
அன்னிபெசன்ட் பற்றி யாரும் விமர்சிக்காத
போது,அவரின் நோக்கம்,சர்ச்சைக்குரிய
நடவடிக்கை பற்றியும் Madam Besant என்ற நூலை எழுதி
HIGGIN B0THAMS நிறுவனத்தால்
வெளியிடச் செய்தார். இதனால் கோப முற்ற
பெசன்ட் தாக்கல் செய்த அவதூறு
வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். அப்போது
பெசன்ட் பெருமை பேசியவர்கள் பின்பு
அவரின் நோக்கம் எப்படி ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு எதி ரானது என்பதை
விளங்கிக் கொண்டனர். ஜாலியன் வாலாபாக் படுகொலையினை
நியாயப்படுத்திப் பேசியவர் அன்னி பெசன்ட் என்பதைப்
பெரியார் தோலு ரித்துக் காட்டி
யதை நினைவில் கொள்ள வேண்டும்.
* 10-11-1917 அன்று
மாண்டேகு - செம்ஸ் போர்டு சென்னை
வந்து புதிய ஆட்சி அமைப்பது
பற்றி பல்வேறு கட்சித் தலைவர்களைச்
சந்திக்க வந்த போது டாக்டர்
நாயர், நடேசனார், சர்.பிட்டி தியாகராயர்
ஆகியோர் சந்தித்து நான் பிராமின் ரிசர்வேசன்
(Non-Brahmin Reservation) பற்றி
கோரிக்கை ஒன்றை அளித்துப் பேசினர்.
ஆனால் அவர்கள் அதைப் பற்றி
பெரிதாக அக்கறை காட்டவில்லை. இதன்
பின்னணியில் சர்.சி.பி.ராமசாமி அய்யரும்,பெசன்ட்
அம்மையாரும் இருந்தார்கள் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள்
ஆதாரங் களுடன் கூறுகின்றனர். பின்பு
அந்தக் கோரிக்கை மனு நீதிக் கட்சியின்
மிக முக்கிய "Non-Brahmin
Manifesto " என்று அறிக்கையாக உருவாகி திராவிட இயக்கத்தின்
உயிர்நாடிக்கொள்கையாகி இன்று வரை ஒடுக்கப்பட்ட
மக்கள் கல்வி வேலைவாய்ப்புகளின் இட
ஒதுக்கீடு பெற வழிவகை செய்துள்ளது.
* டாக்டர்
நாயர் இது பற்றி வலியுறுத்த
இங்கிலாந்து சென்றார். ஆனால் அவர் எந்தப் பொதுக் கூட்டத்திலும்
லண்டனில் பேசக்கூடாது என்று காங்கிரசாரும், சுயராஜ்யக்
கட்சியினரும் நெருக்கடி தந்ததை முடியடித்து ஒவ்வொரு
பகுதி யாக தெருமுனையிலும், பூங்காக்கள்
முன்பும் நின்று பிரச்சாரம் செய்து
வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் பற்றி
வலியுறுத்தினார். இந்த நிகழ்வுகள் டாக்டர்
நாயருக்கு ஒரு பெரிய செல்வாக்
கைத் தேடித் தந்தது.
* சுயராஜ்யம்
பெறுவதே நம் லட்சியம் என்று
காங்கிரஸ் காரர்கள் சொன்னபோது, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப் பட்ட மக்கள் சரிசமமாக ஆட்சியில்
பங்கு பெற்று சரிசமமாக வாழ்வதே
உண்மை யான சுயராஜ்ஜியம் என்று
தன் கம்பீரக் குரலால் கர்ஜனை புரிந்தவர்
டாக்டர் நாயர்.
* ஒடுக்கப்பட்ட
தாழ்த்தப்பட்ட மக்கள் பங்களிப்பில்லாமல் நீதிக்கட்சி
வேரூன்ற முடியாது என்ற நாயர் 7-10-1917இல்
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் ஆற்றிய வீர உரையால்
சென்னை வாழ் தாழ்த்தப் பட்ட
இயக்க நிர்வாகிகள் பெருவாரியாக நீதிக் கட்சியை ஆதரிக்க
முன் வந்தனர். "நீதிக்கட்சி வரலாறு" என்ற புத்தகத்தில் ஆய்வாளர்
க.திருநாவுக்கரசு இந்த
உரையினை முழுவதுமாகப் பதிவு செய் துள்ளார்.
* 1910இல்
அயோத்திதாசப் பண்டிதர் டாக்டர் நாயரின் பணிகளைப்
பாராட்டி எழுதியுள்ளார். எம்.சி.ராஜா
குறை கூறாத ஒரே நீதிக்
கட்சித் தலைவர் நம் டாக்டர் நாயர்
மட்டுமே.
*நீதிக்கட்சி
1920இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு நாயரின் பணி அடித்தள
மிட்டது என்பது கல்லின் மேல்
செதுக்கப் பட்ட உண்மை.
* வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவத்தை ஆதரித்ததற்காகவும் காங்கிரசிலிருந்து விலகி தீவிரமாக நீதிக்
கட்சியை ஆதரித்து வந்ததற்காகவும் டாக்டர் நாயரை திரு.வி.க தன்
தேசபக்தனில் திட்டித்தீர்த்தார். "தேசிய கவி" பாரதியும்
நாயரை சகட்டு மேனிக்கு விமர்சித்து
அவரை வகுப்புவாதி என்றார். இதன் மூலம் நாயரின்
இயக்கப்பற்று வெளிப்படும்.
* 1918இல்
இங்கிலாந்து பாராளுமன்றத் தில் தன்னந்தனியாக பார்ப்பனரல்லாதார்
சமூக ரீதியிலும், அரசியல் ரீதியாகவும் எவ்வாறு
ஒடுக்கப்படுகின்றனர் என்பது பற்றி விரிவாக
விளக்கினார். தன் சொந்த சப்பாத்தியத்தில்
லண்டன் சென்று பார்ப் பனரல்லாத
மக்கள் இட ஒதுக்கீடு பெறப்
பாடுபட்ட டாக்டர் நாயர் இன்றளவும்
வரலாற்றில் ஒரு உதாரணமாக உள்ளார்.
* 1919இல்
மீண்டும் தன் நியாயமான வகுப்புரிமைக்
கொள்கையை வலியுறுத்த லண்டன் சென்று நாடாளுமன்ற
கூட்டுக் குழுவில் உரையாற்ற சென்றார். அவர் பேச தடை
செய்யப்பட்டிருந்தது. பின்னர் சைடம்ஸ் பிரபுவின்
பெரு முயற்சியால் 18-07-1919 அன்று அவருக்கு பேச
வாய்ப்பளிக்கப் பட்டு இருந்தது. ஆனால்
அதற்கு முதல் நாள் (17-07-1919) டாக்டர்
நாயர் இதய
நோய் தாக்குண்டு முடி வெய்தினார். கோல்டர்ஸ்
கிரீன் (Golders Green) என்ற இடத்தில் அவர்
உடல் தகனம் செய்யப்பட்டது.
* தான்
வாழ்ந்த 51 ஆண்டுக் காலத்தில் திருமணம்
என்ற எண்ணம் கூட எழாமல்
படிப்பு, பொதுவாழ்வு என்று திறந்த புத்தகமாய்
ஒடுக்கப்பட்ட மக்களுக் காகவே வாழ்ந்தார் டாக்டர்
நாயர்.
* பல்வேறு
இதழ்கள், சங்கங்கள், அய்ரோப்பிய தலைவர்கள் அவர் மறைவுக்கு இரங்கல்
தெரிவித்தாலும் காங்கிரசின் எந்தப் பிரிவு தலைவர்களும்
டாக்டர் நாயர்
மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வில்லை
என்பதே அவர் கொள்கை உறுதியை
பறைசாற்றும் என்பதோடு அவர்களின் குரூர எண் ணமும்,
நாகரிகமின்மையும் அப்போ தைய காங்கிரசில்
இருந்தவர்கள் மனிதாபி மானம் இன்றி
உயர் ஜாதிமனப்பான்மையினராக இருந்தார்கள் என்பதை வெளிக்காட்டும்.
* டாக்டர்
நாயரை " திராவிட லெனின் " என்பார்கள்.லெனின் எப்படி எப்போதும்
படித்துக் கொண்டே இருப்பாரோ அப்படி
நம் டாக்டர் நாயரும் படித்துக்
கொண்டே பொது வாழ்வில் ஈடுபட்டார்.
* டாக்டர்
நாயரின் மறைவுக்குப் பின் அவர் எதிர்பார்த்த
நீதிக்கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு
சாதனைகளை சமூகத்திலும், அரசியலும் தங்களுக்கு அளிக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தில் செய்து
சாதனை படைத்தது.1937இல் நீதிக் கட்சி
தோற்ற போது சத்தியமூர்த்தி அய்யர்
நாங்கள் நீதிக் கட்சியை ஆழக்
குழி தோண்டிப் புதைத்து விட்டோம் என்றார். 1967இல் அண்ணா தலைமையில்
தி.மு.க.ஆட்சி
அமைந்த போது, தி.மு.க. நீதிக் கட்சியின்
தொடர்ச்சி என்று சொன்னார். அந்த
ஆண்டு தான் நீதிக் கட்சி
தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற பொன்விழா
ஆண்டு ஆகும்.
திராவிடர்
இயக்கத்தின் அசைக்க முடியாத கொள்கைத்
தூண் டாக்டர் டி.எம். நாயர்
நினைவைப் போற்றுவோம்.
வாழ்க டாக்டர் டி.எம். நாயர்.
No comments:
Post a Comment