Wednesday, July 10, 2019

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 80 பொறியியல் கல்லூரிகள் மூடல்

நாடு முழுவதும் ஒரே ஆண்டில் 80 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என அகிலஇந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் கூறினார். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.அய்.சி.டி.இ) தலைவர் அணில் சஹஸ்ரபுத்தே கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், கண்டுபிடிப்பு களுக்கு முக்கியத்துவம் அளித்து வரு கிறது. பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு களை தரும் கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங் கள், கல்வி நிறுவனங்கள் நிதியுதவி அளிக் கின்றன. கண்டுபிடிப்புகளின் தன்மையை பொறுத்து நிதியுதவியின் அளவு மாறு படும். கண்டுபிடிப்புகள், தொழில்முனை வோர் மற்றும் மேம்பாட்டுக்காக புதிய 2 ஆண்டு மேலாண்மை படிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த படிப்புகளால், புதிய கண்டுபிடிப்புகளும், செயல்முறைகளும் ஊக்கப்படுத்தப்படும்.

அகில இந்திய அளவில் கடந்த ஆண் டில் 80 பொறியியல் கல்லூரிகள் மூடப் பட்டுள்ளன. இவைகளில் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. அதனால், கல்லூரி நிர்வாகத் தினர் தாமாகவே முன்வந்து கல்லூரி களை மூடியுள்ளனர். பொறியியல் கல்வி யில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆனால், பொறியியல் கல்வி யின் தரம் குறையவில்லை. புதிய கல்லூ ரிகளும், ஒருங்கிணைந்த புதிய பல்கலைக் கழக வளாகங்களும் துவக்கப்பட்டு வரு கின்றன. மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு நடத்துவது போன்று, அகிலஇந்திய அளவில் பொறியியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்துவது பற்றி ஆலோ சனை நடந்தது. இருப்பினும், தற்போ துள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவந்த பின்னர்தான் முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...