Tuesday, October 27, 2015

டில்லியில் உள்ள கேரளா இல்லத்தில் மாட்டுக்கறி எனக்கூறி கலவரத்தை ஏற்படுத்த சதி: இந்துசேனா வக்கிரம்

டில்லியில் உள்ள கேரளா இல்லத்தில் மாட்டுக்கறி எனக்கூறி
கலவரத்தை ஏற்படுத்த சதி: இந்துசேனா வக்கிரம்
புதுடில்லி, அக்27_ புது டில்லி ஜந்தர் மந்தர் அரு கில் உள்ள கேரளா பவன் பகுதியில் காவல்துறையி னர்  கண்காணிப்புப் பணி களை மேற்கொண்டார் கள்.
தொலைப்பேசி வாயி லாக இந்துசேனா அமைப் பினர் என்று கூறி மாலை 4.15 மணியளவில் காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி மூலமாக கேரளா பவனில் மாட்டுக்கறி பரிமாறப்படு கிறது என்று புகார் தெரிவித்துள்ளனர். உட னடியாக அந்தத் தகவல் நாடாளுமன்ற தெருவில் உள்ள காவல்நிலையத் துக்கு தெரிவிக்கப்பட்டு, 
காவல்துறையினரின் குழு கேரளா பவனுக்கு விரைந் தது. பல மணிநேரங்கள் காவல்துறையினர் அப் பகுதியில் முகாமிட்டு கண் காணித்தபடி இருந்தனர். புகார் தெரிவித்தவர் கள் இந்துத்துவா வலது சாரி அமைப்பான இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க லாம் என்று காவல்துறை யினர் குறிப்பிட்டுள்ளனர்.
கே
ரளா இல்லத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் நிலைமை கட் டுப்பாட்டுக்குள் இருப்ப தாகத் தெரிவித்துள்ளனர்.
கேரளா பவனில் உள்ள உணவகத்தில் எருமை மாட்டுக்கறிதான் மாட்டுக்கறி உணவாக அளிக்கப்பட்டு வருகிறது. இனி அதுவும் உணவுப் பட்டியலில் இடம் பெறாத நிலையை ஏற் படுத்துகிறார்கள்.
புதுடில்லி காவல் துறைத் துணை ஆணை யர் ஜாடின் நார்வால் கூறும்போது, இவ்விவ காரத்தில் போக்கிரித் தனத்துடன் பிரச்சினை களை ஏற்படுத்தி கலவ ரத்தை உருவாக்க நினைப் போர் மத்தியில் எங் களால் இயன்ற அளவில் போதுமான முன்னெச் சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறோம். சட் டம் ஒழுங்கை உறுதிப் படுத்துவதே எங்களின் நோக்கம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...