Friday, October 9, 2015

பகுத்தறிவாளர்களுக்குத் தொடரும் அச்சுறுத்தல்கள்!

- பெங்களூரு  முத்து.செல்வன்
2013 இல் புனே  மண்ணின் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், 2015 இல் கோலாப்பூர் பகுத்தறிவாளரும் பொதுவுடைமை இயக்கத்தவருமான கோவிந்த் பன்சாரே ஆகியோரின் படுகொலைகளைத் தொடர்ந்து கருநாடகத்தில் பகுத்தறிவாளரான கல்புர்கி கடந்த ஆகஸ்டுத் திங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
`மூட நம்பிக்கையை எதிர்த்தல் என்பது மக்களிடையே மண்டிக்கிடக்கும் மூட நம்பிக்கைகளை, மக்களுடைய அறிவு வளர்ச்சிகுத் தடையாக உள்ள நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து மக் களை அறிவுப்பாதைக்கு இட்டு செல்லும் அரிய பணியாகும். மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பது ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கைகளை மட்டும் எதிர்ப்பதன்று. உலகத்தின் பல பகுதிகளிலும் கட்ட றுத்த சிந்தனையாளர்கள், பகுத்தறிவா ளர்கள், கடவுள் பற்றிய கவலை இல்லா தோர், கடவுள் மறுப்பாளர்களான நாத்திகர்கள் எண்ணிக்கை பெருகி வருவதை அண்மைக்காலப் புள்ளி விளக்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மூடநம்பிக்கை எதிர்ப்பு என்றாலே இந்து மதத்தை எதிர்ப்பதாகத்தான் பொருள் கொள்ளப்படுகிறது. இந்திய அரசியல மைப்புச் சட்டப்படி, கிறித்தவர்கள், இசுலாமியர்கள், பார்சிகள், யூதரகள் அல்லாத அனைவருமே இந்துக்கள்தாம். தங்களை இந்துக்கள் அல்லர் என்று கூறிக்கொள்ளும் இராமகிருட்டிண இயக்கத்தைச் சார்ந்தவர்களும், இலிங் காயத்துகளும் சீக்கியர்களும் பவுத்தர் களும் சமணர்களும், வீர சைவர்களும், ஆரிய சமாஜிகளும், பிரம்ம சமாஜத் தினரும் இந்துக்களில் அடக்கமே. அவ்வளவு ஏன்? தங்களை மதம் சாராதவர்கள் என்றும் நாத்திகர்கள் என்றும் அழைத்துக்கொள்பவர்களும் இந்துக்களே!
இந்து மதம் என்னும் பெயரால் சுருதிகளாலும் சுருதிகளும் தொன்மங் களாலும் (புராணங்களாலும்) தளைப் படுத்தப்பட்டுள்ள மக்களை விடுவித்து மாந்த உரிமைகளையும் மாந்த நேயத் தையும்  காத்திட உழைப்பவர்களே பகுத்தறிவாளர்கள்/. தங்களுடைய விருப்பம் இல்லாமலேயே இந்துக் காளாக்கப்பட்டவர்கள் தங்கள் சிந் தனைத் திறனாலும் ஆய்வுத் திறனாலும் சமூகக் கவலையாலும் இந்த பொறுப் பைத் தங்கள் தோள்கள் மீது சுமந்து கடமையாற்றிவருகிறார்கள்.
பேராசிரியர் கல்புர்கி தலை சிறந்த அறிஞர்..ஆராய்ச்சியாளர். குவெம்பு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வும் பணியாற்றியவர். அவரை இந்து வியப் பண்பாட்டுக்காவலர்கள் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் இந்துத் துவ வெறியர்கள் சுட்டுக் கொன்று விட்டனர்.
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரைக் கொன்றவர்கள் இன்றள வும் பிடிபடவில்லை. இந்த நிலையில் இந்து மதத்திற்கு எதிராகவும் இராமா யணம், மகா பாரதம், பகவத் கீதை ஆகியவற்றுக்கு எதிராகவும், வேத, புரணக் குப்பைகளுக்கு எதிராகவும் உருவ வழிபாட்டுக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர்களுக்கு மராத்திய மண்ணி லும் கருநாடக மண்ணிலும் மிரட்டல் களும் அச்சுறுத்தல்களும் மிகுந்து வருகின்றன.
பேராசிரியர் கல்புர்கியின் கொலை யைக் கண்டிப்பதற்காக ஏற்பாடு செய் யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களுக்கும் மிரட்டல் விடப்பட்டு வருகின்றது.   கல்புர்கியின் கொலை யைக் கண்டித்தும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும் வற் புறுத்திய தீர்மானத்தில் கையெழுத்திட் டோர் பலர்.  அவர்களுள் 87 அகவை நிரம்பிய கன்னட அறிஞர் சென்னவீர கானவியும் 76 அகவை நிரம்பிய கிரட்டி கோவிந்தராஜ் என்னும் கன்னட அறி ஞரும் அடக்கம்.  கண்டனத் தீர்மானத் தில் கருநாடகத்தைச் சேர்ந்த 138 பகுத்தறி வாளர்கள் கையொப்பமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானத்தில் கையொப்ப மிட்டதற்காக இவ்விரு அறிஞர்களுடைய வீடுகளையும் அடித்து நொறுக்கப் போவ தாக,  பிரமோத் முதாலிக் தலைமையிலான சிறி ராம் சேனை அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அத்துடன் பேராசிரியர் கே.எஸ்,பகவானுக்கும் மிரட்டல்களை அந்த அமைப்பு.விடுத்தள்ளது அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் மஞ்சுநாத் பவி இவ் விருவர்களுடன் தொண்டதார்ய மடத்தின் அடிகள் ஒருவரையும் மிரட்டியுள்ளார். கல்புர்கி கொலைக்கும் சிறி ராம சேனைக்கும் தொடர்பு உள்ளதாக ஒரு திங்களுக்குள் மெய்ப்பிக்க வேண்டும் என்றும் இல்லை யேல் தங்கள் மேல்நடவடிக்கை தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்டு கையொப்பமிட்ட 138 பேருக்கும் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள் ளது. மேலும் அந்தச் செய்தியாளர் கூட் டத்தில் பேசும்போது, தங்கள் அமைப்பான சிறிராம் சேனை உறுப்பினர்களுக்கு அளிக் கப்படும் துப்பாக்கிப் பயிற்சி போன்ற ஆயுதப் பயிற்சிகளையும் ஞாயப்படுத்திப் பேசியுள்ளார். அத்தகைய பயிற்சிகள் ராய்ச்சூர் போன்ற பகுதிகளுக்கும் விரிவுப் படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, தான் எந்த அமைப்பையும் குறிப்பிட்டுச் சாடவில்லை என்றும் தீர்மானத்திலும் எந்த அமைப்பின் பெயரும் சுட்டப்படவில்லை என்றும் அறிஞர் கானவி அறிக்கை விடுத்துள்ளார்.  அதனை அப்படியே வழிமொழிந்து, அறிஞர் கோவிந்தராசுவும் அறிக்கை விடுத்துள்ளார்.
தாங்கள் இருவரும் அந்தக் கூட்டத்தில் எதுவுமே பேசவில்லை என்றும் தங்களை மிரட்ட வேண்டிய தேவை என்ன என்பது தங்களுக்குப் புரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கல்புர்கியின் கொலை குறித்த விசாரணையை முடுக்கிவிட வேண்டுமென்று நிறைவேற்றபட்ட தீர்மானம் சிறி ராம சேனைக்குச் சினத்தை ஏற்படுத்துவானேன்? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
கருநாடகக் காவல்துறை மேற்கூறப்பட்ட மஞ்சுநாத் பவியையும் சேனையின் மற் றொரு உறுப்பினர் ராஜசந்திராவையும் கைது செய்து இந்தியக் குற்றப் பிரிவுச் சட்டம் 506 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர் களைப் பிணையில் விட்டுவிட்டது.
சிறி ராம சேனையினர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவார்களா னால் அவர்கள் மீது கடுமையான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சட் டத்தை அவர்கள் கையில் எடுத்துக்கொள் வதை ஒப்பமுடியாது என்றும் கருநாடக மாநில உள்துறைச் செயலாளர் எஸ்.கே. பட்நாயக் கூறியுள்ளார். அரசின் பாதுகாப்புப் படையினரைத் தவிர வேறு எவரும் துப்பாக்கிப் பயிற்சி எடுப்பது சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறுப வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராய்ச்சூர் மாவட்டக் காவல்துறை அதிகாரி சேட்டன் சிங் எச்சரித்துள்ளார்.
தன் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் தளைப்படுத்தப்பட்டவுடன் பிரமோத் முத்தாலிக் ஒரு படி கீழே இறங்கி வந்துள்ளார். எழுத்தாளர்களை மிரட்டுவது சரியல்ல என்றும் தன் அமைப்பைச் சார்ந்தவர்கள் மஞ்சுநாத் பவி கூறியது போன்ற அழிவு வேலைகளில் ஈடுபடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அறிஞர்களின் வீடுகளுக்கு முன்னால் மறியல் செய்யவுள்ளதாக அறிவிக்க விரும்பியவர்கள் தவறுதலாக அறிஞர்களின் வீடுகளை அழித்து விடு வோம் என்று கூறிவிட்டார்கள் என்று சப்பைக் கட்டுக் கட்டியுள்ளார். மேலும் அவர்கள் தங்கள் அறிக்கையினைத் திரும் பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திட வேண்டுமென்றும் அவர்களுக்கு அறி வுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் பலர் கூடியிருந்த கூட்டத்தில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் களுக்கு எத்தைகைய விளக்கம் பாருங்கள்
மேலும் மஞ்சுநாத் பவி கூறியுள்ள துப்பாக்கிப் பயிற்சி குறித்து முத்தாலிக் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்.
தங்கள் அமைப்பிற்குத் துப்பாக்கிப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும்,  ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட இடத்தில் உடற்பயிற்சி முகாம்களை மட்டும் நடத்துவது தங்கள் வழக்கம் என்றும் அதில் யோகா, கராத்தே, சூரிய வணக்கம், சிலம்பாட்டம் போன்ற பயிற்சிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளார்.    பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்கப்படு வதாகவும் கூறியுள்ளார்..
ராம சேனையினருக்குக் குருவி சுடக் கற்றுக் கொடுக்கிறார்கள் போலும்.
ஆனால், சிறீ ராம சேனையினர் உள் நோக்கம் எப்படி வெளிப்பட்டுள்ளது என் பதையும் பாருங்கள்.
அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் சித்தலிங்க சாமி, இந்து மதம் குறித்தும் இந்துக் கடவுள்கள் குறித்தும் தரக்குறை வாகக் கருத்துரைப்பவர்களுடைய  நாக்கு களைத் துண்டிப்போம் என்று கூறியுள்ளார். அமைப்பின் தலைவர் முத்தாலிக் தன் அமைப்பினர் வன்முறையில் இறங்க மாட்டார்கள் என்று உறுதி கூறிய அடுத்த நாளே இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜேவர்கி வட்டத்தில் உள்ள அந்தோலா என்னுமிடத்தில் அமைந் துள்ள காமேசுவர மடத்தைச் சேர்ந்த சாமிஜி?!யான சித்தலிங்கையாவின் கொடிய மனத்தையும் குருதி வெறியையும் பாருங்கள். மடத்தைச் சேர்ந்த ஒருவனின் இந்துத்துவக் கொலைவெறி இப்படி இருக்குமாயின் இந்துப் பயங்கராவாதத்தின் தன்மையை நீங்களே எடை போட்டுக்கொள்ளுங்கள்.
கருநாடக அரசு பகுத்தறிவாளர்களுக்குத் துணை நிற்கின்றது என்று குற்றஞ்சாட்டி யுள்ள அவர் இதனால் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்குச் சிக்கலுக்கு அரசே பொறுப்பு என்றும் எச்சரித்துள்ளார். அரட்டலையும், மிரட்டலையும் தூண்டுபவர்கள் சட்டம் ஒழுங்கைப் பேசுவதுதான் வேடிக்கை!
இதற்கிடையில், இராம சேனை அமைப்பு மாநிலத்தில்  காவிப் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது என்று குற்றஞ்சாட்டி, இந்தியப் புரட்சி இளைஞர் கூட்டமைப்பினர் (Revolutionary Youth Federation of India (RYFI)) ராம சேனைக்கு  எதிராக ஓர் ஊர்வலத்தை நடத்தி,  சிறீ ராம சேனை அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று ராய்ச்சூர் துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
ராம சேனையின் செயற்பாடுகள் மக்களிடையே உள்ள நல்லிணக்கப் போக்கைக் குலைப்பதாகவும், தனிமனிதத் தாக்குதல்கள் நிறைந்ததாகவும் அரசியல் சட்டத்திர்கு எதிரானதாகவும் அமைந்திருப் பதை அந்த அமைப்பின் வரலாறு நமக்கு உணர்த்துவதால் அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப் பட்டுள்ளது.
வெளிப்படையாகவே மிரட்டல் போக்கைக் கைக்கொண்டுவரும் ராம சேனை நடவடிக்கைகளுக்கு எதிராகக் காவல்துறை தன் மெத்தனப் போக்கைக் கைவிட்டுக் கடுமையான நடவடிக்கை களை மேற்கொள்ளவேண்டுமென்று இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் நாகராஜ் பூஜார் கூறியுள்ளார்.
இந்து பயங்கரவாத அமைப்பான சிறீ ராம சேனை 1960 இல் சிவ சேனைத் தலைவர் பால் தாக்கரேயின் வலது கையாகத் திகழ்ந்தவரும் பஜ்ரங் தள் மற்றும் விசுவ இந்து பரிசத்து உறுப் பினருமாகிய  கல்கி மகராஜ் என்பவ ரால் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.
1960 மராட்டியத்தின் மாலேகான் குண்டுவெடிப்பில் இந்த அமைப்புத் தொடர்புடையது என்று குற்றஞ் சுமத்தப்பட்டது.
2008 இல் புதுடில்லியில் உள்ள சமாஜவாதிக் கட்சியின் அலுவலகத்தை இந்த அமைப்புச் சூறையாடியது. டில்லிக் காவல்துறை ஆய்வர் எம்.சி.சர்மா என்பார் குறித்து விமரிசித்ததற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்ட தாக இந்த அமைப்பு கூறியது. தன்னை விமர்சனம் செய்தவர்கள் மீது தானே நடவடிக்கை எடுக்காமல் ஒரு மதவெறி அமைப்பைத் துண்டிவிட்ட காவல்துறை அதிகாரியின் நேர்மை எத்தகையது? எண்ணிப் பாருங்கள்.
2011 இல் உச்ச நீதிமன்ற வளாகத் திலேயே  வழக்கறிஞர் பிரசாந்த் பூச னைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
கருநாடக மாநிலத்தின் பிஜாபூரில் ஓர் அரசுக் கட்டடத்தில் இந்த அமைப் பினரே பாகிஸ்தான் கொடியை ஏற்றி, பழியை அந்த நகரில் பெரும்பான்மை யராக வாழும் இசுலாமியர் மீது சுமத்திக் கலவரத்தை உருவாக்க முனைந்தது.
இந்த அமைப்பின் தாய் அமைப் பான ராசுடிரிய இந்து சேனாவின் தலைவராக இருந்த பிரமோத் முதாலிக் தான் தற்போது இந்த அமைப்பின் தலவர் ஆவார்.
பஜ்ரங் தளத்திலும் சிவ சேனை யிலும் உறுப்பினராக இருந்தவர். கருநாடக  மராட்டிய மாநிலங்களுக் கிடையே உள்ள பெலகாவி எல்லைச் சிக்கலில் கருநாடகத்துக்கு ஆதரவு நிலையை மேற்கொண்டதால் பஜ்ரங்க தளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்க் கருநாடகத்தில் சிறீ ராம சேனையைத் தொடங்கினார். தங்கள் அமைப்பை ஒரு பண்பாட்டுக் காவல் அமைப்பு என்று அறிவித்துப் பல இடங்களில் அமைதிக்குலைவுக்கு வழிவகுத்தார்
கே.எஸ் பகவானுக்கு கருநாடக இலக்கியக் கழகத்தின் வாழ்நாள் சாதனை விருது
பகுத்தறிவாளர் பேராசிரியர் பகவான் இந்துத்துவவாதிகளால் தொடர்ந்து மிரட்டப்படும் சூழ்நிலையில், கருநாடக இலக்கியக் கழகம் (Karnataka Sahitka Sahitya Academy)
அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான  ஆண்டு மதிப்புறு விருது அளிக்கப்படவுள்ளதாக அறிவித் துள்ளது. இது 2013 ஆண்டுக்கான சாதனை விருதாகும். அவருடன் மேலும் நால் வருக்கு விருதுகள் அளிக்கப்படவுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகள் வரும் நவம்பர்த் திங்கள் 7ஆம் நாள வழங்கப்படும் என்று கழகத்தின் தலைவர் திருமதி மாலதி பட்டன்செட்டி அறிவித்துள்ளார்.
அனைத்து மதிப்புறு விருதுகளும் இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகிய தளங்களில் சிறப்புமிக்க பணியாற்றுபவர் களுக்கு வழங்கப்படுவன. இலக்கிய உலகிலும் சமூகநீதித் தளத்திலும் ஒருவர் ஆற்றிய அருவினைகளைக் கொண்டு தேர்ந்தெட்டுக்கப்பட்டு விருந்தளிக்கப் படுகின்றது என்று மாலதி கூறியுள்ளார்.
ஒரு பகுத்தறிவாளருக்கு அரசின் அமைப்பான இலக்கியக் கழகம் விருந்தளிப்பதைப் பொறுப்பார்கள இந்துவிய வெறியர்கள்?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...