Friday, October 9, 2015

தாய்க்கழகம் பற்றி கலைஞர்



கேள்வி :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் அவர்கள் தொடர்ந்து திராவிட இயக்கக் கருத்துகளைத் தாக்கி எழுதி வருகிறாரே?
கலைஞர்:- ஆமாம், அவருடைய எதிர் மறை யான விமர்சனக் கருத்து களுக்கு தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் சார்பில் விடுதலையில் தொடர்ந்து அறிவு பூர்வ மாகவும், புள்ளி விவர அடிப்படையிலும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். 
 நேற்றைய விடுதலையில் கூட கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம், காம்ரேடுகளின் கனிவான கவனத் துக்கு  என்ற தலைப்பில் தம்பி கவிஞர் கலி. பூங் குன்றன் விரிவாகவும், விளக்கமாகவும், ஆக்க பூர்வமாகவும்  பதில் கொடுத்துள்ளார்.  நீதிக் கட்சி ஆட்சியிலும், தி.மு. கழக ஆட்சியிலும் சமூகச் சீர்திருத்தம் - பொருளாதார முன்னேற்றம் என்னும் நோக்கில் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டன என்ற விவரங்களையெல்லாம் அதிலே தொகுத் திருக்கிறார். 
மேலும் திராவிட இயக்க ஆய்வாளர், நண்பர் க.திருநாவுக்கரசு தொடர்ந்து விளக்கக் கட்டுரை வாயிலாக ஆதாரபூர்வமாக அருமையாகப் பதிலளித்து வருகிறார். கழக உடன்பிறப்புகள் அந்த விவரங்களையெல்லாம் படித்துப் பரப் புரையில் இணைத்திட வேண்டு மென்பதுதான் எனது விருப்பம்.            
- முரசொலி 8.10.2015

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...