Total Pageviews

Saturday, October 24, 2015

‘பெரியார்1000’ தனி அமைப்பாக உருவாக்கப்படும் ‘‘பெரியார் தொண்டறத் தோழர்கள்’’ என்று அது இயங்கவேண்டும்‘‘பெரியார் தொண்டறத் தோழர்கள்’’ என்று அது இயங்கவேண்டும்
பெரியார் 1000 கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை
சென்னை, அக்.23_ பெரியார் 1000 தனி அமைப்பாக உருவாக்கப்படும். ‘‘பெரியார் தொண்டறத் தோழர்கள்’’ என்று தனித் தன்மையுடன் இயங்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் எம்.ஆர். ராதா மன்றத்தில் 21.10.2015 அன்று காலை  பெரியார் 1000 போட்டித் தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள், பெரியார் 1000 தேர்வுப் பணிகளில் பங்கேற்றவர்கள் கருத்து பரிமாற்ற  கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி மூன்றாவது ஆண்டாக, பெரியார் மணியம்மை
பல்கலைக்கழகத்தின் சார்பில் பெரியார் பிஞ்சு சிறுவர் மாத இதழ் இணைந்து 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு முடிய படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு 'பெரியார் 1000' தேர்வு மற்றும் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடிய படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு 'சிந்தனைச் சோலை பெரியார்'
போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இப்போட்டித் தேர்வுகளை சிறப்பாக நடத்திய அனைத்து மாவட்டத் தோழர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார். மேலும், பெரியார் 1000 தேர்வுகள் விரிவுபடுத்துவதற்கான அறிவிப்புகளையும் அறிவித்தார்.
கலந்துரையாடல் கூட்டத்தில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் மணியம்மை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் வீ.அன்பு ராஜ், கழக மாவட்டங்களின் சார்பில் பொறுப்பாளர் கள், பெரியார் 1000 போட்டித் தேர்வு ஒருங்கிணைப் பாளர்கள், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்பட பலரும்  பங்கேற்றனர்.
மாவட்டப் பொறுப்பாளர்கள், பெரியார் 1000 போட்டித்தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் இத்தேர்வை நடத்தியதன்மூலம் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அரக்கோணம் லோகநாதன்,  ஆத்தூர் அறிவுச் செல்வம், தஞ்சை வழக்குரைஞர் அருணகிரி, பட்டுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி வீரய்யன், விழுப்புரம் ப.சுப்பராயன், கள்ளக்குறிச்சி ம.சுப்பராயன், ஆவடி பா.தென்னரசு,  தாம்பரம் ப.முத்தய்யன், தருமபுரி வேட்ராயன், வடசென்னை கோ.வி.கோபால், கும்பகோணம், கிருஷ்ணகிரி பொறுப்பாளர்கள், புழல் இராசேந்திரன்,
மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னரெசு பெரியார், மாநில பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் அழகிரிசாமி உள்ளிட்ட பலரும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கலந் துரையாடல் கூட்ட முடிவில் விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் நன்றி கூறினார்.
தமிழர் தலைவர் கருத்துரை
தமிழர்  தலைவர் ஆசிரியர் உரையாற்றுகையில் பெரியார் 1000 தொடங்கப்பட்டு நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. உழைப்பவர்கள் கடுமையாக நம் பிக்கையோடு பாடுபட்டவர்கள் வெற்றி பெற்றுள் ளார்கள். வழக்கமாக முதலிடம் என்றதும் தஞ்சைதான் பெற்றிருக்கும் என்று நினைத்தேன். ஆத்தூர் கழகத் தோழர்கள் முதலிடத்தையும், அரக்கோணம் தோழர் கள் இரண்டாம் இடத்தையும் பிடித்து ஆரோக்கிய மான போட்டி ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை இருக்க வேண்டும். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற பெரியார் 1000 தேர்வுக்கு உரிய முயற்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டன. எதிர்பார்ப்பு இருக்கும் போது ஏமாற்றமும் ஏற்படு கிறது. நடைமுறைச் சிக்கல் எல்லாம் சொல்லி யுள்ளீர்கள். மற்ற தேர்வுகள் குறுக்கிடாதவகையில், நிரந்தரமாக தேர்வு நடத்திட வேண்டும்.
பெரியார் 1000 தனி அமைப்பு
பெரியார் 1000 தேர்வை நடத்துவதற்காக என தனி அமைப்பாக, நிரந்தரக் குழு அமைக்கப்படும்.  திராவிடர் கழகம், பகத்தறிவாளர் கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் என்பதுமட்டுமன்றி மற்றவர்களும் பெரியார் 1000 தேர்வுக்காக செயல்படவேண்டும். இந்த தேர்வுகளை நடத்தியுள்ள அனுபவத்தில் பாடங்கள் பெற்று, இங்கே நிறைய பேர் வந்துள்ளீர்கள்.
எஸ்.எஸ்.எல்.சி, 12ஆம் வகுப்பு பாடத்திட்டம், தேர்வு முறைகள் இருப்பது போன்று பெரியார் 1000 தேர்வு நடத்தப்பட கழகத் தைத் தாண்டி சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகளில் பலரும் பெரியார் கருத்துகளால் பயன்பட்டோம் என்று கூறுபவர்கள் பெரியார் 1000 தேர்வுக்கு தங்கள் பங்களிப்பை செய்ய முன்வருவார்கள்.
பெரியார் கொள்கைகளை விரும்பி முன்வரும் அவர்களை தொண்டுகளுக்கான மய்யமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெரியார் தொண்டறத் தோழர்கள் ஒத்துழைப்புடன் பெரியார் 1000 தேர்வினை விரிவாக்க வேண்டும்.
சுயமரியாதைத் திருமணம்போல், ஆசிரியர்கள், பெண்களிடம் அடையாளப்படுத்திட வேண்டும். பெரியார் 1000 என்பது தனி அமைப்பாக புது அணியாக உருவாகவேண்டும். அமெரிக்க சட்டத்தில் அதிபர் பதவி ஏற்பு என்பதுபோல், தெளிவாக தேதி நிர்ணயிக்கப்படவேண்டும். ஸ்பான்சர்ஷிப், புத்தகங்கள்,
பரிசுகள்,  நன்றி தெரிவிப்பது, அணுகுவது மற்றும அவர்களைப் பெருமைப்படுத்துவது என எல்லாம் திட்டமிட்டு செய்யவேண்டும்.
பலதரப்பினரையும் இணையுங்கள்!
பெரியார் பற்றாளர்கள், நாத்திகர்கள், இன்னும் ஆத்திகர்களாக இருந்தாலும், பெரியார் கொள்கை பரவுவதற்கு ஒத்துழைப்பவர்கள் என்று அடையாளம் கண்டு அனைவரிடத்திலும் ஆதரவைப் பெற்றிட வேண்டும். பெரியார் 1000 ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றுபவர்களிடையே பணிகளைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
கழகத் தோழர்கள் பின்னணியில் இருக்க வேண்டும். மற்றவர்களை முன்னிலையில் நிறுத்த வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் கூறுகிறார், நான் கட்சிக்காரன் அல்ல, கொள்கைக் காரன் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அந்த வகையில் கொள்கைக்கு ஆதரவைத் திரட்ட வேண்டும்.
பெரியார் 1000 திரும்பத் திரும்ப போட்டி வரும். இன்னும் புதியவை இடம்பெறல் வேண்டும். தன்னம் பிக்கை, தன் முயற்சி ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் பகுதிகள் இணைக்கப்படும். அறிவியல் மனப்பான்மையை (Scientific Temper) வளர்த்திட வேண்டும். எதையும் ஏன் எதற்கு என கேட்பதற்கான  (Sprit of Inquiry) ஊக்கத்தை அளிக்க வேண்டும். பெரியார் 1000 தனியே சின்னம் தந்தை பெரியார் படத்துடன் சுடர் இருக்கவேண்டும்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்தான் நடத்துகிறது. மாநில அளவில், மாவட்ட அளவில் அமைப்புவலையாக (Organizational Network) செயல்படவேண்டும். அதற்கென தனியே கணக்கு பராமரிக்கப்பட வேண்டும். நன் கொடைகள் முறை பின்பற்றப்பட வேண்டும். விழாக்களில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து, அந்த தொகையை பெரியார் 1000 பணிக்கு கொடுக்கிறேன் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
தோழர்களைப் பாராட்டுகிறோம்!
முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பிப்ரவரியில் தொடங்க வேண்டும். அனுபவத்தில் தெரிந்து கொண்டு வளர்த்தெடுக்க வேண்டும். பணியாற்றிய அத்துணைத் தோழர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
பெரியார் 1000 தேர்வில் பணியாற்றுகின்றவர்கள் பெரியார் தொண்டறத் தோழர்கள் ஆவார்கள். தற் போது இரண்டு வகையாக உள்ள மாணவர் பிரி வுடன், ஆசிரியர்கள், கழகத் தோழர்கள், பகுத்தறி வாளர் கழகத் தோழர்கள்,   என அனைவருமே இத்தேர்வை எழுதிட வேண்டும். பெரியாரை வாசித் தவர்கள், பெரியாரை சுவாசித் தவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியில் பாடம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.
அனைவருக்கும் பெரியார் 1000 தேர்வு மூலமாக பெரியார் கொள்கைகள் கொண்டு செல்லப்பட வேண் டும். அடுத்து சிறைக்கைதிகளுக்கு பெரியார் 1000 தேர்வு நடைபெறும். அதன்மூலம் நல்ல பயன் விளையும். நல்லொழுக்க சிந்தனைகள் மேம்படும்.
பெரியார் 1000 பல பிரிவுகள்
இரண்டு பிரிவுகள் மாணவர்களுக்கும், மூன்றாம் பிரிவு ஆசிரியர்களுக்கும், நான்காம் பிரிவு சிறைவாசி களுக்கும், அடுத்து கழகத் தோழர்களுக்கும், இணையத்தின் மூலம் தேர்வு என்று 6, 7 பிரிவுகள் செயல்பட வேண்டும். பெரியார் 1000 பவுண்டேஷன் உருவாக்கப்பட வேண்டும்.
தேர்வு எழுதுவதும், முடிவு வெளியாவதும் ஒரே நாள் என்பதைப்போன்றே, பரிசளிப்புகளும் ஒரே நாளில் நடைபெற வேண்டும். இந்த மூன்றும் மாற்றப்படக் கூடாது. அதன்மூலம் அடுத்த ஆண்டில் மேலும் உற்சாகத்தை அளிப்பதாக இருக்கும்.
அடிப்படையான, ஆக்கப்பூர்வமான சிந்தனை உருவாக்கும் கட்டம் இது. இணையத்தில் (ஆன்லைன்) தேர்வெழுதும்படியாக பல மொழிகளில் உருவாக்கப் படுகிறது. பெரியார் 1000 போட்டித் தேர்வு விரிவு செய்யப் பட்டு ஆசிரியர்கள், சிறைவாசிகள், கழகத் தோழர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பெரியார் 1000 போடடித் தேர்வு நடத்தப்பட உள்ளது.
மேலும், தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் இருப்பதுபோல், இந்தி, ஸ்பானிய மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடத்தப்பட திட்ட மிடப்பட்டுள்ளது. கழகத்துக்கு, இயக்கத்துக்கு அப்பாற் பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
டிசம்பர் 2 விழாவுக்கு பதிலாக சந்தா
என்னுடைய பிறந்த நாள் விழா டிசம்பர் 2 என்று கொண்டாடுவதைக் காட்டிலும், அந்த விழாவை நடத்தக்கூடிய செலவுத் தொகையை விடுதலை சந்தாவுக்கு அளியுங்கள்.
விடுதலைக்கு சந்தா அளிக்கும் நிகழ்வாக இருக்கவேண்டும். அதுதான் மகிழ்வுக் குரியது. என்னை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய செய்தி, உற் சாகப்படுத்துகின்ற செய்தி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துரை யாடல் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: