Wednesday, October 14, 2015

நறுக்குகள்!


மும்பையில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில், பிஜேபியைச் சேர்ந்த சுதீந்திர குல்கர்னிமீது சிவசேனைக் காலிகள் மையை வீசி அசிங்கப்படுத்தியுள்ளனர். காரணம் அந்த நூலை எழு தியவர் பாகிஸ்தான்காரர் என்ற ஒரே காரணம்தான். அத்வானி கண்டித்துள்ளார் வழக்கம்போல மோடி கண் டிக்கவில்லை. ஆனால் மகா ராட்டிர முதல்வர் ஆதரிக்கிறார்.
இது ஒன்றும் சிவசேனா காரர்களுக்கோ, பிஜேபிக்கோ புதிதான ஒன்றல்ல. ஏற்க னவே ஓவியர் உசேன் நடத் திய ஓவியக் கண்காட்சிக் குள் புகுந்து கலகம் செய்ய வில்லையா? கிரிக்கெட்  ஆட பாகிஸ்தான் அணி வந்தபோது ஆடு களத்தைச் சேதப்படுத்த வில்லையா? பாசிஸ்டுகள் இப்படித் தானே நடந்து கொள்வார்கள்!
பிள்ளை  விளையாட்டு
சென்னை - சிட்லபாக் கத்தில் விநாயகர் உடைப்பு - காவல்துறையினர் விசா ரணை என்பது ஒரு செய்தி - சிவனேன்னு இருக்கிற விநாயகனை உடைப்பது தேவையில்லாத வேலை. கண்டிக்கத்தக்கதே - ஆனா லும் ஒரு கேள்வி இருக் கிறது; அவரோ விக்னேஸ் வரர் - விக்னம் இல்லாமல் மக்களைக் காப்பாற்றக் கூடிய சக்தி வாய்ந்தவர் என்று சொல்லுகிறார்கள்.
ஆனாலும், அவரையே விக்னப்படுத்தியுள்ளார்களே, அது எப்படி? ஓ, அது ஒரு வெறும் பொம்மை! வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் சொன்னது போல பெரியவர்கள் அந்தப் பொம் மையோடு  நடத்துவது எல்லாம் வெறும் பிள்ளை விளையாட்டே!
மது போதை
சென்னை - திரிசூலத்தில் மது போதையில் ஏற் பட்ட தகராறில் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரை அடித்துக் கொன்றவர்களும் மதுப் போதையில் இருந்தவர்கள் தான்; குடி சக தொழிலாளியை அடித்துக் கொல்லுகிறது.
அடுத்த கட்டம் கொன்றவன் சிறைக்குப் போகப் போகிறான்; ஆக கொல்லப்பட்டவன் குடும்ப மும் கொன்றவன் குடும்ப மும் நடு வீதிக்கு வரப் போகும் அவலம்!
அட குடியே உன் குடித் தனத்தை ஒழிக்கப் போவது எந்நாளோ! கொசுறு: மதுரை கண்ணாபட்டியைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர், அவர்தம்பி இருவரும் குடிபோதையில் மோதிக் கொண்டதில் இருவரும் சாவு!
மயானத்தில் குடி புகுந்தனர்
சென்னையை அடுத்த கொரட்டூரில் கடந்த 40 ஆண்டுகாலமாக குடியி ருந்தவர்கள் தமிழ்நாடு அரசின்  திடீர் நடவடிக்கை யால் அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். மாற்றிடம் அளிக்கப்படாததால்  இடிப்பால் அவர்கள் எங்கே போவார்கள்? வேறு வழியின்றி சுடுகாட்டுக்குள் குடியேறி விட்டனர்.
மக்களின் அடிப்படை வசதியைக்கூட செய்து கொடுக்காத அரசு - அவர்களைத் திடீரென்று வெளியேற்றுவது என்ன நியாயம்? இந்த அரசை நம்பினால், அவர்கள் சீக் கிரம் போய்ச் சேர வேண்டிய இடம் சுடுகாடுதானோ!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...