Friday, July 12, 2019

ஜாலியன்வாலாபாக் அறக்கட்டளை: ராகுலை நீக்கும் மத்திய அரசு முடிவுக்கு அமரிந்தர் எதிர்ப்பு

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் மக்கள வையில் கடந்த 8-ஆம் தேதி ஒரு மசோதாவை தாக்கல் செய்தார்.

அதில், "ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளையை அரசியல் சார்பற்றதாக மாற்ற வேண்டும். எனவே, இதன் நிரந்தர உறுப்பினராக காங் கிரஸ் கட்சித் தலைவர் இருப் பார் என குறிப்பிடப்பட் டுள் ளதை நீக்க அனுமதி வேண் டும்  என குறிப்பிடப்பட்டுள் ளது. இதுபோன்ற மசோதா பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியின் போதும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் நேற்று முன்தினம் கூறும் போது, ஜாலியன்வாலாபாக் நினைவிடம் அமைக்கப்பட் டது முதல் அதனுடன் காங்கிரஸ் கட்சி இணைந்து செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த அறக்கட்டளை யில் இருந்து காங்கிரஸ் கட்சித் தலைவரை நீக்கும் முடிவு முற் றிலும் தவறானது என்றார். 1951-இல் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளையின் தலைவ ராக பிரதமர் இருந்து வருகி றார். காங்கிரஸ் கட்சித் தலை வர், கலாச்சார துறை அமைச் சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், பஞ்சாப் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...