சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே
கீழடி பள்ளிச் சந்தை திடலில் கடந்த 2015 மார்ச் முதல் மத்திய தொல் பொருள்
ஆய்வு மய்யத்தின் மூலம் மூன்று கட்டமாக அக ழாய்வு நடைபெற்றது. இதில்
இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த செங்கல் கட்டுமான
வீடுகள், மண்பாண்டங்கள் உள்பட ஏராளமான பழங் கால பொருள்கள் கிடைத் தன.
மேலும் தமிழ்ப் பிராமி எழுத்துகள் பொறிக்கப் பட்ட ஓடுகளும் கிடைத்தன.
இதையடுத்து, நான்காம் கட்ட அகழாய்வுப் பணியினை தமிழக தொல்லியல் துறை கடந்த
2018 -ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆய்வில் 5,820 தொல் பொருள்கள்
கண்டெடுக்கப் பட்டன. நான்கு கட்ட அகழாய்வில் கிடைத்த 13,638 தொல்
பொருள்களும் தொல்லியல் துறை அலுவ லகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜூன் 13-ஆம் தேதி தமிழ்
ஆட்சி மொழி மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச் சர் க.பாண்டியராஜன்,5-ஆம்
கட்ட அகழாய்வுப் பணியை தொடங்கி வைத்தார். சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.47
லட்சம் மதிப்பீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் தரைக்கு கீழே உள்ள
கட்டமைப்பை அறியும் பொருட்டு, மும்பையில் உள்ள இந்திய புவி காந்த
விசையியல் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்யப் பட்டு பணிகள் தொடங்கின.
இதில் நான்கு குழிகளை ஆய்வு செய்த பின், 5-ஆவது குழியினை தோண்டும் பணி
செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. அப்போது, தரையிலிருந்து சுமார் ஒரு அடி
ஆழத்தில் செங்கல் கட்டடம் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர்கள் கூறிய தாவது:
5-ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் கடந்த சில நாள்களாக 4 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெற்றன.
அதில், ஏற்கெனவே அகழாய்வு செய்த இடத்தில் கிடைத்ததுபோல், மண் பாண்ட ஓடுகள் உள் ளிட்ட ஏராளமான தொல் பொருள்கள் கிடைத்துள் ளன.
செவ்வாய்க்கிழமை 5-ஆவது குழியைத் தோண்டும்
போது, சுமார் ஒரு அடி ஆழத்தில் சிதைவு பெறாத நிலையில் செங்கற்களால் ஆன
கட்டடம் கண்டறியப் பட்டது. அதுகுறித்த ஆய்வுப் பணிகள் நடை பெற்று
வருகின்றன. இந்த இடத்தில் இன்னும் ஏராள மான தொல் பொருள்கள் கிடைக்கும்
நம்பிக்கை உள் ளது என்றனர்.
No comments:
Post a Comment