எல்லைப் பகுதிகளிலிருந்து போர் விமானங்களை
திரும் பப் பெறாத வரை, இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லைக்குள்
செல்வ தற்கு அனுமதி அளிக்க மாட் டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்திய விமா னங்கள் செல்வதற்கு
விதிக்கப் பட்ட தடையை வரும் 26ஆம் தேதி வரை பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை
நீட்டித்தது. 5ஆவது முறையாக தடைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில்
பாகிஸ்தா னைச் சேர்ந்த பயங்கரவாதி கள் சிஆர்பிஎஃப் வீரர்களை குறிவைத்து
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தாக்குதல் நடத் தியதை அடுத்து, இந்தியப் போர்
விமானங்கள் பாகிஸ் தானின் பாலாகோட் பகுதி யில் இருந்த பயங்கரவாத முகாம்களை
குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதை யடுத்து, பிப்ரவரி 26ஆம் தேதி முதல்
தங்கள் நாட்டு வான் எல்லை வழியாக இந்திய விமானங்கள் பறக்க அனுமதியில்லை
என்று பாகிஸ்தான் கூறிவிட்டது.
இந்நிலையில், விமானங் களை அனுமதிக்க சில நிபந் தனைகளை இந்தியாவுக்கு பாகிஸ்தான் விதித்துள்ளது.
இதுதொடர்பாக அந் நாட்டு விமானப்
போக்குவரத் துத் துறை இயக்குநரும், செய லருமான நஸ்ரத், விமானப்
போக்குவரத்துத் துறை நிலைக் குழுவிடம் கூறு கையில், எல்லைப் பகுதிகளில்
தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ள இந்திய விமானப் படைக்குச் சொந்தமான
விமானங்களை திரும்பப் பெறுமாறு இந்திய அதிகாரி களிடம் தெரிவித்துவிட்டோம்.
அதுவரை, இந்திய விமானங்களை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைய அனுமதிக்க மாட்
டோம். இதை இந்திய அதி காரிகளிடமும் தெளிவுப் படுத்திவிட்டோம்' என்றார்.
இந்தக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து
இந்தியாவிலி ருந்து புறப்படும் விமானங்கள் வேறு வழியாக திருப்பி விடப்
படுகின்றன என்று பாகிஸ் தான் ஊடகங்களில் வெளி யாகியுள்ள செய்தியில் தெரி
விக்கப்பட்டுள்ளது.
கிர்கிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங் கேற்பதற்காக பிரதமர் நரேந் திர மோடி
சென்ற விமானத் துக்கு மட்டும் பாகிஸ்தான் அரசு தனது வான் எல்லை யைப்
பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தது. எனினும், பிரதமர் மோடியின் விமா னம்
பாகிஸ்தான் வான் எல் லையை அப்போது பயன் படுத்தவில்லை.
முன்னதாக, இந்திய நாடா ளுமன்றத்தில்
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கடந்த
வியாழக்கிழமை கூறு கையில், பாகிஸ்தானின் நட வடிக்கையால் ஏர் இந்தியா விமான
நிறுவனத்துக்கு கூடு தலாக ரூ.430 கோடி செல வாகிறது' என்றார்.
No comments:
Post a Comment