Total Pageviews

Friday, October 9, 2015

நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டுவதேபி.ஜே.பி.யின் நோக்கமாக உள்ளது


நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டுவதே
பி.ஜே.பி.யின் நோக்கமாக உள்ளது

தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு படம் பிடிக்கிறது
லக்னோ, அக்.9 பிசாரா கிராமத்தில் நடந்த இந்துமதக் கும்பலின் வன் முறையாட்டமும் அத னால் உயிரிழந்த முதியவர் குறித்த செய்திகள் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தக் குழப்ப மான சூழ்நிலையை பாஜக தந்திரமாக அரசியலாக்கி, அதன் மூலம் லாபம் பார்க்க முயல்கிறது. 
அதனு டைய நோக்கம் உத்தரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலும் அதைத் தொடர்ந்து வர உள்ள சட்டமன்றத் தேர்த லில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற மட்ட மான அரசியல் லாப நோக்கமே இதன் பின்புலத் தில் உள்ளது என்று தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு படம் பிடித்துள்ளது.  மோடியின் தொகுதி யான வாரணாசியில் திங் களன்று (அக்டோபர் 5) விஷ்வ இந்து பரிஷத் மற்றும் சில உள்ளூர் காவி அமைப்புகள் இணைந்து நடத்திய கொலை வெறியாட் டத்தில் 26 பொதுமக்கள் காயமுற்றனர்.
கடந்த மாதம் விநாயகர் சிலை கங்கையில் தான் கரைப் போம் என்று கூறி ஊர் வலம் சென்றவர்களை நகர ஆட்சியாளர் கங்கையை மாசுபடுத்தவேண்டாம்; ஆகையால் நீங்கள் செயற் கையாக அமைத்துள்ள குளத்தில் கரையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தும், அதற்கு செவி சாய்க்காத காவி வன் முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் காவல் துறை யினர் உட்பட பலர் காய மடைந்தனர். சாமியார் என்ற பெயரில் வெறியாட் டம் நடத்திய காவி வன்முறைக்கும்பலை அடக்க காவல்துறை தடியடி நடத்தவேண்டி இருந்தது.
இதில் மடத் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர் கள் எல்லாம் பலத்த காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து வாரணாசி பதற்றமாகவே இருந்தது. இந்த நிலையில் தான் திங்களன்று பெரிய வன் முறை வெடித்தது. தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் கரைப்பு!
இதே உத்தரப்பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி கோண்டா என்ற நகரில் தடைசெய்யப் பட்ட பகுதிகளில் தான் விநாயகர் சிலையை கொண்டுசெல்வோம் என்று வன்மமாக கூறி, காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி, இஸ்லாமியர்கள் உள்ள பகுதியில் சென்று வன் முறையாட்டத்தில் ஈடுபட் டது. இந்துத்துவக் கும்பல் இந்த சம்பவத்தை தொடர்ந்து சில பாஜக உள்ளூர்த் தலைவர்கள் சமூகவலை தளத்தில் வதந்திகளைப் பரப்பியதால் ஆக்ரா மற் றும் சம்சாபாத் போன்ற இடங்களில் வன்முறை நடக்கும் சூழல் உருவானது. 
காவல்துறையினர் முன்னேச்சரிக்கையுடன் செயல்பட்டு வன்முறையைத் தடுத்தனர். வதந்தியைப் பரப்பிய பாஜக பிரமுகர் களைக் கைது செய்தனர். ஆக்ரா மாவட்ட பாஜக தலைவராக உள்ள அசோக் ரானா என்பவர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக சவுதிரி கலந்து கொண்ட ஒரு விழாவில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசி யுள்ளார். 
இவர் மீது பல் வேறு வழக்குகள் பதியப் பட்டுள்ளது. முக்கியமாக வதந்திகளைப் பரப்புவது அதன் மூலம் கலவரத்தை உருவாக்குவது என பல சம்பவங்களில் இவர் தொடர் புடையவர். ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டு பிறகு டில்லியின் தலையீட்டி னால் பிணையில் வெளி வந்துள்ளார். மேலும் உத்தரப்பிரதேச பாஜகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவனான கன்னூஜ் என்பவன் மீது மதக் கலவரத்தை தூண்டும் செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதியப்பட் டுள்ளன.
காவிஅமைப்புகள் மற் றும் பாஜக தலைவர்கள் இணைந்து மாநிலத்தில் தொடர்ந்து மதக்கலவரத் தைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் லாபம் பார்க்கிறார்கள் இவர்கள்; இரு மதத்தவர்களிடையே வன்முறையைத் தூண்டி விட்டு, அது குறையாமல் பார்த்துக்கொள்கின்றனர், என்பது மேலே தொடர்ந்து நடக்கும் வன்முறைச் செயல்கள் மூலம் தெரிய வருகிறது என லக்னோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுதிர் பன்வார் என்ற பேராசிரியர் தனது கருத்தாகக் கூறியுள்ளார்.
முசாபர் நகர் கலவர பாணியில்....
உண்மை என்னவென் றால், 2013 முசபர் நகர் கலவரம் மற்றும் அதன் பிறகு தொடர்ந்த வன் முறையாட்டங்கள் பாஜவின் அரசியல் லாபத்திற்காக நடைபெற்றது இது அனை வராலும் ஒப்புக் கொள்ள பட்ட ஒன்றாகும். 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உபியில் உள்ள மொத்த 80 தொகுதியில் 71 இடங்களை வென்றதும் இந்தக் கலவரத்தின் மூலம் தான் என்று தெரிந்த பிறகு, காவிக்கூட்டங்கள் வரும் 2017 சட்டமன்றத் தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடிக்க முசாபர் நகர் பாணியை இன்றும் தொடர்ந்து கடைபிடிக்கிறது.
உபி சமாஜ்வாடி அமைச்சர் ராஜேந்திர சவுதிரி கூறும் போது உள்ளூரில் இந்து முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை எளிதில் சிதைக்க என்ன வழிமுறைகள் உண்டோ அதை எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஆபத்தான ஒரு காலத்தை நோக்கி தள்ளப் பார்க்கின்றனர் என்றார்.      எந்த விலையும் கொடுப்பார்களாம்!
விஷ்வ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்த சரத் சர்மா என்பவர் கூறும் போது நாங்கள் ஆயிரம் ஆண்டுகளாக தொடந்து விநாயகர் சிலையை கங்கையில் கரைத்து வருகிறோம். அதை மாநில அரசு கங்கை மாசு என்று கூறி தடைசெய்கிறது. ஆனால் பக்ரீத் என்ற பெயரில் புனித கங்கையில் விலங்குகளை அறுத்து கழுவுகிறார்களே அதை ஏன் நிறுத்த மறுக்கிறது? எங்கள் வழிபாட்டு முறைகளை தடுக்க நினைத்தால் அதற்கு எந்த விலையும் நாங்கள் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று மிரட்டல் விடுத்தார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: