Total Pageviews

Tuesday, October 27, 2015

சேலத்தில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாசேலம், அக்.26_ திராவிடர் மாணவர் கழகம் சார்பில் சேலத்தில் தந்தை பெரியார் அவர்களின் 137 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவை, சிறப்பாக (பேரணி, படத்திறப்பு, கருத்தரங்கம்) கொண்டாடி மாணவர்கள் நன்றியை தன்னிகரற்ற தலைவருக்குத் தெரிவித்தனர். தமிழர் தலைவர் சிறப்புரை
தமிழர் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உரையை நிகழ்த் தினார். அவரது பகுத்தறிவுச் சுடரேந்துவீர்! உரையில் மாணவர்கள் படிப்பில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அதோடு பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தந்தை பெரியாரைப் போல் ஒரு தலைசிறந்த மருத்துவர் கிடையாது. 
சமூகத்தில் உள்ள ஜாதி, மதம், மூடநம்பிக்கை நோய்களை முறியடிக்கக் கூடிய மருத்துவர் தந்தை பெரியார், அவர் எப்போதும் தேவைப்படுகிறார், அவரது மருந்துகள் எப்போதும் தேவைப்படுகிறது, அவரது மருந்துகள் அவருக்காக அல்ல மக்களின் அறியாமையை நோயைப் போக்கு வதற்காக என்று குறிப்பிட்ட தமிழர் தலைவர் தமது மாணவப் பருவத்தில் 1944 இல் இதே சேலத்தில் நீதிக்கட்சி (தென்னிந்திய நல உரிமைச்சங்கம்) மாநாட்டில் பேசியதை நினைவூட்டி அதே உணர்வை இன்றும் பெறுகிறேன். மாணவர்களாகிய உங்களைப் பார்த்து இளமையைப் பெறுகிறேன் என்றார்.
25.-10.-2015 ஞாயிறு அன்று மாலை திராவிடர் மாணவர் கழகம் சார்பில் சேலம் சண்முகா (கலை யரங்கத்தில்) மருத்துவமனை வளாகத்தில் தந்தை பெரியார் 137 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்புக் கூட்டம் எழுச்சியோடு சேலம் சுயமரியாதைச் சுடரொளிகள் அப்பாய், எம்.எஸ்.அழகரசன் ஆகியோரது நினைவு மேடையில் நடைபெற்றது.
சிறப்புக் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட மாணவரணி தலைவர் டாக்டர் இரா.மானவீரன் தலைமை தாங்கினார். அனைவரையும் சேலம் மண்டல மாணவரணி செயலாளர் இ.தமிழர் தலைவர்  வரவேற்றுப் பேசினார்.
வாழ்த்துப் பா!
ஈரோடு மண்டல மாணவரணிச் செயலாளர் சி.அறிவுச்செல்வி, தருமபுரி மண்டல மாணவரணிச் செயலாளர் எழில்சிற்றரசு, மேட்டூர் மாவட்ட மாணவரணி தலைவர் மா.இளஞ்செழியன், தருமபுரி மாவட்ட மாணவரணி செயலாளர் தீ.ஏங்கல்ஸ், ஆத்தூர் மாவட்ட மாணவரணித் தலைவர் தமிழ்ச்செல்வன், கிருட்டிணகிரி மாவட்ட மாணவரணித் தலைவர் ம.சி.வீரமணி, 
ஈரோடு மாவட்ட மாணவரணித் தலைவர் பெ.மதிவாணன், திருப்பத்தூர் மாவட்ட மாணவரணித் தலைவர் நா.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் சட்டக் கல்லூரி மாணவரணி அமைப்பாளர் திருப்பூர் பாலுவின் மகள் பா.திவ்யபாரதி வாழ்த்துப்பா வாசித்தார்.
கலை நிகழ்ச்சி
மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தொடக்கவுரை ஆற்றினார். அரங்கின் முதல் நிகழ்ச்சியாக கலைமாமணி, திருத்தணி முனைவர் பன்னீர்செல்வம் குழுவினரின் கிழவனல்ல-கிழக்குத் திசை இன்னிசை விருந்து நடைபெற்றது.
படத்திறப்பு!
அதனைத் தொடர்ந்து இனத்திற்காகவும், சமூகநீதிக்காகவும் பாடுபட்ட வரலாற்று நாயகர்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டிதியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், எஸ்.முத்தையா (முதலியார்) ஏ.டி. பன்னீர்செல்வம்,  பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி ஆகியோரது படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்து பகுத்தறிவுச் சுடரேந்துவீர்! என்ற தலைப்பில் ஒரு மணிநேரம் சிறப்புரை யாற்றினார். 
இறுதியாக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் நன்றி கூற, சிறப்புக்கூட்டம் சிறப்புடன் நிறைவடைந்தது.  நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அண்மையில் பெரியார் திடலில் ஆசிரியர் அவர்கள் பேசிய மாட்டுக்கறியும் மதவாத அரசியலும் ஒலி நாடா மற்றும் புத்தகம், திராவிடர் மாணவர் கழகத்தில் சேர வேண்டும் ஏன்? பெரியார் எப்போதும் தேவைப்படுகிறார் ஆகிய புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட, பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலை வருமான பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் ஆசிரியரிடம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று அப்புத்தகங்களை தமிழர் தலைவர் அவர்களிட மிருந்து பெற்றுக் கொண்டனர்.

பங்கேற்ற பொறுப்பாளர்கள்
இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், தலைமைச் செயற்குழு உறுப் பினர்கள் கே.சி.எழிலரசன், தா.திருப்பதி, பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், துணைத்தலைவர் அண்ணா சரவணன், மாநில ப.க.துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, சேலம் மாவட்ட கழகத் தலைவர் கோ.ஜவகர், சேலம் மாவட்டச் செயலாளர் கடவுள் இல்லை சிவக்குமார், சேலம் மண்டல கழகத் தலைவர் கவிஞர் சி.சுப்பிரமணியன், 
தருமபுரி மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், ஈரோடு மண்டலத் தலைவர் வை.நடராஜன் செயலாளர் ப.பிரகலாதன், சேலம் மண்டல கழக செயலாளர் அ.ச.இளவரசன், தருமபுரி மண்டல செயலாளர் கரு.பாலன், மண்டல இளைஞரணி பொறுப்பாளர்கள் சேலம் அ.சுரேசு, ஈரோடு செபராஜ் செல்லத்துரை, தருமபுரி ஆறுமுகம், தருமபுரி மாவட்டத் தலைவர் இரா.வேட்ராயன், கிருட்டிணகிரி மாவட்டத் தலைவர் மு.துக்காராம், 
திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் அகிலா எழிலரசன், மேட்டூர் மாவட்டத் தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, செயலாளர் கா.நா.பாலு, ஆத்தூர் மாவட்டச் செய லாளர் நீ.சேகர், கிருட்டிணகிரி மாவட்டச் செய லாளர் கோ.திராவிடமணி, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் வி,ஜி,இளங்கோ, கோபி மாவட்டச் செயலாளர் ந.சிவலிங்கம், சேலம் மாநகர தலைவர் பு.வடிவேல், மாநகர செயலாளர் அரங்க.இளவரசன், சேலம் மாவட்ட அமைப்பாளர் ச.வெ.இராவணபூபதி, சேலம் பொதுக்குழு உறுப்பினர் கமலம், 
துணைத் தலைவர் தனபால், மொட்டையன், நடராஜன் அரிசிபாளையம், அம்மாபேட்டை நடராஜன், தமிழ்பிரபாகரன், கவிதா, ச.சாக்ரடீஸ்,  பா.வைரம், கே.ராஜூ, பேங்க் ராஜூ, ஆ.ராஜவேல், ரா.சாந்தி, ரா.பார்த்திபன், இல.பாலகிருட்டிணன், அமிர்தம் சுகுமார், மா.சூரியகுமார், கே.மாதேஸ்வரன், டி.எ.சாமி, பச்சப்பட்டி தங்கவேல், அம்மாபேட்டை தங்கராஜ், கருங்கல்பட்டி கோவிந்தராஜ், சந்தோஸ், வேலாயுதம், கந்தசாமி, மதிவாணன், இனியன்
கிருட்டிணகிரி மாவட்டம்  சி.வனவேந்தன், ப.முனுசாமி, தா.சுப்பிரமணியம், சீனிவாசன், வே.புகழேந்தி, சி.சுப்பிரமணி, தா.மாது, வேலன், சி.வீரமணி, இரா.சந்தோஷ், ஆர்.கணேசன், சீனி.செயபால், விஜயகுமார், சரவணன், பூவரசன், இரா.தமிழரசு, முருகன்.
மேட்டூர் மாவட்டம்
கோவி.அன்புமதி, சி.மதியழகன், உலக கென்னடி, அய்யனார், சி.சின்னப்பன், கொ.அ.சந்திரசேகரன், ப.கலைவாணன், ம.இளஞ்செழியன், மு.அரிபிரதாப், சுரேஸ், குமார், ஜெயப்பிரகாஷ், மா.வல்லரசு, ப.ராஜேந் திரன், சு.குமரேசன், ப.அண்ணாத்துரை, முத்துராணி, ராசா, எல்லப்பன், முத்து, குமரேசன் மாணவரணி, ஆர்.கேசவன், சின்னதம்பி, சதீஸ்.
தருமபுரி மாவட்டம் பொதுக்குழு உறுப்பினர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க. தலைவர் ஊமைஜெயராமன்,  செய லாளர் இர.கிருட்டிணமூர்த்தி, மு.சிசுபாலன், சு.ஏங் கல்ஸ், ஆதவன், காமராஜ், கோவிந்தராஜ், சத்தியராஜ், தமிழ்யாழ் திலீபன், சி.அறிவழகன், சி.பகத்சிங்.
திருப்பத்தூர் மாவட்டம்
சித.அருள், பா.கிருட்டிணன், இரா.அன்பு, இராம.சகாதேவன், பொன்முடி, மற்றும் 60 தோழர்கள்.
ஆத்தூர் மாவட்டம்
-தமிழ்பிரபாகரன், அறி வுச்செல்வம்,  வினோத் குமார், பிரவீன்குமார், குழந்தைவேல், அன்புவில்.
தஞ்சாவூர்
வே.ராஜவேல் மாவட்ட இளைஞரணி செயலாளர், இரவி.தர்ம சீலன், வே.தமிழ்ச்செல் வன், பன்னீர்செல்வம், த.பர்தீன், திருநாவுக்கரசு, சவுந்தரபாண்டியன்.
விருத்தாசலம் மாவட்டம் ப.வேல்முருகன், செ. சிலம்பரசன், செ.காமராஜ்.
நாமக்கல் வழக்குரை ஞர் வை.பெரியசாமி, ஈரோடு மாவட்ட இ.அ. தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் தே.காமராஜ், பி.என்.எம்.பெரியசாமி, குருவை கணேசன்,   ஈரோடு ந.சிவராமன்
அணிவகுப்பு மாலை 6 மணியள வில் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் தீர மிக்க அணிவகுப்பு அஸ் தம்பட்டி ரவுண்டானா வில் தொடங்கி, பொதுப் பணித்துறை அலுவலகம், சி.எஸ்.அய். விடுதி, சாரதா கல்லூரி சாலை வழியாக சண்முக மருத்துவமனை வளாகம் சென்றடைந்தது. பழனி.
புள்ளையண்ணன் தொடங்கி வைத்தார்
மாணவர்கள் அணி வகுப்பிற்கு தருமபுரி மாவட்ட மாணவரணி தலைவர் காசி.பாஸ்கர் தலைமை தாங்கினார். அணிவகுப்பை தலை மைச் செயற்குழு உறுப் பினர் பழனி.புள்ளை யண்ணன் தொடங்கி வைத்தார். சேலம் இளம் புயல் டிரம்செட் குழு வினர் சிறப்பாக டிரம் அடித்து ஊர்வலத்திற்கு முன்பாக சென்றார்கள்.
காணும் இடமெல்லாம் கழகக்கொடிகள் ஊர்வலப்பாதை முழு வதுமாக கழகக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மாணவர் கழகம் நடத்திக் காட்டிய இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகள் கழக வர லாற்றில் மட்டுமல்ல தமி ழக வரலாற்றில் பதியப் படும், மாணவர்கள், இளைஞர்கள் கேளிக்கை, மது, சினிமா, ஜாதி, மதம் போன்றவற்றிற்கு அடிமையாகமல், மாணவர் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியை நடத்திக்காட்டி சேலத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளனர் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும்!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: