Thursday, November 10, 2016

‘‘காகித ஓடம் கடல் அலை மேலே...!''

இம்மாதம் (நவம்பர்) 8 ஆம் தேதி இரவு மத்திய அரசின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய திடீர் உரை, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு செல்லாது; நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம்.  (கிஜிவி) வங்கி வசதிகள் இயங்காது; நாளை (9.11.2016) வங்கிகள் இயங்காது. அதற்கு மறுநாள் முதல் இயங்கும்.
நாளை (10.11.2016) பழைய இந்த நோட்டுகளை, வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்; நேற்றுவரை பெட்ரோல் பங்குகள், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களில் பழைய நோட்டுகளை - இந்த இடைக்காலத்தில் கொடுத்து செலவு செய்தால், அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று அறிவித்தார்!
இந்த கருப்புப் பணவேட்டையில் திமிலங்கள் சிக்குமோ என்னவோ தெரியவில்லை; நடுத்தர ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், விவசாயத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மக்கள் இவர்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு இந்த ‘திடீர் அறிவிப்பு’ ஒரு பெரும் ‘சோதனையாகவே’ ஆகிவிட்டது!
நேற்று கையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு போய் சாப்பாட்டுக் கடையில் கொடுத்து, சிற்றுண்டியோ, சாப்பாடோ கூட சாப்பிட முடியாத நிலை; காரணம், கடைக்காரர்கள் வாங்க முடியாத நிலை. பணமிருந்தும் பட்டினி!
மருந்து கடைகளிலும்கூட பற்பல இடங்களில் தெளிவற்ற நிலை. சுங்கச் சாவடிகளில் ஏகப்பட்ட தகராறு. நல்வாய்ப்பாக இன்று முதல் இரண்டு நாள்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!
அழுகும் பொருள் விற்பனை யாளர்களுக்கு ஏகப்பட்ட நட் டம்; காரணம் கையில் பணம் உள்ளவர்களால் - 500 ரூபாய் நோட் டினைக் கொடுத்தால் ஏற்க மறுக்கும் நிலை இருப்பதால், விற்பனையோ இல்லை. மீன் விற்காமல் கண்ணீர் கடல்தான்!
கையில், பையில் உள்ள பணத் தால் பசி தீர்க்க முடியவில்லை; சில மணிநேரத்தில் அது வெறும் ‘காகிதமாகி’ மதிப்பிழந்து விட்டது!
குறுக்கு வழிகளிலோ, லஞ்சம் பெற்று கோடியாய் குவித்தவர்கள் நிலை எப்படியோ - அவர்கள் இதற் குள்ளாக மாற்றுவழி கண்டுபிடிக் காமலா இருப்பார்கள்!
என்றாலும், சில நாள்களுக்கு முன் நாம் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனை’ கட்டுரையில் ‘பணத்தால் எதனையும் வாங்க முடியுமா?’ என்று கேட்டிருந்தோம். பதில் கிடைத்துவிட்டது பார்த்தீர்களா?
அதற்குப் பிறகு நம் மக்கள் இப்போது ‘காகித ஓடம் கடல் அலைமேலே’ என்பதுபோல, கையில் பணம் இருந்தும், வயிற்றில் பசி, மனதில் வேதனை என்பனவற்றை அனுபவித்துக் கொண்டுள்ளனர்!
மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளும் பட்டினி கிடக்கிறார்கள் என்றவுடன், மனித நேயம் மிகுந்த திருநெல்வேலி உணவு விடுதியாளர் ஒருவர் அத்தகையவர்களுக்கு இலவசமாக கட்டணமின்றி உணவு அளித்துக் காப்பாற்றியுள்ளார் என்ற செய்தி மனிதநேயம் வற்றிப் போகவில்லை என்பதை உலகுக்குத் துல்லியமாய் உணர்த்தியது!
இதற்கிடையில், நேற்றுமுன்தினம் 8 ஆம் தேதி விடிவிடிய நகைக் கடைகளில் இடையிலாத வியாபாரம் - தங்கம் விலை திடீர் ஏற்றம்!
அப்போது பொன் மேலும் மின் னியது; பணம் சிறுத்தது, சிணுங்கியது!
ஒரு சில மணிநேரத்தில், மக்கள் பொருளாதார ‘சூறைப்புயலில்’ சிக் கியதுபோல் உணர்ந்த நிலை!
பின்னால் ஏற்படப்போகும்  ஆரோக்கியத்துக்கு இப்போது இத்தகைய பொருளாதார ‘விக்கல்கள்’ தவிர்க்க இயலாதவை என்று பொரு ளாதார நிபுணர்கள் அலசி ஆராய்ந்து கூறினாலும், அன்றாடத் தொழில் வருவாயில் வாழும் அடிமட்ட மக்கள் - திடீர் என்று பணம் வெற்று காகிதமாய் மதிப்பிழந்து விட்டதே என்று அவலத்தில் சிக்கி அழுது கொண்டே கூறுகிறார்கள்.
எப்படியானாலும், பணத்தைச் சேர்த்துக் குவித்து, கணக்கில் காட்டாத சுறாக்களுக்கும், திமிலங்களுக்கும் சரியான வலையாய் அமைந்தால்தான் எண்ணிய இலக்கை எட்ட முடியும்!
இடையில் சிக்கி அவதியுறும் நடுத் தட்டு மக்கள் கடல்தான் எப்போதும் போல்! உ.பி.யில் நோட்டு எரிப்பாம்!
என்ன உலகம்! எனவே, குறிக் கோள் இன்றி பணம் பணம் என்று அலையாதீர்! பிறகு இப்படி பணத்திற்கு திடீர் மாரடைப்புபோல் ஏற்பட்டால், அலறாதீர் என்பதே இந்த பணத்தாக்குதல் மூலம் கற்றுக் கொடுக்கப்படும் பாடமாகும்!
புரிந்துகொள்ளுவோமாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...