தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலையறிக்கையில்
குறிப்பிடப் பட்ட புள்ளி விவரத்துக்கும், அதற்கு முதல் நாள் தாக்கல்
செய்யப்பட்ட பொருளாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்ட புள்ளி விவரத்துக் கும்
வித்தியாசம் தான் இந்த குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் போதும் ஒதுக் கீடாக இருந்தாலும், வருவாய், செலவாக இருந்தாலும் மதிப் பீட்டை தான் தெரிவிப்பர்.
மறு ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யும்
போது, முந்தைய ஆண்டின் வருவாய், செலவு விவரம் திட்ட வட்டமாக தெரியவரும்.
இதே புள்ளி விவரம் தான் பொருளாதார அறிக்கையிலும் வெளியிடப்படும்.
கடந்த 2018_20-19ஆம் ஆண்டில் அரசின்
வருவாய் ரூ.17.3 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் குறிப் பிடப்பட்டுள்ளது.
ஆனால், பொரு ளாதார அறிக்கையில் ரூ.15.6 லட்சம் கோடி என்று விவரம்
தரப்பட்டுள் ளது. அப்படியானால் ரூ.1.7 லட்சம் கோடி எங்கே போனது என்ற கேள்வி
உங்களுக்கே எழுகிறதா? இந்த கேள்வி தான் நிதி அமைச் சகத்தை ஆட்டிப்
படைக்கிறது. எங்கு ஓட்டை விழுந்துள்ளது என்று சரி செய்ய மும்முரமாக
ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் அதிகாரிகள்.
அதாவது, சதவீதத்தில் சொல்வ தாக இருப்பின்,
பட்ஜெட்டில் மொத்த உள் நாட்டு உற்பத்தி சதவீதத்தில் 9.2 சதவீதம் அரசின்
வருவாயாக உள்ளது. பட்ஜெட்டில் இந்த ரூ. 17 லட்சம் கோடி காணா மல் போனதால்
வரு வாய் 8.2 சதவீதம் ஆக குறைந்துள்ளது.
வருவாய் கணக்கில் மட்டுமல்ல, செலவின்
கணக்கிலும் இந்த கூட் டல் கழித்தல் குளறுபடி நடந்துள் ளது. பட்ஜெட்டில்
திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 2018-_2019ஆம் ஆண்டு மொத்த செலவினம்
ரூ.24.6 லட்சம் கோடி என்று குறிப்பிடப்பட் டுள்ளது. ஆனால், பொருளாதார ஆய்வு
அறிக்கையில் ரூ.23.1 லட்சம் கோடியாக சுட்டிக்காட்டப்பட் டுள்ளது.
அதாவது, ரூ.15 லட்சம் கோடி வித்தியாசம்
உள்ளது. வரி வருவா யில் தான் கணக்கு குளறுபடி நடந் துள்ளதாக தெரிகிறது.
அதாவது, கடந்தாண்டு வரி வருவாய் ரூ.14.8 லட்சம் கோடி யாக பட்ஜெட்டில்
காட்டப் பட்டுள்ளது. ஆனால், பொருளாதார ஆய்வு அறிக்கையில் வரி வருவாய்
ரூ.13.2 லட்சம் கோடி என்று சொல்லப்பட் டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சக
அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கணக்கில் தான் குளறுபடி
என்று அவர்கள் தரப்பில் சொல்லப் பட்டுள்ளது. இந்தியாவின் முதல் தலைமை
புள்ளிவிவர ஆய் வாளர், முன்னாள் தேசிய புள்ளிவிவர கமிஷன் தலைவர் பிரணாப்
சென் கூறுகை யில், "இது பெரும் கவலைக்குரிய விஷயம். இதை சரி செய்திருக்க
வேண்டும். எப்படி நடந்துள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும். பற்றாக் குறையை
ஈடு செய்யும் போது இந்த தவறு நேர்ந்திருக்க லாம்'' என்றார்.
No comments:
Post a Comment