சஞ்சய் குமார்
இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல்வேறு
பல்கலைக் கழகங்களிலும் அண்மைக் காலத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகள்,
இந்திய அரசியலை திடீரென சூடுபடுத்தி விட்டன. இந்திய மக்களிடையே பொதுவாகவே
பெரும் ஆதரவைப் பெற்றிருப்பதாகத் தோன்றிய நரேந்திர மோடியின் தலைமையிலான
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தனது கவர்ச்சியை இழந்து கொண்டு வருவதாகத்
தோன்றுகிறது. தற் போதைய அரசுக்கு எதிரான மகிழ்ச்சியற்ற, ஏமாற்றம் நிறைந்த
குரல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இப்போது கேட்க முடிகிறது.
மக்களுக்கு இந்த அரசு என்ன செய்துவிட்டது என்று மக்கள் திடீரெனக் கேட்கத்
தொடங்கிவிட்டனர். பா.ஜ.க.வுக்கு எதிரான உணர்வுகள் வளர்ந்து கொண்டே
வருவதாகத் தோன்றிய போதிலும், 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வி அடையும்
அளவுக்கு இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்று கூறுவது
மிகைப்படுத்திக் கூறப்படுவதாகத்தான் இருக்க முடியும்.
பாமர மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த அரசு நிறைவேற்றாத போதிலும், பணமதிப்பிழப்பு நடவடிக் கைகள், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை அவசரம் அவசரமாக நடைமுறைப்படுத்தியது போன்ற தவறான செயல்களுக்காகவும், மோடியிடமும் சந்தேகத்திற்கு இடமற்ற அவரது நேர்மை மற்றும் நாணயத்தின் மீதும் பெரும் அளவிலான மக்கள் கொண்டிருந்த நம்பிக் கையின் காரணத்தால் மட்டுமே மோடியை மன்னிக்க மக்கள் தயாராக இருந்தனர்.

பல்கலைக் கழக மாணவர் அமைப்பு தேர்தல்கள்
நாட்டில் நிலவும் ஒட்டு மொத்த அரசியல்
நிலை அல்லது மக்களின் ஆதரவையும் காட்டும் ஒரு முழுமையான சோதனையாக பல்கலைக்
கழக மாண வர் அமைப்பு தேர்தல்கள் இருக்க முடியாது. என்றாலும் நம் நாட்டு
இளைஞர்களின் மனதில் எத்தகைய சிந்தனைகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதைப்
பற்றி ஒரு சில அடையாளங்களையாவது காட்டுபவை யாக இந்த தேர்தல்கள் உள்ளன.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், டில்லி பல்கலைக் கழகம், அய்த ராபாத்
பல்கலைக் கழக மாணவர்களின் அமைப்பு தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற அகில
பாரதிய வித்யார்த்தி பரிஷத் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆதரவு பெற்ற
இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பும் டில்லி பல்கலைக் கழகத்தைத் தவிர மற்ற
பல்கலைக் கழக தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மாணவர்களின்
ஆதரவு பல்வேறுபட்ட பல்கலைக் கழகங்களிலும் பலவிதமாக இருந்தது. ஆனால்
மாணவர்களின் ஒட்டு மொத்த மனநிலை தெளிவாக இருந்தது. அகில பாரதிய
வித்யார்த்தி பரிஷத் அமைப்புக்கு எதிரான அலையாக அது இருந்தது என்பது
மட்டும் நிச்சயமானது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், அய்தராபாத் பல்கலைக்
கழகங்களின் மாணவர்கள், தொல்லை அளிப்பவர்கள் என்று பா.ஜ.க. குறித்து
வைத்திருந்ததை எவர் ஒருவராலும் மறக்க முடியாது.
பல்வேறு பல்கலைக் கழகங்களில் பா.ஜ.க. ஆதரவு அமைப்பு அடைந்துள்ள இத்தகைய தோல்வி பா.ஜ.க.வுக்கு கவலை தரும் விஷயமாக இருக்க வேண்டும். பா.ஜ.க.மீது மக்கள் கொண்டிருந்த ஆதரவு நிலவிய இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இத்தேர்தல்களில் இத்தகைய தோல்வியை சந்தித்து இருக்காது. 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இளைஞர்கள் பெரிய அளவில் ஒரு முக்கியமான பங்காற்றினர் என்பதால், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின தோல்வி பா.ஜ.க.வுக்கு ஓர் எச்சரிக்கை மணியைப் போன்று இருப்பதேயாகும். 2014 தேர்தலில் இளைஞர்கள் பெரும் அளவில் மோடிக்கு ஆதரவாகத் திரண்டு பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர். இந்த பல்கலைக் கழக தேர்தல்கள் பா.ஜ.க.வுக்கு கவலை அளிப்பவையாக இல்லாமல் போனாலும் கூட, பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளை வளர்ப்பவையாக இருந்ததைப் பற்றி பா.ஜ.க. நிச்சயமாகக் கவலைப்பட்டே ஆக வேண்டும். பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர் இயக்கம் மற்ற பல்கலைக் கழகங்களுக்கும் பரவுவதற் கான ஆற்றல் கொண்டதாக உள்ளது. 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என்று பாஜ.க. அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படாததால் பா.ஜ.க. மீது இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம் பெருகி வருவது பா.ஜ.க.வுக்கு ஆபத்தானது. கடந்த அய்ந்து ஆண்டுகளில் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிக அளவில் இருந்தது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

விவசாயிகளின் பிரச்சினைகளும் போராட்டங்களும்
நாடெங்கிலும் பா.ஜ.க.மீது விவசாயிகளுக்கு
இருக்கும் அதிருப்தியையும் காண முடிகிறது. குறைந்த அளவு உற்பத்தி விலை,
விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு நிர்ணயிக்கப்படவேண்டும் என்பதே
விவசாயிகளின் முக்கியமான கோரிக்கையாக இருந்த போதிலும், விவசாயக் கடன்
தள்ளுபடி போன்ற இதர பிரச்சினைகள் பற்றிய அவர்களது மற்ற கோரிக் கைகளும்
உள்ளன. விவசாயத் துறையின் பணப் பரிமாற்றம் அனைத்தும் ரொக்கப் பணப் பரிமாற்ற
மாகவே இருப்பவை என்பதால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயிகளுக்கு ஒரு
பேரிடியாக அமைந்தது. கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் தெற்குப் பகுதியில்
கேரளா, தமிழ்நாடு மாநிலங்களிலும், வடக்கே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்
மாநிலங் களிலும், மேற்கே மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங் களிலும்
விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து வந்துள்ளன. பா.ஜ.க. அரசிடம் அவர்கள்
அடைந்துள்ள ஏமாற்றம், விவசாயிகளை நாடு தழுவிய அளவில் ஒன்று சேர்த்துள்ளது
என்றே தோன்றுகிறது.
வியாபாரிகளிடையே அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புணர்வு
நகர்ப்புற மத்திய தர வர்க்க மக்களிடையே
பா.ஜ.க. மீதான மனநிறைவின்மை வளர்ந்து வருவது தெளி வாகவே தெரிகிறது. இப்போது
நாம் காணும் இத்தகைய, அரசு மீதான மனநிறைவின்மை, சில மாதங்களுக்கு முன்பு
நினைத்துக் கூடப் பார்க்க முடியாததாக இருந்தது. பா.ஜ.க. வின் முதுகெலும்பு
போன்ற ஆதரவு அடித்தளமாக, அண்மைக் காலம் வரை இருந்து வந்துள்ள வணிகப்
பெருமக்கள், சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய காரணத்தால்,
அரசின் மீது அதிருப்தி அடைந்தவர்களாக உள்ளனர். இந்த வரிக்காக பெரிய அளவில்
கணக்குகள் பேண வேண்டிய சுமை அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. வரவு செலவுக்
கணக்கு எழுதும் கணக்கர்களாக மோடி எங்களை ஆக்கிவிட்டார். நாங்கள் வியாபாரம்
செய்வதா? அல்லது கணக்கு எழுதுவதா? என்று வியாபாரிகள் கேட்பது
வாடிக்கையாகிவிட்டது. சிறு வியாபாரிகளுக்கு முதலில் பணமதிப்பிழப்பு நட
வடிக்கை, இப்போது இந்த சரக்கு மற்றும் சேவை வரி என்ற இரண்டு விதமான சுமை
ஏற்பட்டுள்ளது. இந்த சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு நடைமுறையின்படி பாமர
மக்கள், சில பொருள்களை வாங்கும்போது கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது.
நுகர் வோரிடம் வியாபாரிகள் உங்களிடம் வாங்கும் கூடுதல் பணத்தை நாங்கள்
ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை. மோடியிடம்தான் கொடுத்துவிடுகிறோம். உங்கள்
பணத்தையெல்லாம் அவர்தான் எடுத்துக் கொண்டு போகிறார் என்று கூறுகிறார்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் சில பிரச்சினைகளை சந்திக்கவே
செய்தனர் என்றபோதிலும், இறுதியில் தங்களுக்கு சில பயன்கள் கிடைக்கும்
என்பதால் மக்கள் நீண்டதொரு காலத்திற்கு அமைதியாகவே இருந்தனர். ஆனால்,
சரக்கு மற்றும் சேவை வரியால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பணமதிப்
பிழப்பு நடவடிக்கைமீது மக்கள் தங்களது கோபத்தைக் காட்டச் செய்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட சரக்கு
மற்றும் சேவை வரிவிதிப்பு நடைமுறை மீது மக்கள் அதிக அளவில் கோபம்
கொண்டுள்ளனர் என்பது அண்மையில் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்
மூலம் தெரிய வந்துள்ளது. அரசிடம் கேள்வி கேட்போர் பட்டியல் இத்துடன்
நின்றுவிட வில்லை. தலைமை இல்லாத ஊதியக் குழுவின் கார ணமாகவும், மத்திய
அரசு ஊழியர்களுக்கு நி;லுவைத் தொகை அளிக்க அனுமதிக்காத பா.ஜ.க. அரசிடம்
அதே அளவில் அரசு ஊழியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பல்வேறுபட்ட பிரிவு வாக்காளர்களிடையே
பா.ஜ.க. அரசு பற்றி வளர்ந்து வரும் மனநிறைவின்மை அரசுக்கு ஒரு நல்ல
அடையாளம் அல்ல என்பது தெளிவாகவே தெரிகிறது. இந்த அதிருப்தி என்ற காற்றுப்
பெரும் புயலாக மாறாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. மோடிக்கு
மாற்றாக ஒரு தலைவர் இல்லை என்பதும், மோடி பற்றிய தனிப்பட்ட
நம்பகத்தன்மையும்தான்.
இப்போது நம் முன் எஞ்சியுள்ள ஒரே ஒரு
கேள்வி இதுதான்: இன்னமும் எவ்வளவு காலத்துக்கு, தனது தனிப்பட்ட
தோற்றத்தாலும், நம்பகத்தன்மையாலும் மோடியினால் இந்த எதிர்ப்பு அலையைத்
தடுத்து நிறுத்தமுடியு;ம்? அரசு நன்முறையில் செயல்பட்டு மக்களின் நலன்களைக்
காக்க வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கின்றனரே அன்றி, வெறும்
பகட்டுப் பேச்சைக் கேட்பதில் ஆர்வம் அற்றவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர்.
நன்றி: ‘தி டெக்கான் கிரானிக்கல்’, 02.10.2017
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.
No comments:
Post a Comment