Total Pageviews

Thursday, October 15, 2015

பெரியாரின் கொள்கை முழுமையாக செய்து முடிக்கப்பட்டதா?

பெரியாரின் கொள்கை முழுமையாக செய்து முடிக்கப்பட்டதா?
இடஒதுக்கீட்டால் தகுதி - திறமை பாதிப்பா?
நாமக்கல் பெரியார் பயிற்சிப் பட்டறையில் இருபால் மாணவர் கேள்விகளுக்குத் தமிழர் தலைவர் பதில்


நாமக்கல், அக். 15- தந்தை பெரியார் கொள்கை முழுமையாக நிறைவேற்றப்பட்டனவா? இட ஒதுக்கீட்டால் தகுதி - திறமை பாதிக்கப்படுமா என்பது போன்ற கேள்வி களுக்கு, நாமக்கல்லில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், பயிற்சியாளர் கேள்விகளுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பதில் வருமாறு:- 4.10.2015 அன்று நாமக்கல் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறையின் நிறைவு நாளன்று, மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.
அவரது பதில் வருமாறு:
தந்தை பெரியார் கூறிய புரட்சி ஏற்படும் காலம் வந்துவிட்டதா?
கேள்வி: தந்தை பெரியார் கூறிய புரட்சி ஏற்படும் காலம் வந்துவிட்டதா?
தமிழர் தலைவர் பதில்: காலம் கனிந்துகொண்டு இருக்கிறது. அந்தக் காலம் அவ்வளவு சீக்கிரமாக வராது. ஏனென்றால், நம் முன்பு இருக்கக்கூடிய பணி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இருக்கக்கூடிய ஜாதி, தீண் டாமை, பெண்ணடிமைத்தனம் இவை ஆண்டாண்டு காலமாக வேரூன்றிக் கிடந்த ஒன்று. அதனுடைய வேர்கள் அங்கிங்கெனாதபடி அறுந்துகொண்டிருக்கிறது. எனவே, இப்பொழுது மிகப்பெரிய அளவில் ஜாதிக்கு மவுசு குறைந்திருக்கிறது.
தீண்டாமையை வெளிப்படையாகச் சொல்ல முடியாது; பெண்ணடிமை தனத்தையும் வெளிப்படையாக இன்றைக் குச் சொல்ல முடியாது. அப்படி சொல்கின்றவர்கள் இன்றைக்கு பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால், அந்தக் காலம் இன்னும் வரவில்லை, அதே நேரத்தில் காலம் கனிந்து வந்து கொண்டிருக்கிறது.
அய்யாவின் கொள்கைகளை முழுமையாக செய்து முடித்தார்களா?
கேள்வி: அறிஞர் அண்ணா அதிகாரத்தின்மூலம் அய்யாவின் கொள்கைகளை முழுமையாக செய்து முடித்தார்களா? அண்ணாவிற்குப் பின் வந்தவர்கள் செய்து முடிப்பார்களா?
தமிழர் தலைவர் பதில்:  அண்ணா அவர்கள் முதல மைச்சராக இருக்கும்பொழுது, இதே நாகரசம்பட்டியில் பேசும்பொழுது, எனக்குக் கிடைத்திருக்கின்ற இந்த அதிகாரம் - முழு அதிகாரம் படைத்த ஆட்சியல்ல; எனவே, இந்த ஆட்சியை நான் விட்டுவிட்டு, உங்களோடு பழைய மாதிரி பிரச்சாரம் செய்ய வரவா? அல்லது இந்த ஆட்சியை நடத்தவா? நீங்கள் சொல்வதுபோன்று நடப்பதற்குத் தயாராக இருக்கிறேன். நீங்கள் நினைக்கின்ற அளவிற்கு உடனடியாகச் செய்கின்ற அளவிற்கு ஆட்சி அதிகாரம் எனக்கு வரவில்லை என்று சொன்னார்.
உடனே தந்தை பெரியார் அவர்கள், எனக்குத் தெரியும்! இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களால் என்ன செய்ய முடியுமோ, அதனை செய்யுங்கள் என்று சொன்னார்.
எனவே, அந்த வகையில், எது நடந்தாலும் நமக்குச் சிறப்பானது. அண்ணா அவர்கள் காலத்தில், ஒரு சிறப்பான சமூகப் புரட்சி நடைபெற்றது. பாலம் கட்டுவதோ மற்றப் பணிகளை செய்வதாலோ அதற்கெல்லாம் எதிர்ப்பு இருக்காது. அவை எல்லாம் வளர்ச்சிப் பணிகளாகும்.
ஆனால், சமுதாய சிந்தனைகளில், அடித்தளத்தை மாற்றுவது என்பது இருக்கிறதே, அது மக்களின் நம்பிக்கை களை எதிர்த்து. மண்டல் கமிஷனில் சொன்னார்கள், தெருக்களில் அந்தச் சண்டைகள் நடப்பதில்லை. அந்தப் போராட்டத்தை நடத்தவேண்டிய இடம் எதுவென்றால், மக்களின் மூளைகளில் என்று சொன்னார்கள்.
அப்படி வரும்பொழுது, ஆட்சியாளர்கள் உடனே அதனைச் செய்து முடித்துவிட முடியாது; காரணம், இது மாநில ஆட்சி. மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற ஆட்சிகள், கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகின்றன. எண்ணங்கள் வரும்பொழுது, அந்த வாய்ப்பும் வரும். உதாரணத்திற்கு பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமல் இருந்தது; பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிகவும் அரும்பாடு பட்டு, இந்து சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து, நிறைவேற்றிட முனைந்தார்.
ஆனால், பெண்களுக்குச் சொத்துரிமை என்று வரு கின்றபொழுது, காங்கிரசில் இருந்த சனாதனிகளே விட வில்லை. நேருவாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், ராஜேந்திர பிரசாத் போல இருந்த சனாதனிகள். அதனால் வேதனைப்பட்டு, அம்பேத்கர் அவர்கள், தன்னுடைய அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறினார்.
எதற்காக வெளியேறினார் என்றால், பெண்ணுரிமைக் காக, பெண்களின் சொத்துரிமைக்காக வெளியேறினார். கொள்கைக்காகத்தான் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வெளியேறினார்.
அதே இடத்தில், இன்றைக்குப் பக்குவம் அடைந்தத னால், தி.மு.க. அங்கம் வகித்த யு.பி.ஏ. ஆட்சியில், 2005 ஆம் ஆண்டு பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் நிறை வேறியது. அதற்கு முன்னதாகவே 1990 திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது ஆண்களுக்கு உள்ளது போலவே. இன்று மகனுக்கும் சொத்தில் எவ்வளவு உரிமை உண்டோ? அதே அளவு மகளுக்கும் உண்டு. நிறைய பேருக்கு இந்த விவரங்கள் தெரியவில்லை.
தமிழ்நாடு சுயமரியாதை திருமணச் சட்டம் வடிவம் செல்லுபடியாகும்,
தமிழ்நாடு என்று சென்னை மாநிலத்திற்குப் பெயர் மாற்றம்,
இரு மொழிக்கொள்கை; தமிழ், ஆங்கிலம் மட்டும், இந்திக்கு இடமில்லை
மேற்கண்ட மூன்றையும் நிறைவேற்றினார் அண்ணா அவர்கள்.
அதற்குப் பிறகு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகவேண்டும் என்கிற மிகப்பெரிய ஒரு சமுதாயப் புரட்சியை செய்தவர் நம்முடைய கலைஞர் அவர்கள்.  அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள், அவ்வழக்கினுடைய தீர்ப்பு இன்னும் வரவில்லை.
ஆகவேதான், ஆட்சிக்கு வருகின்றவர்கள் எல்லாவற் றையும் செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஓட்டு வாங்குகிற கட்சி எதுவாக இருந்தாலும், நூற்றுக்கு நூறு திராவிடர் கழகம் போல் கொள்கை ரீதியாக இருக்க முடியாது. ஏனென்று கேட்டால், அவர்கள் வைதீகர்களு டைய ஓட்டுகளையும் வாங்கவேண்டும்; மூடப் பழக்கங்கள் உள்ளவர்களின் ஓட்டுகளையும் வாங்கவேண்டும். அதனால், அவர்கள் வளைவு, சுளிவு, நெளிவுகளில்தான் செல்வார்கள்.
கட்சிக்கும், இயக்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், மக்களைத் தன் பின்னால் அழைத்துச் செல்வது இயக்கம்; மக்களின் பின்னால் செல்வது அரசியல் கட்சி.
ஆகவேதான், மக்கள் பின்னால் செல்லவேண்டும் என்கிறபொழுது, அவர்களுடைய இஷ்டத்திற்குச் செய்ய முடியாது. நாமம் போடுகின்றவர்களின் ஓட்டுக்களை வாங்கும்பொழுது, அந்த வேடம் போடவேண்டும்; விபூதி பூசுகின்றவர்களின் ஓட்டை வாங்கும்பொழுது, அவர்களின் வேடம் போடவேண்டும்; குல்லா போடுகின்றவர்களின் ஓட்டை வாங்கும்பொழுது குல்லா அணியவேண்டும். இதுதான் எதார்த்தமான நிலையாக உள்ளது.
ஆகவேதான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், தேர்தலில் நிற்காதீர்கள்; அப்படி நின்றால், நம்முடைய கொள்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்விடும். ஆனால், தேர்தலில் நிற்கின்றவர்களிடம் வேலை வாங் கலாம்; எவ்வளவுக்கெவ்வளவு வேலை நடைபெறுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு லாபமாகும். அதுதான் நம்முடைய அணுகுமுறையாகும்.
ஒருவரை கையெடுத்துக் கும்பிடுவது முட்டாள்தனமா?
கேள்வி: கோவிலுக்குச் சென்று முட்டாள் மனிதன் சாமியைக் கையெடுத்துக் கும்பிடுகிறான். நாம் ஒருவரை ஒருவர் வரவேற்கும்பொழுது கையெடுத்துக் கும்பிடுவதை வரவேற்கிறோம், அது முட்டாள்தனமா?
தமிழர் தலைவர்: முட்டாள்தனம் அல்ல; மரியாதைக் காட்டுவதற்காக அதனைச் செய்கிறோம். வணக்கம் என்று சொல்வதற்கு ஒரு அடையாளமாக அதனைச் செய்கிறோம்.  அதில்கூட மாற்றம் வரவேண்டும் என்று நாம் சொல்கி றோம். வெள்ளைக்காரன் ஹலோ என்று கையைக் குலுக்கு வான்; முஸ்லிம் என்ன செய்வார்கள், ஒருவரை ஒருவரை கட்டித்  தழுவிக் கொள்வார்கள். ஆனால், இந்த அர்த்த முள்ள இந்துமதவாதி என்ன செய்வான் தெரியுமா? கும்பிடு வார்கள்; 
அதனுடைய நோக்கம் என்னவென்றால், கிட்டே வந்துவிடாதே, தள்ளியே நில்! தொட்டு விடாதே! என்பதற் காகத்தான் கும்பிடு போடுவது. அதனால், கும்பிடு போடு வதை நிறுத்திவிட்டு, ஹலோ என்று கையைக் குலுக்க வேண்டும், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந் தாலும். அதனை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமா கும். ஒரு மரியாதைக்காகத்தான் கும்பிடுகிறோம். ஒரு அடையாளத்திற்காக வணக்கம் சொல்லுகிறோம். உணர்வு களைக் காட்டுவதற்கான ஒரு வழியாகும் - அதுவும் தற்கா லிக வழியாகும். சரியான பாதை கைகுலுக்குவதுதான்.
நாகம்மையார் புகைப்படம் இல்லையா?
கேள்வி: நாகம்மையாருக்குப் பிறகு வந்தவர் மணியம்மை; அவருடைய புகைப்படம் இருக்கும்பொழுது, ஏன் நாகம்மையார் புகைப்படம் இல்லை?
தமிழர் தலைவர்: நாகம்மையார் புகைப்படம் இல் லையா? நீங்கள் சரியாகப் பார்க்கவில்லை. அவர்களுடைய படம் இருக்கிறது. நாகம்மையார் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது; அந்தப் படத்திற்குக் கீழே நாகம்மையார் என்று எழுதி வைக்கவேண்டும் போலிருக் கிறது. ஆகையால், இந்தக் கேள்வி தவறு, திருத்தப்பட வேண்டிய கேள்வியாகும்.
கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கழகத்தின் செயல்பாடுகள் தெரிவதில்லையே!
கேள்வி: கல்லூரி மாணவ, மாணவிகளிடம்  பெரியாரின் கருத்துகளும், திராவிடர் கழகத்தின் கொள்கைகளும் கழகத் தின் செயல்பாடுகள் தெரிவதில்லை. இதில் உங்களுடைய தலைமை என்ன செய்யப் போகிறது?
தமிழர் தலைவர்: பிரச்சாரங்கள் ஆங்காங்கே நிறைய நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது நடை பெறும் பெரியார் 1000 என்கிற திட்டம் அந்தப் பணியைச் செய்வதற்காக எடுத்திருக்கின்ற அருமையான முயற்சியா கும். அந்தப் பெரியார் 1000 நிகழ்ச்சியை எல்லோரும் சென்று பார்த்தால், அய்யா யார்? அவருடைய பணி என்ன? என்பது தெளிவாகத் தெரியும். பிரச்சாரங்களில் முந்தைய காலகட் டங்களைவிட அதிகமான அணுகுமுறைகளை செய்கின் றோம். 
அதைவிட உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல் கிறேன். கிளவுட்  என்று இப்பொழுது சொல் கிறார்கள்.  பேஸ்புக், டுவிட்டரில் கிளவுட்டில் நம்முடைய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், பெரியார் உயராய்வு மய்யம் ஒரு தனி கணினிப் பிரிவை ஏற்படுத்தி, பெரியார் கிளவுட்- பெரியார் புதிர் என்று பெரியார் சம் பந்தப்பட்ட அத்துணை செய்திகளையும், ஒரு பொத்தானை அழுத்தினால், அங்கேயே வருகின்ற மாதிரி ஏற்பாடு செய்து, இளைஞர்கள் மிக எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் செய்திருக்கிறோம். அது பரவினால், மாணவர்கள் மத்தியில் ஒரு நல்ல செல்வாக்கு வரும். ஆகவே, அந்தப் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கி றோம். நீங்கள் சொல்வதுபோன்று, அடைய வேண்டிய தூரம் - இலக்கு அதிகமாக இருக்கிறது. அதனை உணர்ந் திருக்கிறோம்; அதனை நடைமுறைப்படுத்துவோம்.
பெரியார் அவர்கள் தேர்தலில் வாக்களித்து இருக்கிறாரா?
கேள்வி: தேர்தல் அரசியலை எதிர்த்துள்ள நம் அய்யா அவர்கள், தேர்தலில் வாக்களித்து இருக்கிறாரா?
தமிழர் தலைவர்: வாக்களித்திருக்கிறார். திருச்சி பெரியார் மாளிகையில் அய்யா இருக்கும்பொழுது, அய்யா வாக்களித்திருக்கிறார். அய்யாவிற்குப் பிறகு பெரியார் தொண்டர்களான நாங்களும் வாக்களித்தோம். நாம் எதிர்நீச்சல் அடிப்பவர்கள்; உண்மையைச் சொல்பவர்கள். சில பேர் என்னிடம் வேடிக்கையாக சொல்வார்கள்,  நீங்கள் ஓட்டு போட்டு, எந்த வேட்பாளரும் வெற்றி பெற்றதில்லை என்று. அது உண்மையல்ல. வாக்குரிமையை நாம் கட்டா யம் பயன்படுத்தவேண்டும். அப்படி பயன்படுத்தவில்லை என்றால், அது ஜனநாயக விரோதமாகும்.
தேசமே இல்லாத ஒரு இனம் அண்மைக்காலம் வரையில் ஒரு இனம் உண்டு என்றால், அது யூதர் இனமா கும். அந்த யூதர்கள் இஸ்ரேல் என்கிற நாட்டை உருவாக் கினார்கள். யூதர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். நன்றாகப் படித்தவர்கள், செல்வாக்குள்ளவர்கள், அதிகாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் அதிகத் துறைகளில் இருப்பவர்கள். 
 உலகத்தில் எந்த மூலையில் யூதர்கள் இருந்தாலும், அவர்களுடைய நாட்டில் தேர்தல் என்று சொன்னால், அந்த நாளில் எல்லோரும் அவர்களுடைய இஸ்ரேல் நாட்டிற்குச் சென்று வாக்களித்துவிட்டுத் திரும்புகிறார்கள். ஆகவேதான் வாக்களிப்பது என்பது நம்முடைய கடமையாகும். ஆகவே, தந்தை பெரியார் அவர்கள் தேர்தலில் நின்று எனக்கு வாக்களியுங்கள்  என்று கேட்டதில்லையே தவிர, தேர்தலில் யாரை ஆதரிக்கவேண்டும்; யாரை எதிர்க்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
கேள்வி: சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டினால் பயன் ஏற்பட்டுள்ளதா?
தமிழர் தலைவர்: நியாயமாகப் பார்த்தால், அவர் களுக்கு இன்னும் கூடுதலான சதவிகிதம் கிடைக்க வேண்டும். இந்தியாவில் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது. தமிழ்நாட்டில்தான் நாம் முதன்முறையாக செய்து வெற்றி பெற்றிருக்கிறோம். அது நல்ல பலன் பெற்று இருக்கிறது. அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டை கலைஞர் அவர்கள் கொடுத்ததும், திராவிடர் கழகம் அதனை தீவிரமாக ஆதரித்தது. ஆந்திராவில் இது போன்று மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டை தாழ்த்தப்பட்ட ஒரு பிரிவினருக்குக் கொடுத்ததை  சட்டப்படி செல்லாது என்று செய்துவிட்டார்கள். ஆனால், இங்கே சட்டப்படி செல்லுபடியாகும் என்பதில், அதிலுள்ள நீக்கு போக்கோடு ஆராய்ந்து, எல்லோரையும் கலந்தாலோசித்து அதனை கலைஞர் அவர்கள் செய்தார். அதனால், அது சட்டப்படி இன்று இருக்கிறது.
இன்னுங்கேட்டால், யார் ரொம்ப அடியில் இருக்கிறார் களோ அவர்களைக் கைதூக்கிவிடுவதுதான் அவசியமா கும். யார் நீண்ட நாள்களாக பசியோடு இருக்கிறார்களோ அவர்களுக்கு உணவளிப்பதுதான் அவசியம்.
நான் அடிக்கடி சொல்வேன், தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்டவர்களாக இருந்தாலும், அவர்களில் முன்னேறி யவர்கள் இரண்டாவது வரிசையில் இருக்கட்டும்; காலங் காலமாக பின்தங்கியிருப்பவர்கள் அதிலுள்ள அருந்ததியர் சமுதாயம்தானே. கலைஞர் கொடுத்த இட ஒதுக்கீட்டினால் தானே அவர்கள் கொஞ்சம் முன்னேறியிருக்கிறார்கள். அவர்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்களோ, அத்தனை சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். 
ஆனால், முதலிலேயே அதிகமாகக் கொடுத்து, அது கெட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு முன்னோட்டம் போல மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்திருக்கிறார்கள். அது மறுபரிசீலனை செய்து செய்யக்கூடிய காலகட்டம் வரும். நாம் விழிப்பாக இருந்து, நாம் ஒற்றுமையாக இருந்து, நம்முடைய சக்தியைத் திரட்டிக் காட்டினால், எந்த அர சாங்கத்தையும் வேலை வாங்கலாம் என்பதில் சந்தேக மில்லை.
உங்களுக்குப் பெரியாரிடம் பிடித்தது எது?
கேள்வி: எந்தக் காரணத்தினால் உங்களுக்குப் பெரியாரைப் பிடித்தது?
தமிழர் தலைவர்: அய்யாவைப்பற்றி என்னுடைய ஆசிரியர் சொல்லியிருக்கிறார்; நானும் படித்திருக்கிறேன். 1944 ஆம் ஆண்டு சேலம் மாநாட்டிற்கு ஒரு மூன்று மாதத்திற்கு முன்பாக கடலூரில், அய்யாவைப் பார்த்ததும், ஒருவர் குறுக்கே வந்து சத்தம் போடுகிறார், ஏ! ராமசாமி நாயக்கா, பேசாதே, நிறுத்து! என்று.
அய்யா அதுபற்றி கொஞ்சம்கூட சலனப்படவில்லை, இந்த நிகழ்வு என் சிறிய வயதில் என்னுடைய மனதில் பதிந்த விஷயம் இது. அந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மழை பெய்ததால், அய்யா அவர்கள் சிறிது நேரம்தான் உரையாற்றினார். கை ரிக்ஷாவில் அய்யா வருகிறார். அப்பொழுது அவர்மீது செருப்பை வீசினார்கள். 
கொஞ்ச தூரம் வந்ததும், அய்யா அவர்கள் ரிக்ஷாவைத் திருப்பச் சொல்கிறார். ரிக்ஷா கொஞ்ச தூரம் திரும்பச் சென்றுவிட்டு, மீண்டும் அதே வழிக்கு வருகிறது. நாங்கள் எல்லாம் ரயில் நிலையத்தில் இருக்கும்பொழுது, அய்யா அவர்கள் நான் ஏன் ரிக்ஷாவை திருப்பச் சொன்னேன் தெரியுமா? யாராவது ஏன்? என்று கேள்வி கேட்டீர்களா? என்று கேட்டு, பெட்டியைத் திறந்தார். ஒரு செருப்பை வீசினார்கள்; கண்டிப்பாக இன்னொரு செருப்பையும் வீசுவார்கள் என்று நினைத்துதான், நான் ரிக்ஷாவை திருப்பச் சொன்னேன். நான் நினைத்ததுபோல, இன்னொரு செருப்பையும் வீசினார்கள். அதையும் எடுத்துக்கொண்டு வந்தேன் என்றார்.
எதிர்ப்பைப்பற்றி கவலைப்படாத ஒரு தலைவர் என்று பார்த்தவுடன், என்னை அறியாத ஒரு ஈர்ப்பு எனக்கு ஏற் பட்டது. அதுமட்டுமல்ல, இன்றுவரையில்கூட, என்னையே நான் பாராட்டிக் கொள்கின்ற ஒரு விஷயம், நான் பெரியாரை, என்னுடைய வாழ்நாள் தலைவராகத் தேர்ந்தெடுத்ததுதான். ஏனென்றால், மனதில் நினைப்பதை அப்படியே பேசக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம்தான். அதை அனுமதிக்கின்ற ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான் என்கிற காரணத்திற்காக, பெரியார் அவர் களிடம் உள்ள ஈர்ப்பு நாளுக்கு நாள் வளர்ந்திருக்கிறதே தவிர, அது குறைந்ததே கிடையாது.
இட ஒதுக்கீட்டின் பயன் என்ன?
கேள்வி: சமுதாயத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்த வர்கள் பணம் கொடுத்து வேலைக்குச்
சென்றுவிடுகிறார்கள்; ஆனால், தகுதி இருந்தும், பொருளாதார வசதி இல்லாத வர்கள் அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை. இங்கு இட ஒதுக்கீட்டின் பயன் என்ன?
தமிழர் தலைவர்: இட ஒதுக்கீட்டிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. பணம் கொடுக்கிறார்கள் என்பது இடையில் ஏற்பட்டது. ஆரம்பத்தில் பணம் கொடுத்துதான் வேலைக்கு வந்தார்கள் என்பது இல்லை. இட ஒதுக்கீடு இருந்தால், கட்டாயம் அவர்கள் பணியிடங்களை நிரப்பித் தான் ஆகவேண்டும். அதனைக் குறைத்துவிட முடியாது.
பணியிடங்களை நிரப்பவில்லை என்றால், நீதிமன்றத் திற்குச் செல்லலாம். ஆகவே, அந்த வாய்ப்புகள் எல்லாம் இருக்கிறது. 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படுமா?
பதில்: அரசியல் அமைப்புச் சட்டம் மாற்றப்படும் பொழுது, 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படுமா?
தமிழர் தலைவர்: ஆட்சி மாறி, அரசியல் சட்டத்தை அறவே மாற்றுகிறோம் என்று வந்தால், நிச்சயம் ஆபத்து ஏற்படக்கூடும். ஏனென்றால், இப்பொழுது அரசியல் சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. அந்த அரசியல் சட்டமே மாறுகிறது


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: