பெற்றோரி டம் கோபித்துக் கொண்டு
வீட்டிலிருந்து வெளியேறி, ரயில்களில் வந்த சிறுவர், சிறுமிகள் 1,040 பேர்
கடந்த 6 மாதத்தில் மீட்கப்பட்டுள் ளனர் என்று ரயில்வே பாது காப்புப் படை
ஐஜி பிரேந்திர குமார் தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில்,
64--ஆவது ரயில்வே வார விழா சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே
தலைமையகத்தில் கொண்டாடப் பட்டது.
விழாவுக்கு தெற்கு ரயில்வே ஐஜி பிரேந்திர
குமார் தலைமை வகித்தார். தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, சேலம்,
திருச்சி, திருவனந்தபுரம், பாலக் காடு ஆகிய கோட்டங்களில் சிறப்பாகப்
பணியாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு விருதுகளை ரயில்வே
பாதுகாப்புப் படை ஐஜி பிரேந்திர குமார் வழங் கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தெற்கு ரயில்வேயில் சிறப் பாகப்
பணியாற்றியவர்களை மேலும் ஊக்குவிக்கும் வித மாக விருதுகளை வழங்கினோம்.
வீட்டில் பெற்றோரிடம் கோபித் துக்கொண்டு வெளியேறி ரயில்களில் வந்த
சிறுவர், சிறுமிகள் 1,040 பேர் கடந்த 6 மாதத்தில் ரயில்வே பாது காப்பு
படையினரால் மீட்கப் பட்டுள்ளனர்.
இதேபோல, ரயிலில் பயணிகள் தவறவிட்ட 1,127
பொருட்கள் மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார். விழாவில், ரயில்வே
பாதுகாப்புப் படை ஆணை யர் அருள் ஜோதி, மற்றும் ரயில்வே பாதுகாப்புப்
படையினர், ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment