Thursday, October 22, 2015

மோகன் பகவத்தின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சால் பிகார் தேர்தல் பற்றி எரிகிறது!


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின்
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சால்
பிகார் தேர்தல் பற்றி எரிகிறது!
தி எகனாமிக் டைம்ஸ் படப்பிடிப்பு
புதுடில்லி, அக்.21_ ஆர்.எஸ்.எஸ். தலைவர் பார்ப் பனரான மோகன் பகவத்தின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சால் பிகார் சட்டமன்றத் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது!
மோகன் பகவத்தின் இட ஒதுக்கீடு குறித்த பேச்சு பாஜகவின் தோல்விக்கான அடித்தளம்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி கோரக்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும் போது மீண்டும் இட ஒதுக்கீடு பற்றிய சிக்கலான கருத்தை தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆகவே, நாம் அப்போதைய கால கட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது என்று கூறியிருந்தார்.
அவர் மீண்டும் இட ஒதுக்கீடு குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். இட ஒதுக்கீட்டின்மூலமே ஒடுக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி மீட்டெடுக் கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மாதம் இட ஒதுக்கீடு குறித்து நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இதழ் என்று கூறிக் கொள்ளும் பாஞ்சன்யாவில்  இரண்டு பக்க அள விற்குப் பேட்டியளித்தார். 
அதில் இட ஒதுக்கீட்டின் தற்போதைய வடிவத்தை மாற்றியமைக்க வேண்டும், மக்களிடம் கருத்து கேட்டபின் தேவையில்லை என் றால் ரத்து செய்யலாம் என்று கருத்தை வெளியிட் டிருந்தார். மோகன் பகவத் ராஜஸ்தானைச் சேர்ந்த பார்ப் பனர்; அவர் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியமான தலைவர்கள் அனைவருமே பார்ப்பனர் கள்தான். பார்ப்பனர்கள் அனைவரும் மோகன் பகவத்தின் இந்தக் கருத்தை எவ்வித மறுப்பும் தெரி விக்காமல் ஆதரிக்கின்றனர். 
கோரக்பூரில் மோகன் பாகவத் பேசிக்கொண்டு இருக்கும் போது 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிகாரில் ஜாதி ரீதியான வாக்குவங்கி தேர்தல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் இருக்கும் அந்த மாநிலத்தில் பாஜக வென்றால் நிச்சயம் உயர்ஜாதி யைச் சேர்ந்த ஒருவரைத் தான் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது (உயர்ஜாதியைச் சேர்ந்த  தலைவர்களைத் தவிர பிற்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் கூட பாஜக வில் பெரிய பொறுப்புகளில் இல்லை. 
அப்படி இருக்க திடீரென்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க எந்த பிகார் பாஜக தலை வர்களும் ஒத்துழைக்க மாட்டார்கள்). வாஜ்பாய் முதல் தற்போதைய ரமன் சிங், சிவ்ராஜ் சவுகான், வசுந்த்ரா ராஜே என அனைவரும் பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினரே  தலைமைப் பதவியில் அமர்ந்துள்ளனர். 
இந்நிலையில் தேர்தலுக்கு முன்பே பிற்படுத்தப் பட்டவரை முதல்வராக அறிவிக்க முடியாது. அதே நேரத்தில் உயர்ஜாதியினரையும் முதல்வர் பதவிக்கு அறிவிக்க முடியாது. ஒன்று கட்சியிலே பிளவை ஏற்படுத்தும் மற்றொன்று  மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும். பிகாரில் சமீபகாலமாக எந்த ஒரு உயர்ஜாதிக்காரரும் ஆளவில்லை என்பது வரலாறு. இதனால் மேலும் இட ஒதுக்கீட்டின் பலன் பெருவாரியான மக்களைப் போய்ச் சேர்ந்துள்ளது.
பிகார் தேர்தல் களம் 70 விழுக்காடு  பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை நம்பி உள்ளது. இட ஒதுக்கீட்டின் பலன் என்பது முக்கியமாக பிற்படுத்தப்பட்ட முதல்வர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தொடர்வண்டி யையே பார்க்காத மிகவும் பிற்படுத்தப்பட்ட நாடோ டிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுள்ளது. முக்கியமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் இவர்களை சென்றடைந்துள்ளன.
மலையை உடைத்த மனிதன்
உயர்ஜாதி முதல்வர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் ஒரு கிராமத்தான், மருத்துவமனைக்குச் செல்லப் பாதையில்லாமல் தன்னுடைய குடும்ப உறுப்பினரை இழந்தார். பாதை வேண்டும் என்று அரசை வலியுறுத்திப் பார்த்து தோற்றுப் போன ஊர் மக்களின் முன்பு, தானே மலையை உடைத்துப் பாதை போட ஆரம்பித்தார். 
1960 ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் ஒரு நாள் தன்னுடைய மண்வெட்டியை எடுக்க ஆரம்பித்த தசரத் மான்ஜி என்ற நபர் 1982-ஆம் ஆண்டு முழு மலையையும் வெட்டி ஊருக்கும், மருத்துவமனைக்கும் பாதை அமைத்துக் கொடுத்தார். முதல்வர் நிதீஷ்குமார் இவரை அழைத்து ஒரு நாள் முதல்வராக்கி கவுரவித்தார். அதன்படி  தசரத் மான் ஜியால் நாடோடி இனத்திற்குப் பெருமை கிடைத்தது.  இது வெறும் 6 விழுக்காடு வாக்காளர்களைக் கொண்ட அந்த இனத்திற்குப் கிடைத்த பெருமை,
இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதியுடன் மான்ஜியின் செயலை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இதனால் தான் பிகாரில் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஜாதி ரீதியான விவகாரங்களில் கைவைக்க தயக்கம் காட்டும். ஆனால், மோகன் பகவத்தின் பேச்சால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் எண் ணத்தில் அச்சம் ஏற்பட்டுவிட்டது. இட ஒதுக்கீடு பற்றிய மோகன் பகவத்தின் கருத்தை அவரது சொந்தக் கருத்து  என்று கூறி ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. 
முக்கியமாக இது மோகன் பகவத்தின் குருநாதர் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்  அமைப்பைத் தோற்றுவித்த வீர் தாமோதர்தாஸ் சவார்கர் என்பவரின் உள்ளத்தில் உதித்த சிந்தனை யாகும். அவர் முழுக்க முழுக்க இந்து வலதுசாரி சிந்தனையைக் கொண்ட பார்ப்பனர். முழுக்க முழுக்க மனுவை அரசியல் சட்டமாக மாற்றி, இந்தியாவைப் புனித நாடாக அறிவிக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியவர்.
இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் இந்துக்களே! அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், முஸ்லீம்களாக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் இந்துக்களே என்று கூறியவர் சாவர்கர்; மேலும் மேலைநாட்டு முற்போக்குக் கருத் துகள் அனைத்தையும் கடுமையாக எதிர்த்து பழைமை வாதத்தைத் திணிக்கும் நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தோற்றுவித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 
அப் போது இருந்து மதரீதியான பிளவுகளைப் பயன்படுத்தி தீவிர இந்துத்துவ  சிந்தனைகளைக் கொண்டவர்களை ஒன்றிணைத்து உருவானதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்தக் காவி அமைப்பின் கொள்கை என்பது தீவிர இந்துத்துவவாதிகளின் சிந்தனையில் உள்ளவற்றைக் கொண்டு உருவானது.  மோகன் பகவத் மிகவும் கவனமாக சிறுபான்மை யினருக்கு எதிராக பெரும்பான்மையாக உள்ள இந்துக்களை திரட்டவேண்டும் என்ற நினைப்பில் விடுத்த அறிக்கையும், வளர்ச்சி என்று பேசிக்கொண்டு இருந்த பாஜகவினர் தங்களது வேட்பாளர்களை ஜாதி ரீதியில் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்ததையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அப்கி பார் மோடி பை சர்கார் (இந்த முறை அடிக்கடி முடிவை மாற்றும் அரசு)  சில நாட்களுக்கு முன்புவரை பிகாரில் எங்கு பார்த்தாலும் மோடியும், அமித்ஷாவும் தெரிந்தார்கள். ஆனால், தற்போது தோல்வி உறுதி என்று ஆகிவிட்ட நிலையில், நடக்க விருக்கும் தேர்தலில் மக்களைக் கவர மோடி, அமித்ஷா இருவரையும் கழற்றிவிட்டு அஸ்வினி சவுபே என்ற பார்ப்பனீய பிகார் தலைவர், சுஷில் குமார் மோடி என்ற பனியா, சி.பி.தாக்குர் என்ற உயர்ஜாதியினரை முன்னிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் வரிசையில் வேண்டா வெறுப்பாக ஹுக்கம்தேவ் யாதவ் என்ற மிகவும் பிற்படுத்தப் பட்டவரை தேர்தல் பிரச்சாரப் பதாகையில் சேர்த் துள்ளனர்.
அதே போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச நிலம், பெண்களுக்கு ஸ்கூட்டி என்று மனம் மயக்கும் வாசகங்களைக் கூறியுள்ளனர்.  நடந்து முடிந்த இரண்டு கட்ட வாக்குப் பதிவில் லாலுபிரசாத் மற்றும் முதல்வர் நிதீஷ் குமார் இரு வருக்கும், மக்களிடையே அமோக ஆதரவு கிடைத் துள்ளதாக பாஜக மேலிடத்திற்குத் தகவல் சென் றுள்ளது இந்த நேரத்தில் மோகன் பகவத்தின் பேச்சும் பாஜவிற்கு பிகாரில் குழியைப் பறிக்கும் என்றே தெரிகிறது. அபீக் பர்மான் எழுதிய எகனாமிக் டைம்ஸ் (20.10.2015) கட்டுரையின் தமிழாக்கம்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...