Friday, October 9, 2015

மத்திய பிஜேபி அரசின் மதச் சார்பு, சகிப்புத் தன்மையற்ற போக்கை மறைமுகமாக சாடினார் குடியரசுத் தலைவர்

மத்திய பிஜேபி அரசின் மதச் சார்பு, சகிப்புத் தன்மையற்ற போக்கை மறைமுகமாக சாடினார் குடியரசுத் தலைவர்
பொது சமூகத்தில் அமைதிக்கு களங்கம் ஏற்படுவதை சகித்துக் கொண்டு இருக்கமுடியாது
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

டில்லி அக் 8_  நாட் டின் பன்முகத் தன்மை, பொது அமைதி, சகிப்புத் தன்மைக்கு இழுக்கு ஏற் படும் வகையினாலான எந்த ஒரு  நிகழ்விற்கும் அரசு இடம் தரக் கூடாது என்று குடியரசுத் தலை வர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். குடியரசுத் தலைவரின் வாழ்வில் நடந்த நிகழ்வு களைத் தொகுத்து தேசிய வாத குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி என்ற நூலாக குடியரசுத் தலை வர் மாளிகையில் வெளி யிடப்பட்டது. இந்நிகழ்ச் சியில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜி கூறிய தாவது:
"நமது நாடு சகிப்புத் தன்மை மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை உள்ள டக்கியது. மக்கள், வேறு பாடு மிகுந்த சமூகத்தில் வாழ்ந்தாலும், ஒற்றுமை யுடன் வாழ்ந்து வருகின் றனர். இங்கு அனைவரது கருத்திற்கும் மதிப்பு உண்டு, எதிர்கருத்தை ஏற் றுக்கொண்டு அவர்களுக் கும் மதிப்பளித்து வாழ வேண்டும்.
எதிர்கருத்தாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நமது பண்பட்ட நாகரிகத்தை உலகம் பெருமையுடன் பார்க்கிறது. நாம் அந்தப் பெருமை மிக்க மரபை விட்டுக்கொடுக்கக் கூடாது.
தீங்கு விளைவிக்கும் சம்பவங்கள்
சகிப்புத்தன்மை மற்றும் சமூக ஒற்றுமை என்பது மரபு ரீதியாக நம்மிடையே உள்ள சிறப்பான குணமாகும். நாம் இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கால கட்டத் தில் உள்ளோம். நாகரிக வளர்ச்சி மிகுந்த இந்தக் காலகட்டத்தில் சமூக ஒற்றுமைக்கும், சமூக அமைதிக்கும் தீங்கு விளை விக்கும் வகையிலான நிகழ்வுகளை ஒரு போதும் அரசுகள் அனுமதிக்கக் கூடாது.   பழமைப் பேசி என்ன பயன்?
பழைமை பேசிவருவ தால் எந்த ஒரு பயனும் இல்லை, அந்தக் காலகட் டங்கள் கழிந்துவிட்டன. இந்தியாவின் நூற்றாண் டுகால வரலாற்றில் பல் வேறு கலாச்சாரக் கலப் புகள் மற்றும் அந்நியர் களின் ஆட்சி நடை பெற்ற காலம் முடிந்து விட்டது. தற்போது நாம் புதிய நாகரிக காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. 
அதே நேரத்தில் நாம் பிறரது கொள்கை, சிந்தனை, பழக்க வழக்கங் களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நமது சகிப்புத் தன்மையைக் கண்டு பிறர் மரியாதை கொண்டுள் ளனர். அதை நாம் கெடுத்து விடக்கூடாது.  பண்டைய நாகரிகங் கள் பல தற்போது அழிந்து விட்டன. ஆனால் பல் வேறு ஆக்கிரமிப்பு, நீண்ட கால அயல் நாட்டு ஆட்சி அதிகாரத்தையும் தாண்டி நமது நாகரிகம் தழைத்து நிற்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
  நமது நாகரிகம் மீது பிறர் மிகவும் மதிப்பு கொண் டுள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும். என்னுடைய குழந்தைப் பருவத்தைப் பற்றிக் கூறும் போது, நான் தினசரி பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கல்வி பயின்றேன். என்னுடைய மாணவ பருவத்தில் சமூ கத்தின் பல்வேறு கலாச் சாரங்களையும் வேற்று மையில் ஒற்றுமையையும் பார்த்து வியந்திருக்கிறேன்.  ஆட்சியாளர்களின் பலம் என்பது என்ன?
நீண்ட காலத்திற்குப் பிறகு கூட்டணி இல்லாத ஓர் அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இது இந்தியா போன்ற குடியரசு நாட்டில் இன் றளவும் மக்களாட்சியின் மாண்பை உணர்த்தும் ஓர் எடுத்துக்காட்டாகும். தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சி ஆட் சிக்கு வரும் போது அதன் பொறுப்புகளும் அதிகம் உள்ளன. மக்களின் பலமே ஆட்சியாளர்களின் பலம் என்பதை உணர வேண் டும். 
ஆட்சியாளர்களும், மக்களும், மக்களாட்சியின் மாண்பை மதித்து ஒற்று மையுடன் வாழ்ந்தால் நமது ஜனநாயகத்தை எந்த விதத்திலும், யாரும் களங்கம் ஏற்படுத்த முடி யாது, இந்திய மக்களின் சமூக ஒற்றுமையை எந்த சக்தியாலும் அசைத்துப் பார்க்கமுடியாது என்று கூறினார்.
மாட்டிறைச்சிக்காக கொலை
கடந்த வாரத்தில் உத்தரப் பிரதேச மாநில தாதரியில் மாட்டிறைச்சி வதந்தி தொடர்பாக முதி யவர் ஒருவர் வன்முறைக் கும்பலால் அடித்துக் கொலை செய் யப்பட்டது தொடர்பான விவகாரத் தில் தனது கருத்தை பிரணாப் முகர்ஜி இவ் வாறு வெளிப்படுத்தினார்.
பிரணாப் முகர்ஜி வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்த நூலை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஆசிரியர் களுள் ஒருவரான பிரபு சாவ்லா எழுதியுள்ளார்.  இந்நூல் வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப் பாஸ் நக்வி, டில்லி முதல் வர் அரவிந்த கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷீலா தீக்ஷித், குலாம் நபி ஆசாத், மற்றும்  ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஃபாருக் அப்துல்லா ஆகி யோர் கலந்துகொண்ட னர். நூலின் முதல் பிர தியை குடியரசுத் துணை  தலைவர் ஹமீத் அன்சாரி பெற்றுக் கொண்டார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...