Monday, October 26, 2015

பா.ஜ.க. ஆட்சியில் பாசிசம் தலைவிரிக்கோலம் ஜாதி அமைப்பு பற்றி விமர்சித்து எழுதிய கர்நாடக தலித் எழுத்தாளர்மீது தாக்குதல்

பா.ஜ.க. ஆட்சியில் பாசிசம் தலைவிரிக்கோலம் ஜாதி அமைப்பு பற்றி விமர்சித்து எழுதிய கர்நாடக தலித் எழுத்தாளர்மீது தாக்குதல்
பெங்களூரு, அக். 25_- எழுத்தாளர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும் படுகொலை செய்யப்படுவது மற்றும் அதிகரித்துவரும் சகிப்பின்மையை எதிர்த்து 35 எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பிக் கொடுத்து போராட்டம் நடத்திவந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இதழியல் மாணவரான ஹுச்சங்கி பிரசாத் (23) இந்து மதத்திலிருந்து உருவான ஜாதி அமைப்பு பற்றி விமர்சித்து எழுதியதற்காக அம்மாநிலத்தை சேர்ந்த சிலர்  தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாண வர்களுக்கான விடுதியில் தங்கியிருந்த பிரசாத்தை, அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள் ளனர். மேலும், தொடர்ந்து இது போல் எழுதி னால் உன் விரல்களை வெட்டுவோம் என்று மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...