Sunday, May 8, 2016

தமிழ்நாடு முதல் அமைச்சரை நோக்கி சில வினா கணைகள்???


- மின்சாரம்

1) ஒரு ஜனநாயக நாட்டில் மக்களைச் சந்திக்க இயலாமல் அந்தப்புரத்தில் இருப் பது ஏன்?

2) ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் ஹெலிகாப்டரில் வந்து ஓட்டுகளைக் கேட்பதற்கு வருவது ஒரு வகையான மேல் தட்டு முதலாளித்துவ மனப்பான்மை அல்லவா?

3) கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் வாரம் ஒரு முறை செய்தியாளர் களைச் சந்திப்பேன் என்றவரின் வாக்குறுதி என்னாயிற்று? ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடகங்களை சந்திக்க மறுப்பது - அச்சத்தினாலா? அகந்தையினாலா? மாறு பட்டு எழுதும், செய்தி வெளியிடும் ஊடக வியலாளர்கள் மீது எந்த ஆட்சியிலும் இல்லாத எண்ணிக்கையில் வழக்குத் தொடுப்பது பேச்சுரிமைக்கும், கருத்துரி மைக்கும், எதிரானது அல்லவா?

4) தலைநகரத்திலும், தூத்துக்குடி, நெல்லைப் பகுதிகளிலும் பெரு வெள்ளம் சூழ்ந்து மக்கள் தாங்க முடியாத பெரும் சங்க டத்தில் மூழ்கி  தத்தளித்தபோதுகூட மக் களின் துயர் துடைக்க நேரில் வராதது ஏன்?
பெயர் அளவிற்குச் சென்னையில் தமது தொகுதியான இராதாகிருஷ்ணன் நகருக்கு மட்டும் வந்த நேரத்தில்கூட பயணம் செய்யும் தனது வாகனத்தை விட்டுக் கீழே இறங்கி மக்களின் குறைகளைக் கேட்காதது ஏன்? ஏன்? 

இரட்டை விரலைக் காட்டி இரட்டை இலை சின்னத்தை நினைவூட்டியது ஏன்? எருது புண் காக்கைக்குத் தெரியுமா?

5) கட்சியின் அலுவலகத்திற்குக் கட்சிப் பொதுச் செயலாளர் செல்லுவதுகூட அதி சயமாகவே கருதப்பட்டு, வாண வேடிக்கை கள், மேளதாளங்கள் வைத்து வரவேற்பது விலா நோக சிரிக்க வைக்கும் கோமாளித் தனம் அல்லவா?

6) கட்சிக்காரர்களை அவர்கள் அமைச் சர்களாக இருந்தாலும் கூனிக் குறுகிக் காலில் விழச் செய்து புன்முறுவல் பூப்பது பூர்ஷ்வாத்தனம் அல்லவா?

7) தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பொழுதுகூட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக்கூட மேடையில் தன் னோடு சமமாக அமர அனுமதிக்காமல், மேடைக்கும் கீழே உட்கார வைப்பது - பார்ப்பனீய வருணாசிரமத் தன்மைப்படி முகத்தில் பிறந்தவர் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்னும் நவீன வரணாசிரம வடிவம் தானே?

8) மத்திய அமைச்சராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அருணாசலம் அவர்களை தான் பயணம் செய்த விமானத்தில் பயணிக்கக் கூடாது என்ற அந்தத் தீண்டாமை மனப்பான்மை இன்னும் தொடர்கிறது என்று கருதலாமா?

9) 2011இல் ஆட்சிக்கு வந்த போது திமுக ஆட்சி ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் வைத்துவிட்டுச் சென்று விட்டதாகக் குற்றச் சாட்டிய முதல் அமைச்சர் ஜெயலலிதா இப்பொழுது நான்கரை லட்சம் கோடி ரூபாய்க் கடன் வைத்திருப்பது எந்தவகையி லான ஆட்சித் தர்மம் - ஆட்சி நிர்வாகம்?

10) ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டை  மின்மிகு மாநிலமாக மாற்று வோம் என்று உறுதியளித்தாரே ஜெய லலிதா - கடந்த அய்ந்து ஆண்டுகளில் ஒரே ஒரு யூனிட் மின்சாரத்தையாவது புதிதாக உற்பத்தி செய்ததுண்டா? 300 மெகாவாட் திறன் கொண்ட பத்து சோலார் மின்சார மய்யங்களை அமைக்கப் போவ தாக ஜெயலலிதா வாக்குறுதி அளித்தாரே - அதனை நிறைவேற்றியதுண்டா?

12) தமிழ்நாடு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் இதுவரை 137 அறிவிப்புகளைத் தெரிவித்தாரே - அந்த அறிவிப்புகளில் எத்தனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட் டுள்ளன? 137 அறிவிப்புகளுக்கும் தேவை யான நிதி ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 196 கோடி ரூபாய்க்கான வழி என்ன? ஏற் பாடுதான் என்ன?   செயல்படுத்த முடியாது என்று தெரிந்திருந்தும் சட்டமன்றத்தில் அறிவிப்பது யாரை ஏமாற்றிட?

13) தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழ் அறிஞர்கள் 1921களில் கூடி முடிவெடுத்த ஒன்றை திமுக ஆட்சி நிறைவேற்றிக் கொடுத்ததை மறுபடியும் பழைய பத்தாம்சாலி சமஸ்கிருத ஆண்டுப் பெயர்களைக் கொண்ட சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றியதன் மூலம் முதல் அமைச்சர் ஜெயலலிதா பார்ப்பனீய சிந்தனையோடு தான் செயல்படுகிறார் என்று கருதலாமா? திராவிடப் பண்பாட்டுக்கு எதிரானவர் என்று பிரகடனப்படுத்தலாம் அல்லவா?

14) அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைச் சிதைத்ததும், புதிதாகக் கட்டப்பட்ட சட்டமன்ற அலுவ லகத்தை மருத்துவமனையாக மாற்றியதும், துறைமுகம் முதல் மதுரவாயலுக்கு இடை யிலான பறக்கும் பாலம் - திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக  முடக்கியதும் சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுத்ததும், மக்கள் நலனைவிட திமுக மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் வன்மம்தான் ஜெயலலிதாவை ஆட்டிப் படைக்கிறது என்றும் சொன்னால் அது தவறா?

15) ஆட்சி என்பது அய்ந்தாண்டு களுக்கு ஒரு முறை மாறக் கூடிய வாய்ப் புள்ளது என்பது அரசியலில் பாலபாடம் - புது ஆட்சி என்பது பழைய ஆட்சியின் தொடர்ச்சியே! உண்மை இவ்வாறு இருக்க தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அவற்றை எல்லாம் முடக்குவது - ஆட்சி  அமைப்பு முறைப் பண்புக்கு விரோதமானது என்ற ‘அரிச்சுவடி’ கூடத் தெரியாதவர்தான் ஜெயலலிதா என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும்? வன்மம், காழிப்புணர்ச்சி என்பவை ஜெயலலிதா அவர்களின் உடன்பிறப்பு என்று கருதலாமா?

16) சென்னை - கன்னியாகுமரி கடலோர சாலைத் திட்டம்,  10 ஆடை அலங்காரப் பூங்காக்கள், விவசாயிகளைப் பங்குதாரர் களாகக் கொண்ட ஆறு அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நீதிமன்றங் களில் தமிழ், தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறை வேற்றாமல் வாக்குக் கேட்டு வரத் தகுதி உண்டா?

17) ஊழல் வழக்கில் சிறை சென்றதைத் தவிர மக்கள் பிரச்சினைக்காகப் போராடி சிறை சென்றதுண்டா?

18) அண்ணா பெயரையும், ‘திராவிட’ இனப்பண்பாட்டுப் பெயரையும் கட்சியில்  வைத்துக் கொண்டு, யாகம் நடத்துவது, மண் சோறு சாப்பிடுவது என்பது போன்ற மூடநம்பிக்கைகளின் வழியாக கட்சியையும், ஆட்சியையும் நடத்திச் செல்லுவது அடிப்படைக் கொள்கைக்குத் துரோகம் அல்லவா?

19) தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு வெளியில் வந்து அவர்தம் சிலைக்கு மாலை அணிவிக்க மறுப்பது ஏன்? அவரின் நினைவு நாளிலும் மரியாதை செய்யாதது ஏன்? ஏன்?? ஏன்???

20) திராவிட இயக்கத்தில் ஆரிய ஊடுருவல் என்பது இவற்றின் மூலம் தெளி வாக தெரிகிறதா இல்லையா? முடிந்தால் முதல் அமைச்சர் அவர்களே, அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளரே பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!!




 
+இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...