லக்னோ, நவ.6_ உத்தரப் பிரதேம், உத்தர கண்ட் ஆகிய மாநிலங் களில், வரும் 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தால், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் பகுஜன் சமாஜ் கட்சியி னர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அக்கட் சியின் தலைவர் என்று மாயாவதி அறிவுறுத் தினார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில, மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம், லக் னோவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாயாவதி பேசியதாக, அக்கட்சி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம், உத் தரகண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், மக்களைத் தவறாக வழி நடத்துவதற்கு அனைத்து விதமான இழிவான உத்திகளையும் எதிர்க் கட்சிகள் பயன்படுத்தக் கூடும். எனவே, எதிர்க் கட்சிகளிடம் இருந்து, குறிப்பாக, பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு களின் மத ரீதியிலான தூண்டல்களில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியி னர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்த லில், பாஜகவால் மக்கள் தவறாக வழிநடத்தப் பட்டிருந்தால், அது தேசிய ஜனநாயகக் கூட் டணிக்கு பலனளிப்பதாக இருக்கும்; ஆனால், அந்த மாநிலத்துக்கு அது, மிகப்பெரிய இழப்புக்கு காரணமாகிவிடும். அப் படியேதும் நடக்கவில்லை எனில், பாஜகவால் பீகா ரில் ஒருபோதும் ஆட்சி யமைக்க முடியாது. மேலும், தேர்தல் முடி வுகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு திருப்தியளிக்கும் விதமாகவும் இருக்கும் என்று மாயாவதி கூறிய தாக அந்த செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- “சகிப்புத்தன்மை இல்லாத அரசு!” குடியரசுத் தலைவரிடம் சோனியா புகார் மனு
- மத்திய அரசு வெளியிடும் தங்கக் கடன் பத்திரத்துக்கான விலை ஒரு கிராம் ரூ.2,684 என நிர்ணயம்
- பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் அரசு அதிகாரிகள் ஒரு மாதத்துக்குமேல் தங்கியிருந்தால் பணி நீக்கம் மத்திய அரசு புதிய விதிமுறை .
- வெளிநாட்டு சிறைகளில் 651 இந்திய மீனவர்கள் : மத்திய அரசு தகவல்
- ஆசிரியர்கள் இல்லாமல் கல்வி பெறும் அவல நிலை உச்சநீதிமன்றம் கண்டனம்
No comments:
Post a Comment