Wednesday, July 10, 2019

3 விமான நிலைய நிர்வாகத்தை அதானிக்கு தாரை வார்த்த மோடி அரசு!

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் கவுதம் அதானிக்கு, இந்தியாவி லுள்ள 3 விமான நிலையங்கள், 50 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது.

அகமதாபாத், ஜெய்ப்பூர், மங் களூரு, திருவனந்தபுரம், லக்னோ மற்றும் கவுகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களின் நிர்வாகத்தை, தனி யாருக்கு கொடுப்பதென, மோடி அரசு கடந்தாண்டு முடிவெடுத்தது. இதற்காக ஏலமும் அறிவித்தது. - இதில், அதிகத் தொகைக்கு ஏலம் கேட்டார் என்ற அடிப்படையில் தான், 3 விமான நிலையங்களை அதானிக்கு மோடி அரசு தற் போது குத்தகைக்கு விட்டுள்ளது. இதுதொடர்பாக மோடி அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

"அரசு மற்றும் தனியார் பங் களிப்பு அடிப்படையில், மங்க ளூரூ, அகமதாபாத் மற்றும் லக்னோ விமான நிலையங்களை, அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏலத்தின் போது, அதானி குழுமம் அதிகத் தொகை அளிப்பதற்கு முன்வந்ததால், அந்த நிறுவனம் மேற்கண்ட 3 விமான நிலையங்களையும், 50 ஆண்டுகளுக்கு நிர்வாகம் செய் வதற்கு, விமான நிலைய ஆணையம் உரிமை வழங்கி யுள்ளது” என்று அந்த அறிக்கை யில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...