Monday, November 9, 2015

பீகார் தேர்தல் - மக்கள் தந்த மரண அடி


பீகார் மக்களுக்கு எந்த வகையில் வணக்கம் சொல்வது. என்ன மாதிரியான தீர்ப்பை, மோடிக்கும் அவரது பரிவாரங்களுக்கும் எதையோ எடுத்து அடித்தாற்போல சொல்லிவிட்டார்களே.
என்ன மாதிரியான தருணம்? இந்த தேர்தலில் மோடி வெற்றி பெற்றிருந்தால், என்ன ஆகியிருக்கும்? சற்று நினைத்துப் பார்த்தால், பல நாட்களுக்கு நாம் தூங்க மாட்டோம். இங்கு தமிழ் நாட்டில், வீட்டில் முடங்கிக் கிடந்த நோஞ்சான் பயல்களெல்லாம், சமூக ஆர்வலர்னு சொல்லிக் கிட்டு, தொலைக்காட்சியில் வந்து அலப்பறை செய்து நம்ம சாகடித்திருப்பார்கள். இன்று தந்தி டிவி, ரங்கராஜ் பாண்டே எப்படி முகத்தை வைத்துக் கொண்டு நிகழ்ச்சி நடத்துறார்னு பார்க்கனும்.
பீகார் தேர்தலில் நிதிஷ்  -_ லாலு கூட்டணி வெற்றி பெற்றால், பாகிஸ்தானில் தீபாவளி கொண்டாடுவார்கள்னு, பாஜக தலைவர் அமித் ஷா சொன்னார். இப்ப பாகிஸ்தான் மட்டும் அல்ல; உலகமே கொண்டாடுது.
பீகார் தேர்தல், மாட்டுக்கறி சாப்பிடற வங்களுக்கும், சாப்பிடாதவங்களுக்கும் நடக்கிற தேர்தல்னு, பாஜக தலைவர் சுசில்குமார் மோடி. பீகார் மக்கள், எங்க வீட்டுலே என்ன சாப்பிடனும்னு நாங்க முடிவு எடுத்துக்குவோம்னு அறைஞ்சு சொல்லிட்டாங்க.
நிதிஷ் ஆட்சி வந்தால், இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் விழுக்காட்டிலிருந்து எடுத்து, இட ஒதுக்கீடு கொடுத்துடுவார். அதை நான் உயிர் கொடுத்து தடுப்பேன்னு, பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் சொன்னார். ஏன்னா, மோடி, மண்டல் பரிந்துரைக்காக போராடிய சமூகநீதிக் காவலர் இல்லையா? ஆனால் என்ன பண்றது? மக்களுக்கு இந்த தில்லாலங்கடி வேலை புரிஞ்சிடிச்சே.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீடு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
லாலு பிரசாத் தனது தேர்தல் பிரச்சாரத்தில், ஆர்.எஸ்.எஸ். குரு கோல்வார்கரின் சிந்தனைத் தொகுப்பு எனும் நூலை மக்களிடத்தில் காட்டி, இந்த கருத்தின்படி, ஆர்.எஸ்.எஸ். கும்பல், இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்பதை மக்கள் மனதில் பதியும்படி செய்து ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தை தோலுரித்துவிட்டார்.
நிதிஷ் குமார் தனது தேர்தல் பரப்புரையில், ஜெர்மனியில் நாஜி கும்பலையும், மோடி அரசின் செயல்பாட்டையும் திறம்பட வெளிக் கொணர்ந்தார்.
இவையெல்லாம், மக்களிடம் மோடி அரசின் செயல்பாட்டையும், எந்த நோக்கத்துக்காக, மக்க ளவைத் தேர்தலில் மோடிக்கு வாக்களித்தார் களோ, அதில் தாங்கள் ஏமாற்றுப்பட்டுவிட்டதாக கருதினர்.
இதன் விளைவுதான், பாஜகவிற்கும், மோடிக்கும் கிடைத்த மரண அடி.
நிதிஷ் _ லாலு கூட்டணியின் நோக்கம், பொது எதிரி, வலுவான மத்திய அரசின் அதிகாரத்தை கையில் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகளை நாடு முழுவதும் பரப்பிட முழுவேகத்துடன் மூர்க்கத்தனமாக வரும் நேரத்தில், அதனை தடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். தடுத்து நிறுத்தியதோடு, இங்கே உங்களுக்கு வேலையில்லை என்று மக்கள் இந்த நாசகாரக் கும்பலை விரட்டிவிட்டார்கள். இதற்காக, பீகார் மக்களுக்கு அனைத்து மக்களும் நன்றி சொல்ல வேண்டும்.
தீபாவளி என்பது நரகாசுரனை வதம் செய்த நாள். அதைக் கொண்டாட வேண்டும் என ஆரியர்கள் சொன்ன கதையை நம்பி பலரும் கொண்டாடுகிறார்கள். இந்த கதையை நான் ஏற்க வில்லை. ஆனால், இன்றைய பீகார் தேர்தல் முடிவு, உண்மையிலேயே நமக்கு புத்தாடை அணிந்து, வெடி வெடித்து கொண்டாட வேண்டிய நாள்.
2004-ல் நவம்பர் மாதம் அப்போதைய தீபாவளி முதல் நாள், காஞ்சி மடத்திலிருந்து ஓடிப் போன, ஜெயந்திர சரஸ்வதி, காஞ்சி கோவிலில் சங்கரராமன் கொலை வழக்கில் கைதான போது, தமிழ் நாட்டில் நாம் மகிழ்ச்சியாக கொண்டாடி னோமே. அதே போன்றும், அதைவிடவும் மகிழ்ச்சியாக இன்று கொண்டாடுவோம்.
பீகார் மக்களுக்கும், நிதிஷ்  லாலு  காங்கிரசு கூட்டணிக்கு வாழ்த்துகள். இந்த தேர்தல் பாஜக எனும் அரசியல் கட்சிக்கு மட்டும் எதிரானது அல்ல; அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் பாசிச ஆட்டத்திற்கு எதிரானது. இந்த அணுகுமுறை, வரும் தேர்தல்களில் இருந்தால், மோடி பரிவாரத்தின் கொட்டம் அடங்கும்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...