நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் மதிக்காதது கெட்டவாய்ப்பானது என்று உயர்நீதிமன்ற கிளை வேதனை தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை ஒரு
வழக்கமாகவே அதிகாரிகள் வைத்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்
தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என்றும்,
இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எச்சரிக்கை விடுத்தது.
அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிலத்தை
நிர்ணயம் செய்யக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று உயர்நீதிமன்ற
மதுரை கிளையில் ராமநாதபுரத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் வழக்கு ஒன்றை
தாக்கல் செய்தார். அதில் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகா ரிகள் நடவடிக்கை
எடுக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை
கிளை தாலுகா அளவிலான அதிகாரிகள் மக்கள் கோரிக்கையை எப்படி அணுகுகிறார்கள்
எனபதற்கு இந்த வழக்கு உதாரணம் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சின்ன
சின்ன விஷயங்களுக்கும் பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு வர வேண்டியுள்ளது என்று
நீதிபதி வேதனை தெரிவித்தார். மனுதாரரின் கோரிக்கையை அதிகாரிகள் 4
வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறினால் தாமாக முன்வந்து நீதிமன்ற
அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment