Total Pageviews

Monday, November 9, 2015

தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை கலைஞானி கமலகாசன் கருத்துரை

நான் கடவுள் மறுப்பாளனே!
மாட்டுக் கறி சாப்பிடுவது அவரவர் விருப்பம்
அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை
தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை கலைஞானி கமலகாசன் கருத்துரை


சென்னை, நவ.8_ எந்த உணவை யார் சாப் பிடுவது என்பது தனிப் பட்ட உரிமை - _ அதில் மற்றவர்கள் குறுக்கிட முடியாது என்றார் நடிகர் கமல காசன். நடிகர் கமல்ஹாசன் தனது 61ஆ-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலை யரங்கில் ரசிகர்களுடன் நேற்று கொண்டாடி னார். நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தி யவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன் றவற்றை அவர் வழங் கினார். விழாவில், கமல் ஹாசன் பேசியதாவது:-
சாமி சிலை பயன் தராது
நாம் ஆண்டுதோறும் நற்பணிகள் செய்து வருகி றோம். அதனை நினை வூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது. இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன் படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தி யும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும்.
எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு
எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசி னால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது.
தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக் கிறது. ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன்? என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக் கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல் லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக் கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்கா தீர்கள்.
பகுத்தறிவாளன்
என் பகுத்தறிவை கேலி செய்கிறார்கள். சொர்க்கம், நரகம் இரண்டையும் இந்த பூமியிலேயே அனுபவிக் காமல் போகமாட்டேன். தெய்வங்கள் அவரவர் பாக்கெட்டில் இருக்கட் டும். மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். என் சகிப்புத்தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். நான் நாத்திகன் அல்ல. நாஸ்தி, ஆஸ்தி இரண்டும் வடமொழி சொற்கள். நான் பகுத்தறிவாளன்.
மந்திரசக்தி உள்ள எவரேனும் இதுதான் தெய்வம் என்று என் முன் நிறுத்தினால் நான் கை குலுக்கி வரவேற்பேன். கும்பிடமாட்டேன். அந்த தெய்வத்திடம் சில கேள்விகள் கேட்பேன். சுனாமி வந்தபோது எங்கு இருந்தீர்கள்?, ஏழ்மை வந்தபோது எங்கு இருந் தீர்கள்?, ஆண்-பெண் என்ற பாலினம் உங் களுக்கு தேவையா?, வட மொழி யில் மட்டும்தான் பேச முடியுமா?, எனது தமிழில் ஏன் பேசவில்லை என் றெல்லாம் கேட்பேன்.
இதைத்தான் சாப்பிட வேண்டும் என்பதா?
மாட்டுக்கறி சாப்பிடா தீர்கள் என்று கூறு கிறார்கள்.  உணவுகளை சாப்பிடுவது அவரவர் விருப்பம். அதை ஏன்? தடுக்கிறீர்கள். இதை, இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் எப்படி? உணவு பட்டியல் கொடுக்கலாம். மாடுகளை விட பூச்சிகளை சாப்பிடு வது நல்லது என்று விஞ்ஞானிகள் சொல் கிறார்கள். 30 வருடங் களுக்கு பிறகு மனிதன் பூச்சிகளை சாப்பிடும் நிலை வரலாம். அப்போது பூச்சி சாமியார்கள் தோன்றி பூச்சிகளை சாப்பிடக் கூடாது என்று தடுப்பார்கள்.
தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை
சமுதாய தெருவில் அசுத்தங்கள் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை சுத்தம் செய்ய எந்த கட்சி அழைத்தாலும் ஓடி வருவேன். பாகிஸ்தான் பிரிந்தபோதே நமது சகிப்புத்தன்மை போய்விட்டது. மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது. தேச பக்தியை தாண்டி உலக பக்தி நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று 2 ஆயிரம் ஆண்டிற்குமுன் தமிழ் புலவன் சொன்னதை உலகத் துக்கு காட்டவேண்டாமா? நான் கோபமாக பேசுவதாக கருதலாம். என் நேர் மையை சந்தேகித்ததால் தான் இதையெல்லாம் சொன்னேன். எனக்கு அக்னி பரீட்சை வைக்க முடியாது. அதை சீதைக்கு வைத்துக்கொள்ளுங்கள். தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை. என் உறவுக் காரனை, அசுரனை கொன் றதற்காக அந்த பண்டி கையை கொண்டாடு கிறார்கள்.  இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: