Friday, October 9, 2015

மாட்டு இறைச்சி விருந்து: காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.வுக்கு அடி-உதை

மிருகமாகவே மாறி விட்டார்களா?
மாட்டு இறைச்சி விருந்து:  காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.வுக்கு அடி-உதை
சிறீநகர், அக். 9_ காஷ்மீர் மாநிலத்தில் மாட்டு இறைச்சிக்கும், பசுவதைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து நீதிமன் றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இதில் ஜம்மு நீதிமன்றமும், ஸ்ரீநகர் நீதிமன்றமும் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கின.
இதையடுத்து உச்சநீதி மன்ற முடிவுக்கு விடப் பட்டுள்ளது. வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மாநில அரசின் உத்தர வுக்கு 2 மாதத்துக்குத் தடை விதித்து உள்ளது. வழக்கு விசாரணை நிலு வையில் உள்ளது.
இந்த விவகாரத்தால் கடந்த சில நாட்களாக காஷ்மீர் சட்டசபையில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுயேச்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ரஷீத் நேற்றுமுன்தினம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் மாட்டிறைச்சி விருந்து கொடுத்தார். இதில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்தது. நேற்று காஷ்மீர் சட்ட சபை கூடியதும் சுயேச்சை எம்.எல்.ஏ.வின் செயலுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்து பேசினர். காரசார விவா தம் நடைபெற்றது.
அப்போது திடீர் என்று பா.ஜனதா எம்.எல். ஏ.க்கள், சுயேச்சை எம். எல்.ஏ. ரஷீத்தின் இருக் கையை நோக்கிச் சென்று அவரை சுற்றி வளைத்துத் தாக்கினார்கள். இதனால் சபையில் பரபரப்பு ஏற் பட்டது. உடனே சபை காவலர்கள் உள்ளே விரைந்து வந்தனர். அதற் குள் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரஷீத்தை மீட்டு காப்பாற்றினார்கள். இதன் காரணமாக சபை ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக ரஷீத் எம்.எல்.ஏ. கூறுகையில், நாம் எதை சாப்பிட வேண்டும் என்பது நமது விருப்பம். இதில் நீதிமன் றமோ, சட்டசபையோ அல்லது எந்த அமைப்பும் தடை விதிக்க முடியாது என்றார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...