Total Pageviews

Monday, October 26, 2015

குடியரசுத் தலைவரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்(இந்து ஆங்கில நாளிதழின் தலையங்கம்)

டாட்ரி வெட்டிக் கொல்லப்பட்டது, கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி கொல்லப்பட்டது போன்ற சம்ப வங்கள்   நடந்தேறியபிறகு என்ன நடந்தது என்பதைக் காணும்போது, நமது அரசு அரசமைப்பு சட்டக் கொள்கைகளை எந்த அளவுக்கு அரசு பாதுகாக்கிறது என்பது போன்ற கேள்விகள் எழும் நேரங்களில், 
அரச மைப்பு சட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய உயர்ந்த நிலையில் உள்ள வர்கள் அந்த நிகழ்வுக்கு ஏற்றபடி தங்களை உயர்த்திக் கொண்டு அக் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கடமை கொண்டவர்கள் ஆவர். சகிப்புத் தன்மையின்மை வளர்ந்து வருவதைக் கண்டும் எதுவும் பேசாமல், செய்யாமல் அரசு அமைதியாக இருப்பதைப் பற்றி கவலை அடைந்து, 
தங்களது இலக் கியப் படைப்புகளை அங்கீகரித்து  சாகித்ய அகாடமி தங்களுக்கு அளித்த விருதுகளைத் திருப்பி அளிக்க, இந்தி யாவின் நுண்ணறிவாளரிடையே ஒரு தூண்டுதலை இந்த நிகழ்வுகள் ஏற் படுத்தியுள்ளன. வலதுசாரி இனவெறி யாளர்கள் இத்தகைய வன்செயல் களில் ஈடுபடுவதற்கு அதிக துணிவு பெற்றிருக்கின்றனர் என்றே தோன்று கிறது.
பா.ஜ.கட்சியின் முன்னாள் ஆதரவாளரான சுதீந்திர குல்கர்னி, இந்திய பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சி களை இலக்காகக் கொண்டு தாக்கப் பட்டுள்ளார். இது தொடர்பாகத்தான், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வெளி யிடப்பட்ட அறிக்கையில்,  பன்முகத் தன்மை, வேற்றுமை, சகிப்புத் தன்மை போன்ற நமது நாகரிகத்தின் முக்கிய மதிப்பீடுகளைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். 
யூதநாடான இஸ்ரேலில் அரசியல் வாதிகளுடன் பேசும்போது, ஒரு நாட்டின் அரசுக்கு மதம் ஓர் அடிப்படை யாக இருக்கக்கூடாது  என்று கூறியபோது, அந்த உணர்வுகளைத்தான்  நமது குடி யரசுத் தலைவர் மறுபடியும் வலியுறுத்திக் கூறியுள்ளார். அவர் வெளிப்படுத்திய அக்கருத்து அப்போதைய இஸ்ரேல் சூழ்நிலைக்கு மிகமிகப் பொருத்தமானதாக இருந்தது என்பது மட்டுமன்றி, 
பாகிஸ்தான் அல்லது இஸ்ரேல் வழியில் இந்தியா செல்லக்கூடாது என்பதை மீண்டும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார் என்றே பார்க்க  வேண்டும். மதவெறுப்பிற்கு எதிராக தனது அரசு தீவிரமாக செயல்படும் என்ற நம்பிக்கையை, உறுதிமொழியை பிரதமர் அளிக்காமல் மெத்தனம் காட்டும் போக் கில் இருந்து, அரசமைப்பு சட்டப் படியான வெறும் அலங்கார பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர் அவர்களின் சொற் கள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
இவ்வாறு மக்களுக்கு உறுதியளிக்கும் செயலை பிரதமர் பல வழிகளிலும் செய்ய இயலும். அண்மையில் பல முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்ட மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவை அவர் கண்டித்திருக் கலாம்.  தனது தலையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் அமைந்தபிறகு, மதவெறி - குறிப்பாக பெரும்பான்மையினரின் மத வெறி, ஊக்குவிக்கப்படுவதாகத் தோன்று கிறது என்று கூறப்படுவதை அவர் ஏற்றுக் கொண்டு இனியும் அது பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று  உறுதி அளித்திருக்கலாம்.
நாட்டுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்து வோம் என்ற வாக்குறுதியின் மீது தேர்ந் தெடுக்கப்பட்ட தனது அரசு, வளர்ந்து வரும் சகிப்புத் தன்மையின்மை என்ற வெள்ளத்தைத் தடுத்து நிறுத்த உறுதி பூண்டிருப்பதை அவர் மீண்டும் வலி யுறுத்திக் கூறியிருக்கலாம். மதச்சார் பின்மை, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றைப் பாதுகாக்க தனது அரசு உறுதி கொண்டி ருப்பதைக் கூறி, தங்களது அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுத் துக் கொண்டிருப்பவர்களுக்கு உறுதி அளிக்கலாம்.
மாறாக, டாட்ரி வெட்டிக் கொல்லப்பட்டதற்கு வருத்தத்தை மட் டுமே நரேந்திர மோடி தெரிவித் திருக்கிறார். அதுவும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பது மாநில அரசின் கடமை என்ற புளித்துப் போன காரணத்தைக் கூறி, தனது பொறுப்பைத் தட்டிக் கழித் துள்ளார். மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கப் பணிக்கப்பட்டிருந்த அவரது அமைச்சரவை சகாவான நிர்மலா சீதாராமனோ, மதவெறி என்பது பற்றி ஒரு விரிவான விவாதம் மேற்கொள் ளப்பட வேண்டும் என்ற தவறான வாதத்தை முன்வைத்துள்ளார். மதச் சார்பின்மை என்பது இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடித்தளம் போன்றதாகும்.
மதத்தை அரசில் இருந்து பிரித்து வைப்பதற்கான வழி என்ன என் பதைப் பற்றிதான் இப்போது விவாதிக்க வேண்டும்.  இதனை நிரா கரித்து ஒதுக் கித் தள்ளிவிட்டு,  மதச் சார்பின் மையையே  விவாதத்திற்கு உரியதாக அரசு ஆக்குகிறது என் பதே இதன் பொருள். அரசமைப்பு சட்டப்படி இது நிச்சயமாக செல்லத் தக்கதல்ல. குடியரசுத் தலைவர் காட்டி யுள்ள வழியில், பிரதமர் நரேந்திர மோடி தனது அரசமைப்பு சட்டப் படியான கடமையை கட்டாயமாக நிறைவேற்றுவார் என்று நம்புவோம்.
நன்றி: தி ஹிந்து 16-10-2015 தலையங்கம்
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: