Friday, July 3, 2015

ம.பி.,யில் நாய்க்கு ஆதார் கார்டாம்



உம்ரி ( ம.பி ), ஜூலை 3- மத்திய பிரதேசத்தில் நாய்க்கெல்லாம் ஆதார் கார்டு கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள உம்ரி என்ற பகுதியில் டாமி சிங் என்ற நாய்க்கு ஒரு ஆதார் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. தகப்பனார் பெயர் சேரு சிங் என்றும், பிறந்த தேதி நவம்பர் 26, 2009 என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உம்ரி பகுதியில் ஆதார் கார்டு கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு ஏஜென்சிதான் இதை கொடுத்திருக்கிறது. இப்போது அந்த ஏஜென்சியின் மேற்பார்வையாளர் அசம்கான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த ஏஜென்சி இதுவரை கொடுத்திருக்கும் ஆதார் கார்டுகளின் பட்டியலை காவல்துறையினர் பார்த்தபோது, அங்கு இதுபோன்ற மற்றும் சில மிருகங்களுக்கும் ஆதார் கார்டு கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
நீண்ட நாட்களாகவே அந்த பகுதி கிராம மக்கள் தங்களுக்கு ஆதார் கார்டு ஒழுங்காக வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்து வந்தனர். அதனையடுத்து அங்கு காவல்துறையினர் சென்று விசாரித்தபோதுதான் நாய்க்கெல்லாம் ஆதார் கார்டு கொடுத்திருப்பது தெரிய வந்தது.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...