Saturday, November 21, 2015

பீகாரில் 5ஆவது முறை முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார்



பாட்னா, நவ.21  பீகாரில் 5ஆவது முறை முதல்வராக, நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். அவருடன் லாலுவின் இரு மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோர் உட்பட மாத்தம் 28 பேர் அமைச்சர் களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு ஆளுநர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழா வில் பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற் றனர். 
பீகார் சட்டப் பேரவை தேர்தலில் மகா கூட்டணியில் இடம் பெற்ற லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 இடங்களிலும், அய்க்கிய ஜனதா தளம் 71 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களிலும் வென் றன. மகா கூட்டணி மொத்தம் 178 இடங்களை கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது. இக்கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ்குமார் தான் முதல்வர் என ஏற் கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது.
அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவின் காந்தி மய்தானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் நிதிஷ் குமார் 5ஆவது முறை முதல்வராக பதவி ஏற்றார். அய்க்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தலா 12 பேரும், காங்கிரஸ் சார்பில் 4 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். ராஷ்ட்ரிய ஜனதளம் சார்பில் லாலுவின் இரு மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோர் அமைச்சர்களாக பதவிப் ஏற்றனர். 
இவர்களுக்கு ஆளுநர் ராம் நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவை முன் னிட்டு, பாட்னா காந்தி மய்தானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன.  பதவி ஏற்பு விழாவில் பங் கேற்க கட்சி பாகுபாடின்றி, அனைத்து கட்சி முக்கிய தலைவர்களுக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத் திருந்தார். நாடு முழுவதி லும் இருந்து முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மற்றும் பிற மாநிலங்களின் காங்கிரஸ் முதல்வர்கள் இதில் கலந்து கொண் டனர். முன்னாள் மத்திய அமைச் சர்கள் பரூக் அப்துல்லா, சரத் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  
மார்க் சிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூ னிஸ்ட் சார்பில் டி.ராஜா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோ ரும் கலந்து கொண்டனர். பா.ஜ.வுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிக ளும் ஒன்றாக திரண்டது போல் பீகார் பதவி ஏற்பு விழா காட்சியளித்தது. முக்கிய நிகழ்வுகள் காரண மாக பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார்.
நிதிஷ்குமாருக்கு மு.க.ஸ்டாலின் ஏலக்காய் மாலை அணிவிப்பு
பீகார் முதல்வராக நிதிஷ் குமார் நேற்று பதவி ஏற்றதும் அவருக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திமுக தலைவர் கலை ஞரின் வாழ்த்துச் செய்தி யையும் தந்தார். முன்ன தாக பீகார் மாநில முன் னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அய்க்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் சரத்யாதவ் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகி யோரை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உடன் இருந்தார். 
லாலு மகன் தேஜஸ்வி துணை முதல்வர்
நிதிஷ்குமாருக்கு அடுத்தபடியாக பதவி யேற்ற லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி துணை முதல்வராக்கப்பட் டுள்ளார். இவர் பீகார் சட்டப் பேரவை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...