உலகில் முதன் முதலாக நடக்கிறது!
மோடிமீது பன்னாட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு : தென் ஆப்பிரிக்க அரசு தொடுத்தது
கேப் டவுன் அக் 13 ஆப்பிரிக்காவின் காந்தி என்று அன்புடன் அழைக் கப்படும் நெல்சன் மண் டேலாவை, பிரகாஷ் சிங் பாதலுடன் ஒப்பிட்டுப் பேசிய மோடி மீது தென் ஆப்பிரிக்க அரசு பன் னாட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந் தது. ஒரு நாட்டுப் பிர தமர் மீது இன்னொரு நாடு வழக்குத் தொடுப் பது இதுதான் முதலாவ தாகும்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 114ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது எப்போ தும் போல் தன்னுடைய பதவி, தான் இருக்கும் இடம், தனது சொல்லின் வலிமை குறித்து சிறிதும் சிந்திக்காமல் பஞ்சாப் முதல் வர் பிரகாஷ்சிங் பாதலை இந்தியாவின் நெல்சன் மண்டேலா என்று புகழாரம் சூட்டினார்.
அரசியல் காரணங்களுக்காகவே பிரகாஷ் சிங் பாதல் சுமார் 20 ஆண்டு கள் சிறைவாசம் அனுப விக்க நேர்ந்தது என்றும் கூறினார். நெருக்கடி நிலையின் போது ஆட்சி யாளர்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்த காரணத்தால் பாதல் போன்ற தலைவர்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டதாகவும் தனது பேச்சின் போது மோடி குறிப்பிட்டார்.
யாரிந்த பாதல்?
(பிரகாஷ்சிங் பாதலின் தொகுதியான பட்டிண் டாவில் தான் இந்தியா விலேயே அதிக அளவு போதைப்பொருள் கடத்த ல் நடந்துள்ளது என்றும் சர்வதேச போதைப் பொருள் கடத்தலின் முக்கிய வழித் தடமாக பண்டிண்டா உள்ளதாகவும் ஓராண் டிற்குள் சுமார் 60-க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக வும் இந்தியா டுடே (28.5.2014) செய்தி வெளி யிட்டிருந்தது.
கொலம்பியா நாட்டில் உள்ள காட்டஜீனா விமான நிலை யத்தில் கைது செய்யப் பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்களில் பெரும்பாலோர் போதைப் பொருள்கள் பஞ்சாப் மாநிலம் பட்டிண்டாவி லிருந்து கைமாற்றப்படுவ தாக கூறியுள்ளனர். (national geographic channel Documentary).
இவ்வளவு குற்றப் பின்னணி கொண்ட ஒரு தொகுதி உறுப்பினரின் சொத்து மதிப்பு குறித்து இன்றளவும் பெரிய விவா தித்திற்குரிய பொருளாக உள்ளது. தெ. ஆப்பிரிக்கா அரசின் கருத்து
மோடி தனது பேச்சு குறித்து பெருமையுடன் சமூக வலைதளத்திலும் குறிப்பிட்டிருந்தார். அதில் இந்தியாவின் நெல்சன் மண்டேலா பிரகாஷ் சிங்பாதல் என்று எழுதியிருந்தார். இந்த விவகாரம் டிவிட்டர் நிறுவனம் மற்றும் பத்திரிகை செய்திகள் மூலமாக தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தின் கவனத் திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
உடனடியாக தென் ஆப்பிரிக்க அரசு, நடவ டிக்கையில் இறங்கியது தென் ஆப்பிரிக்க அரசு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. எங்கள் நாட்டு தேசியத் தலைவர் நெல்சன் மண் டேலா அவரது போராட் டம், அர்ப்பணிப்பு, வாழ்க்கை என பல்வேறு கட்டங்களில் அவரை எந்த ஒரு உலகத் தலைவ ருக்கும் இணையாக வைக்கமுடியாது.
அவரது சில குணநலங்களை ஒப் பிட்டு தென் ஆப்பிரிக் காவின் காந்தி என்று கூறுவார்கள் இருப்பினும் காந்தியின் வாழ்க்கையும், நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையையும் ஒப்பிட முடியாது, மேலும் மோடி யின் இந்த மோசமான ஒப்பீடு என்பது எங்கள் தேசத்தந்தை நெல்சன் மண்டேலாவை அவமா னப்படுத்தியதற்கு ஒப்பா கும், எனவே மோடிமீது நாங்கள் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம், என்று அந்த அறிக்கை யில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மக்கள் போராட்டம்! மோடியின் இந்த அலட்சியமான செயல் பாடு காரணமாக டர்பன், கேப் டவுன் போன்ற பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
இது தொடர்பாக பன்னாட்டு நீதிமன்றத் திற்கான தென் ஆப்பிரிக்க அரசுப் பிரதிநிதி கூறிய தாவது எங்களது அரசு பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது. எங்களது இந்த நடவடிக்கையால் இரு நாட்டிற்கான உறவு கள் பாதிக்கப்படப் போவ தில்லை. தலைவர்கள் மாறலாம்; இருப்பினும் இரு நாட்டிற்கான உற வுகள் என்றும் மாறாது என்று கூறினார்.
இதுகுறித்து பன் னாட்டு நீதிமன்ற வழக் குரைஞர் ஒருவர் கூறும் போது உலகத்திலேயே இது தான் முதல்முறை. ஒரு நாட்டுப் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரின் பொறுப்பற்ற பேச்சால் ஒரு நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்பட்டு அந்த நாடு பன்னாட்டு நீதிமன் றத்திற்குச் செல்வது என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய காரியமல்ல என்று கூறி னார்.
இது குறித்து பாஜக தரப்பில் கூறப்படுவ தாவது, ஒரு நபரின் பெயரை மற்றொருவ ரோடு ஒப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை, மோடி அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார். பிகாஷ் சிங் பாதல் இந்தியாவிற்கு மரியாதைக்குரிய ஒரு தலைவராக பார்க்கப்படு கிறார் என்று கூறியுள் ளது. மோடி மீது பன் னாட்டு நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொட ரப்பட்டது தொடர்பாக பாஜகவோ, மோடியோ எந்த ஒரு கருத்தும் தெரி விக்கவில்லை. இந்த விவ காரம் குறித்து இந்திய ஊடகங்கள் இதுவரை செய்தியையும் வெளியிட வில்லை.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மாட்டிறைச்சி விவகாரத்தால் மோடி தலைமையில் ஆன மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது
- சீற்றம் அடையும் சிந்தனையாளர்கள்
- சென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசியா?
- நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டுவதேபி.ஜே.பி.யின் நோக்கமாக உள்ளது
- மத்திய பிஜேபி அரசின் மதச் சார்பு, சகிப்புத் தன்மையற்ற போக்கை மறைமுகமாக சாடினார் குடியரசுத் தலைவர்
No comments:
Post a Comment