Saturday, July 2, 2016

மதக் கலவரத்திற்கு கொம்பு சீவும் சங்பரிவார்க் கும்பல்

மேற்கு உத்தரப்பிரதேசம் கைரானா வில் இந்துக்கள் விரட்டப்படுகின்றனர் என்று போலியான செய்தியை பரப்பி இரு சமூகத்தினருக்கிடையே பதற்றத்தை ஏற் படுத்திய பாஜக, இந்துக்களின் கணக் கெடுப்பு நடத்த மாநில பாஜக மற்றும் பஜ்ரங்தள், விஎச்பி மற்றும் விஜய வாஹினி அமைப்புகளுக்கு உத்தரவிட்டிருந்தது, இதனை அடுத்து கைரானாவில் இந்து மக்கள் கணக்கெடுப்பை நடத்திய காவி அமைப்பினரில் 20க்கும் மேற்பட் டோரை உத்தரப்பிரதேச மாநில காவல் துறை கைது செய்தது.

உத்தரப்பிரதேச மாநிலம், கைரானா வில் சில குடும்பங்கள் தொழில் ரீதியாக வும், பிழைப்பு தேடியும் இடம் பெயர்ந்துள் ளனர். இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி இஸ்லாமி யர்களின் மிரட்டலால் இந்துக்கள் இடம் பெயர்ந்து வருவதாக போலி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு அமைத்த குழுக்கள் உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்தனர்.

ஆனால் இந்த விவகாரத்தை தேர்தல் ஆதாயம் தேடும் விதமாக மாற்ற உத்தரப் பிரதேசம் முழுவதும் இந்துக்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை வைத் தனர். மேலும் டில்லியில் உள்ள பாஜக தலைமை உத்தரப்பிரதேச பாஜகவின ருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது, அதில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்துக்களை சந்தித்து அவர்கள் குறித்த விவரங்களை திரட்டுங்கள் என்றும் துணைக்கு இந்துத்துவ அமைப்பு களை அழைத்துக் கொள்ளலாம் என்று விரி வாக கூறப்பட்டிருந்தது.

இதனால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட் டுள்ளது, இந்த நிலையில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மதுரா, ஆக்ரா, கைரானா, பைசாபாத், போன்ற நகங்களிலும் வடக்கு மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களிலும் 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது.

தடை உத்தரவு அமலில் இருக்கும் போது இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே, மாநிலத் தலைவர் ஞானேந்திர பால், மாநில துணைத் தலைவர் சச்சின் ஷர்மா, அலிகர் மண்டல பஜ்ரங் தள் தலைவர் வீர் சிங் உள்ளிட்ட 6 பேர் தலைமையில் சுமார் 20-க்கும் மேற் பட்ட இந்துத்துவ அமைப்பினர் ஷாம்லீ மாவட்டத்தில் உள்ள கைரானாவிற்குச் சென்றனர். இந்நிலையில் தடை உத் தரவை மீறி அங்கு சென்றதாக இந்துத்துவ அமைப் பினர் அனைவரும் கைது செய்யப்பட்ட தாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய் பூஷன் தெரிவித்தார்.

உ.பி. மாநில தேர்தலுக்கு முன், மதக் கலவரத்தை உண்டாக்கியே தீருவது என்ற தீவிரத்தில் இருக்கிறது. சங்பரிவார் கும்பல் என்பது மட்டும். உண்மை, உண்மையே!
- கருஞ்சட்டை


.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...