Monday, October 26, 2015

இந்தியாவில் நடக்கும் மத வன்முறைச் சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன

இந்தியாவில் நடக்கும் மத வன்முறைச்  சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன 
கவிஞர் குல்சார்
பாட்னா, அக்.25_ நாட்டில் நடக்கும் சம்பவங் கள் வருத்தமளிக்கின்றன என்று மத வன்முறைகள் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் குல்சார் வருத்தம் தெரிவித்துள்ளளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நாட்டில் தற்போது நடக்கும் மத வன்முறை கள் சம்பவங்கள் வருத்தமானவை. இது போன்ற சம்பவங்கள் நாட்டில் இதற்கு முன்பு நடைபெற்ற தில்லை. இதற்கு முன்னர் ஒருவரின் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிப்பதற்கு பயம் இருந்ததே இல்லை. ஒருவரின் பெயரைக் கேட்கும் முன்பே அவரின் மதத்தை கேட்கும் சூழல் உருவாகும்.

எழுத்தாளர்கள் அரசியல் புரிகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், ஓர் எழுத்தாளர் எப்படி அரசியல் செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சமூகத்தின் மனசாட்சியைப் பிரதி பலிப்பவர்கள் தான் எழுத்தாளர்கள். அவர்கள் தங்களது வேலையைதான் செய்கிறார்கள் என்று கூறினார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...