Tuesday, October 17, 2017

காக்கிகளை ஆட்டுவிப்பது காவிகளா?

பாஜக ஆளும் அரியானா  மாநிலத்தில் பரிதாபாத் பகுதியில் அய்ந்துபேர்மீது பசு மாட்டிறைச்சியை வைத் திருந்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில்  பசுப்பாதுகாவலர் கள் என்போர், தாக்குதலை நடத்தினார்கள். அதற்கு அடுத்த நாளிலேயே பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் பசுப்பாதுகாப்பு என்கிற பெயரால்,  இசுலாமியக் குடும்பத்தினரிடமிருந்து 51 பசு மாடுகள் பறிக்கப்பட்டு, கோசாலைக்குக் கொடையாக இந்துத்துவாவாதிகளால் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின்  ஆல்வார் பகுதியில் பசு மாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்து வருகின்ற விவசாயி சுப்பா மேவ் கான். இவர் இசுலாமியர் என்பதால், அப்பகுதியில் உள்ள இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த வர்கள் அவருக்கு எதிராக காவல்துறையினரிடம் பசுப் பாதுகாப்பு என்கிற பெயரில் புகார் கொடுத்தார்கள்.
பசுப்பாதுகாப்பு என்பதன் பெயரால், ஆறு மாதங் களுக்கு முன்பாக பெக்லுகான் எனும் பால¢ பண்ணை விவசாயி இந்துத்துவா வன்முறையாளர்களால் தாக்கிக் கொல்லப்பட்டார். தற்போது, சுப்பாமேவ்கான் (வயது 45) என்பவர் பண்ணையிலிருந்த 51 பசு மாடுகளை இந்துத் துவா தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாக காவல்துறை யினரையும் இணைத்துக்கொண்டு பறித்துச் சென்று, பசுக் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
3.10.2017 அன்று முதல் கிஷான்கார் பாஸ் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பசு மாடுகளை மீட்டுக் கொடுப் பதற்கு தொடர்ச்சியாக கிராமத்தினர் முயற்சிகளை செய்து வருகின்றனர்.
சுப்பா மேவ் கான் மற்றும் அவர் மகன் நஸ்ருகான் ஆகியோருக்கு உரிமையான பசு மாடுகளை வலுக்கட் டாயமாக பறித்து காவல்துறையினரின் துணையுடன் இந்துத்துவா தீவிரவாதிகள் பாம்போரா கோசாலைக்கு அளித்துள்ளனர்.
பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுவரும் விவசாயி சுப்பா மேவ் கான் கூறுகையில், “நாங்கள் பசு மாடுகளைச் சார்ந்து வாழ்ந்து வருகிறோம். பால் உற்பத்தி செய்து விற்றுவருவதுதான் எங்களின் தொழிலாக உள்ளது. காவல்துறையினருடன் வந்து எங்கள் பசு மாடுகளை  அவர்கள் கொண்டு சென்றுவிட்டார்கள்’’ என்று புகார் கூறினார்.
இதில் மேலும் கொடுமை என்னவென்றால்,
பசு மாடுகளைப் பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல், பசு மாடுகளைக் கடத்துவதாக வழக்கு  தொடரப்படும் என்றும் இந்துத்துவா வன்முறையாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும்  மேவ் கானின் குடும்பத்தினர் கதறுகின்றனர்.
சுப்பா மேவ் கான் குடும்பத்தினருக்கு ஆதரவாக கிராமத்தினர் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இது வரவேற்கத்தக்கது.
இந்துத்துவாவாதிகள்மீது ஊர்மக்கள் வெறுப்புக் கொள்ள இதுபோன்றவை போது மானவையே!
சுப்பாமேவ் கான் ஒரு விவசாயி, அவர்மீது பசுப் பாது காவலர்கள் என்கிற பெயரில் தவறாக குற்றம் சுமத்து கின்றனர் என்று மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்துமூலமாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கிஷான்கார் காவல்நிலையம், சார்ஆட்சியர் அலுவல கத்திலும் தம்முடைய கால்நடைகளை மீட்பதற்காக மனு கொடுத்து அலைந்துகொண்டுள்ளார். ஆனாலும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பசு மாடுகளை கோசாலைக்கு கொண்டு சென்றதில் காவல்துறையினர் தங்களின் பங்கேதும் கிடையாது என்று தட்டிக்கழிக்கின்றனர்.
தற்போது, சுப்பாமேவ்  கான் பண்ணையில் உள்ள  17 கன்றுகளுக்கு பாலூட்ட பசு மாடுகளை மீட்க முடியாமல், கன்றுகளுக்கு புட்டிப்பால்  கொடுத்து வருகிறார்கள்.
பஞ்சாயத்துத் தலைவர் ஷெர் மொகம்மத் கூறும்போது, “முசுலீம் குடும்பத்தினர் பசு மாடுகளை மீட்பது என்பது மிகவும் கடினமானதாக உள்ளது. கான் பசுவதை செய் வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்படி அவர் பசுவதையில் ஈடுபட்டார் என்றால், கான் மீது குற்ற வழக்கு பதிவு செய்யாதது ஏன்?’’ என்ற நியாய மான வினாவை எழுப்பினார்.
கிஷான்கார் காவல்நிலைய அலுவலர் ரத்தோர் கூறும்போது, “கிராமத்திலிருந்த சிலரே, கானின் பசு மாடுகளை கிராம கோசாலைக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். தற்போது, கிராமத்தினரே, கான் பசுவதை செய்யவில்லை, பால் விற்பனை செய்து தொழில் செய்து வருகிறார் என்று மனு கொடுத்துள்ளனர்’’ என்றார்.
உண்மை என்னவென்று தெரிந்திருந்தும் காவல்துறை கைகட்டி சேவகம் செய்வது ஏன்?
காக்கிகளை ஆட்டி வைப்பது காவிகளாக உள்ள மாநிலத்தில் என்னதான் நடக்காது?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...