Monday, November 9, 2015

மோடியின் இந்துத்துவா பாஜகவுக்கு மரண அடி! வென்றது சுயமரியாதைக் கூட்டணி



மோடியின் இந்துத்துவா பாஜகவுக்கு மரண அடி!
வென்றது சுயமரியாதைக் கூட்டணி


பாட்னா, நவ.8_  பிகார் மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தல் 5 கட்டங் களாக நடைபெற்று முடிந்து இன்று (8.11.2015) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்துள்ளன.
பிகார்தேர்தல் முடிவு களின்படி, மோடியின் இந்துத்துவா பாஜகவுக்கு மரண அடி விழுந்துள்ளது. லாலு பிரசாத் யாதவ் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதீஷ் குமார் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மாபெரும் கூட்டணியை சுயமரியா தைக் கூட்டணி என்று அறிவித்து தேர்தலில் களம் கண்டனர்.
பிகார் தேர்தலைப் பொருத்தவரையில் சமூக நீதிக்கு ஆதரவு அணி, எதிர்ப்பு அணி என இரண் டாக பார்க்கப்பட்டது.
பாஜகவை இந்துத்துவா நோக்கில் வழிநடத்தக் கூடிய அமைப்பாகிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடஒதுக் கீடு குறித்து மறுஆய்வு செய்யவேண்டும் என்று பேசியதால் பிகார் தேர்தல் களத்தில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் மோகன் பகவத் கருத்து பாஜகவின் கருத்து அல்ல என்று கூறுமள விற்கு சென்றது.
காட்டாட்சி என்று கூறியவர்களுக்கு பதிலடி யாக, வருணாசிரம முறை களால், ஜாதீய பாகுபாடு களால் பெருமளவில் பாதிக்கப்பட்ட வரலாறை மீண்டும் பிகார் மக்களுக்கு நினைவூட்டினார் லாலு பிரசாத். பார்ப்பனர், பார்ப் பனர் அல்லாதார் பிரச் சினை பிகார் தேர்தலில் முக்கிய இடத்தைப் பெற் றது. அதன் விளைவாகவே சுயமரியாதைக் கூட்டணி மக்களிடத்தில் பெருத்த ஆதரவைப் பெற்றது.
மத்தியில் 2014 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிப் பதற்காக பாஜக, மோடி அளித்த வாக்குறுதிகள் வெற்று வார்த்தைகளாகி விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி யின் சட்டப்பேரவை பதவிக்காலம், நவம்பர் 29ஆம் தேதிவரை இருந்த போதிலும் 9.9.2015 அன்று பிகார் மாநிலத் தேர்தல் ஆணையர் தேர்தல் அறி விப்பை அறிவித்தபோது, பிகார் முதல்வரான நிதிஷ் குமார் அதை ஏற்று, மகா கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண் டார்.
நிதிஷ்குமார் அமைச்சர வையில் முதல் அமைச்ச ராக இருந்த மஞ்சியை தன் வசப்படுத்திக்கொண்டு பாஜக சதிவலையை வெகு வாக பின்னிக்கொண்டு தேர்தலை சந்தித்தது. கூட் டணிக்குள் தொகுதி பங்கீடுகளில் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான கட்சியுடன் மஞ்சியின் அமைப்பை மோதவிட்டு குளிர்காய்ந்த நிலைகளும் பாஜகவின் ஆட்டங்களில் கூட்டணிக்குள்ளேயே அரங்கேறியது.
பீகார் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என்றும், முதல் கட்டத் தேர்தல் அக்டோபர் 12ஆம் தேதி தொடங்குவதாகவும் தலைமை தேர்தல் ஆணையர்  நஜிம் ஜைதி அறிவித்திருந்தார். அதன் படி, முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு அக்டோ பர் 12ஆம் தேதியிலும், இரண்டாம் கட்டமாக 32 தொகுதிகளுக்கு அக்டோ பர் 16ஆம் தேதியிலும், 3ஆம் கட்டமாக 50 தொகுதிகளுக்கு அக்டோ பர் 28ஆம் தேதியிலும், 4ஆம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதியிலும், 5ஆம் கட்டமாக 57 தொகுதி களுக்கு நவம்பர் 5ஆம் தேதியிலும் 5 கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற 5 கட்டத் தேர்தல்கள் நடைபெற்று, வாக்கு எண் ணிக்கை இன்று நடை பெற்று முடிவுகள் வெளி யாக உள்ளன.  மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 1,55,43,594 ஆவர். 58 பெண்கள் உள்பட 867 பேர் போட்டியிட்டனர்.
தேர்தலையொட்டி 1,033 கம்பெனி கொண்ட மாநில காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விவரங்கள் வெளியாகி உள்ளன.
அய்க்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரசு கட்சி கூட்டணியினர் 165 இடங்களில் நிதிஷ் லாலுவின் சுயமரியாதைக் கூட்டணி முன்னணியில் உள்ளது.
பாஜக கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வான் லோக்ஜனசக்தி, பாஜக கூட்டணியில்  66 முன்னணியில் உள்ளது.
சுயேச்சைகள் உள்பட மற்றவர்கள் 8 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.

பாரதீய ஜனதா தோல்வியை ஏற்றது
வாக்கு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா 91 தொகுதிகள் வரையில் முன்னிலை வகித்துவந்த நிலையில், தற்போது 75 தொகுதியாக குறைந்துவிட்டது. இந் நிலையில் பாரதீய ஜனதா தனது தோல்வியை ஏற்றுக்கொண்டது.
மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றுகூறிய பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ்,  தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம் என்று தெரிவித்தார்.
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார். நாளை மதியம் 12 மணியளவில் கூட்டமானது நடைபெற உள்ளது. கூட்டத்தின் போது பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீகார் மக்களுக்கு நிதிஷ் குமார் நன்றி: வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றிக்கு கெஜ்ரிவால் வாழ்த்து
பீகார் மாநில முதல் அமைச்சராக மீண்டும் பதவியேற்கவுள்ள நிதிஷ் குமார் சட்டசபையில்
தேர்தலில் தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு தெரிவித்து வாக்களித்த பீகார் மக்களுக்கு முதல் அமைச்சர் நிதிஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளும் மிகவும் உன்னிப்பாக கவனித்துவந்த இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வை வீழ்த்தி மூன்றில் இரண்டுபங்கு தொகுதிகளை கைப்பற்றியுள்ளதால் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றிக்காக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு டில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பண மூட்டைகளை கொள்கை வென்றது: பீகார் வெற்றி பற்றி சரத் யாதவ் கருத்து
பீகாரில் மீண்டும் அய்க்கிய ஜனதா தளம் ஆட்சி அமைந்து, நிதிஷ் குமார் மீண்டும் முதல் அமைச்சராக பதவி ஏற்கும் சூழல் இன்றைய தேர்தல் முடிவுகளால் உருவாகிவரும் நிலையில் பண மூட்டைகளை கொள்கைகள் வென்றுள்ளதாக அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த வெற்றி குறித்து தலைநகர் டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் சரத் யாதவ், ஒருபுறம் பண மூட்டைகள், மற்றொருபுறம் கொள்கைகள் என பீகாரில் நடந்து முடிந்தது மிக கடுமையான போராட்டம். தற்போது பண மூட்டைகளை கொள்கைகள் வெற்றி கொண்டுள்ளன. 150-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம் என கூறியுள்ளார்.
தோல்விக்கு பிரதமர் மோடி பொறுப்பு ஏற்கவேண்டும் -சிவசேனா நிதிஷ் குமாருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா பாராட்டிஉள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா கூட்டணி முன்னிலை பெற்று உள்ளது. பாரதீய ஜனதா கூட்டணி பின்னடைவை சந்தித்து உள்ளது. அய்க்கிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியானது 155 தொகுதிகளிலும், பாரதீய ஜனதா  கூட்டணி 11 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று உள்ளது. மற்றவை 11 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மகா கூட்டணி பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளநிலையில் மீண்டும் நிதிஷ் குமாரே ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மகா கூட்டணியில் இடம்பெற்று உள்ள அய்க்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின்  தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். பாரதீய ஜனதா தோல்வியை தழுவியநிலையில் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா, நிதிஷ் குமாரை பாராட்டிஉள்ளது. சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத் பேசுகையில், இது நிதிஷ் குமாருக்கு மிகப்பெரிய வெற்றி ஆகும், அவர் அரசியல் ஹீரோ என்பது வெளிக்காட்டப்பட்டு உள்ளது.
நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள், நாட்டின் எதிர்கால அரசியலுக்கு இந்த முடிவானது திருப்புமுனையாக அமையும். என்று கூறினார். காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது அக்கட்சியின் தலைவர் சோனியா ஜி பொறுப்பு ஏற்றார், அதுபோல் பீகாரில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடி பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் சஞ்சய் ராவுத் கூறிஉள்ளார்.
மம்தா பானர்ஜி பாராட்டு
பீகார் தேர்தலில் வெற்றி பெற்று உள்ள மகா கூட் டணிக்கு மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். நிதிஷ்ஜி, லாலுஜி மற்றும் உங்களுடைய மொத்த குழு விற்கும் என்னுடைய வாழ்த் துக்கள். என்னுடைய பீகார் மாநில சகோதர மற்றும் சகோ தரிகளுக்கு வாழ்த்துக்கள்.... சகிப்புத்தன்மைக்கு கிடைத்த வெற்றியாகும், சகிப்புத்தன்மையின்மைக்கு கிடைத்த தோல்வியாகும். என்று மம்தா பானர்ஜி கூறிஉள்ளார்.
பீகார் தேர்தலில் லாலு பிரசாத், நிதிஷ்குமார், காங்கிரசு இணைந்த மகா கூட்டணியில் அ.ஜ.தளம் 101 தொகுதிகளில் போட்டியிட்டு 75 இடங்களிலும், ரா.ஜ.தளம் 101 தொகுதிகளில் போட்டியிட்டு 69 இடங்களிலும், காங்கிரசு கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களிலும், மொத்தம் 167 இடங்களில் முன்னிலையில் உள்ளன. பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 67 இடங்களிலும் மற்றவை 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...