Friday, October 20, 2017

பி.ஜே.பி. பீடையை ஒழிக்க எதிர்க்கட்சிகள் என்ன செய்யவேண்டும்?

உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆதித்தியநாத் பேசிய காணொலி ஒன்று இணைய தளங்களில் வெளியாகியுள்ளது, அதில் அவர் பேசியதாவது:


‘‘தாஜ் மகால் நமது அடையாளம் அல்ல, அயல் நாட்டுக்காரர்கள் அங்குவருவதைத் தவிர்க்கவேண் டும், அதற்குப் பதிலாக காசி, மதுரா, உஜ்ஜைன், அலகாபாத் சங்கமம் போன்ற இடங்களை சுற் றுலாத்தலமாக அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்,
தாஜ்மகால் நமக்கானதும் அல்ல; நமது கலாச்சாரத்தின் படி கட்டப்பட்டதும் அல்ல, நாங்கள் ஹுமாயுன்பூரை அனுமான்பூராக மாற்றினோம், குர்காவை குருகிரா மாக மாற்றினோம், இப்படி மாற்றவேண்டியவை நிறைய உள்ளன.  பாஜக ஆட்சி அமைத்தால் தாஜ் மகால் என்ற பெயரை ராம்மகால் என மாற்றி, அங்கு ராமருக்கான சின்னங்களை எழுப்புவோம். சுற்றுலா வருபவர்கள் அடிமைகளின் கட்டடத்தைப் (தாஜ் மகால்) பார்க்கும் பொழுது நமது கலாச்சார நாயகனின் புகழையும் கண்டு களிக்கட்டும்‘’ என்று அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இவர் கடந்த ஆண்டு பீகாரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், ‘‘நாம் வெளிநாட்டு விருந்தினருக்கு தாஜ்மகாலை நினைவுப் பரிசாக வழங்குகிறோம்; இப்படி கொடுப்பதற்கு நாம் வெட்கப்படவேண்டும். மோடி, தான் செல்லும் நாடுகளில் அந்த தலைவர் களைச் சந்திக்கும்போது ‘‘பகவத் கீதை’’யைப் பரிசாக அளித்து, நமது கலாச்சார பெருமைகளை உலகத்திற் குக் கொண்டு செல்கிறார்’’ என்றும் கூறினார்.
இதன் தொடர்ச்சியாகத்தான் சில நாள்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் தாஜ்மகால் இடம் பெறவில்லை. தற்போது மாட் டிறைச்சி தொடர்பான வதந்தி பரவியதால் கொல்லப் பட்ட அக்லாக் படுகொலையில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம், ‘‘தாஜ்மகால் அடிமையின் சின்னம்‘’ என்று கூறினார்.
தாஜ்மகால் விவகாரத்தில் உத்தரப்பிரதேச அமைச்சர்கள் முதல் அம்மாநில முதல்வர் வரை மிகவும் எதிர்மறையான கருத்தைப் பேசிவருகின்றனர்.  நாட்டின் பெயரைக்கூட பாஜகவினர் நமக்குத் தெரியாமல் மாற்றி விடுவார்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள் ளார்.
இவர்களின் இது போன்ற குதர்க்கமான பேச்சுகள் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்தபோது,  ‘‘இது ஏதோ ஒரு சங்கீத்சோம் என்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து அல்ல. இதுதான் பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் கொள்கை. தற்போது அது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு நாட்டின் நினைவுச் சின்னத்தை மதத்தின் பெயரால் அந்த நாட்டின் வரலாற்றில் இருந்து எப்படி பிரிக்க முடியும்? மிகவும் தவறான பாதையில் பாஜக பய ணிக்கிறது. இங்கு நடப்பது சர்வாதிகார ஆட்சி. பலதரப்பட்ட மக்கள் தங்கள் வேற்றுமைகளைக் கடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நாட்டில் தற்போது இந்த கருத்து தேவையற்றது. இதுபோன்று கருத்து தெரிவிப்பவர்களை நாம் விலக்கி வைக்க வேண்டும். கூடிய விரைவில் நமக்குத் தெரியாமல் நமது நாட்டின் பெயரைக் கூட இந்த ஆட்சியாளர்கள் மாற்றிவிடுவார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் இவர்கள் பிரச்சினைகளைத் தூண்டிவிடுகிறார்கள்’’ இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.
இந்த நிலையில், மதச்சார்பின்மையில் உறுதியாக நம்பிக்கைக் கொண்டவர்கள், காங்கிரசு, திரிணாமுல் காங்கிரசு, தேசியவாத காங்கிரசு, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், முசுலிம் அமைப்புகள், தலித் உரிமைக்குப் பாடுபடும் அமைப்புகள், தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகள் சிறுசிறு மாச்சரியங்களைத் தூர வைத்து, நாட்டின் பொதுநலனைக் கருத்தில் கொண்டு, பொது எதிரியான பா.ஜ.க.வை வீழ்த்தினால் தான் நாடு பிழைக்கும். நாகரிகமான வகையில் குடிமக்களும் இங்கு வாழ முடியும்.

குறிப்பாக இதில் இடதுசாரிகளின் முடிவு முக்கிய மாகும். கடந்த முறை செய்த தவற்றினை மீண்டும் செய்யக்கூடாது என்பதுதான் வெகுமக்களின் எதிர்பார்ப்பு!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...