Total Pageviews

Tuesday, October 27, 2015

பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்!


புத்தகங்களைப் படித்தாலும்கூட அதனை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் முழுப் பொருள் நமக்குக் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் படித்துப் போடுவது சாதாரண பொழுதுபோக்குக் கதைகள் அல்லது சில ஊடகங்களில் வரும் துணுக்கு களுக்கு மட்டுமே பொருந்தும்.
சிறந்த நூல்களை திரும்பத் திரும்பப் படிக்கும்போதுதான் அதன் சுவையும், நயமும் கருத்து வலிமை யின் தெளிவும் நமக்குக் கிடைக்கக் கூடும்.
நவில்தொறும் நூல்நயம் போலும்     பயில்தொறும்
பண்புடை  யாளர் தொடர்பு (குறள் 783)
பழுத்த கனிகளைக்கூட அப் படியே லபக்கென்று விழுங்கி விடுவதோ அல்லது அவசர அவசர மாக சாப்பிட்டு விடுவதோ அதன் முழுச் சுவையை அனுபவித்து சுவைத்து மகிழும் அரிய வாய்ப்பை, உண்போருக்குத் தராது; மாறாக, மெல்ல நிதானமாக நன்றாக சுரந்த உமிழ்நீருடன் கலந்து அதனை உண்ணும்போதுதான் முழுச் சுவை நமக்கு நல்லதோர் அனுபவத்தை ஊட்டும்!
இதுபற்றி நமது மகாகவி என்ற பெருமை படைத்த பகுத்தறிவுக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர் கள், உலகப் புத்தக நாளையொட்டி பெரியார் திடலில் ஆற்றிய பேருரை யில் (22.4.2013) தந்துள்ள முத்தான கருத்துகள் இதோ:
இப்படி, இந்த வரிசையில் வைத்து எண்ணத்தக்கதுதான் பாடை யது ஏறினும் ஏடது கைவிடேல் என்பதும். ஒரு நூலிலுள்ள கருத்து, அது சொல்லப்பட்டுள்ள முறை ஆகியன ஒருமுறை படித்தோ, இருமுறை, மும்முறை படித்தோ மனப்பாடமாக ஏறி நின்றுவிடக் கூடும். மனப்பாடம்தான் ஆகி விட்டதே! இனி எதற்கு நூல் என்று தூக்கி எறிந்துவிடக் கூடாது. எனவே, நூல் நிலைய நோக்கம் உட்பொதிந்த நிலையில் உள்ள இந்தப் பழமொழி ஆக்கம் மிக்கது. வடமொழியில்கூடக் கைக்கு அழகு, கையில் வைத்திருக் கும் புத்தகம் என்ற கருத்துண்டு. புஸ்தகம் ஹஸ்த லட்சணம் என் பார்கள். சிலர் படிக்காவிட்டால் கூடக் கைகளில் புத்தகங்களோடு காட்சி தருவார்கள். கற்றவர் என்ற பெருமை வராதா என்ற கனவு. அறிவில்லா மலே செய்யும் ஓர் அறிவு மிரட்டல்!
என்னுடைய நண்பர் ஒருவர், தொடக்கப் பள்ளியில் என்னோடு படித்தவர். எப்பொழுது பயணத்தில் கண்டாலும் பத்துப் பதினைந்து புத் தகங்களோடு கூடிய தோள் பையோடு தென்படுவார். வண்டியில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் வெளியே எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொள்வார். கொஞ்சமாக நூல்களைப் புரட்டுவார். அதிகமாகப் பேசுவார். திடீரென்று எழுதுகோல் எடுத்து வரிகளிடையே பிடித்துக் கொண்டு போவார். மூன்று நான்கு முறை அதே காட்சி. அதே புத்தகங்கள். ஆர்வத்தை அடக்க முடியாமல் ஒருமுறை கேட்டுவிட் டேன்: இன்னுமா அதே புத்தகங்கள்? படித்து முடிக்கவில்லையா? இவர் சொன்னார்: இதோ பாருப்பா! உனக்குத் தெரியாததல்ல.
நம்மிடம் இருக்கும் பணத்தை இப்படி வெளியே எடுத்து வைக்க முடியாது! அது பெரிய அறிவாளி என்னும் மரி யாதையைத் தராது! புத்தகம் என் றால் படித்தவன் என்கிற கவுரவம்.
நீயே கேட்கிறாய் இல்லையா! என்றான். கனக்க கனக்க, சுமந்து வருவது உனக்குத் தொல்லையாய் இல்லையா? என்றேன். வீட்டில் வைத்து விட்டு வந்தால், எடைக்குத் தூக்கிப் போட்டுவிடுவாள் மனைவி; என்ன செய்வது என்றான். அதில் தப்பே இல்லை என்றேன் நான்.
எப்படி என்று கேட்டான். படிக்கா மலே போலிப்பெருமைக்காக இப் படிச்சுமந்து திரிவதைவிட எடை போட்டு இரண்டுபடி அரிசி வாங்கி னால் என்ன தப்பு என்றேன். பேசவில்லை அவன்.
எனவே, புத்தக விரும்பிகளே, படியுங்கள் - அடுக்கி வைத்து அழகு பார்க் காதீர்கள்! அடுத்தடுத்து எடுத்துப் படித்துப் படித்து மகிழுங்கள் - பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் - செய்வீர் களா?


0 comments: