Tuesday, June 23, 2015

அடாலியில் இந்துமத வெறியர்கள் நடத்திய கலவரம்

- சதீஷ் தேஷ்பாண்டே

மதவெறி என்ற சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி இரண்டு பொருள்களைத் தருகிறது. ஆங்கில மொழி பேசும் மேலை நாடு களில் இச்சொல், முழுமத சமூகத்தின ராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றோ, அல்லது பொதுவாக மத சமூகத்தினர் கொண்டிருப்பது என்றோ பொருள் தரும். தெற்காசியாவில் இச் சொல்லுக்கு நிலவும் பொருள் அதற்கு எதிர்மாறாக  இருப்பதாகும்; ஒரு மத சமூகத்தினர் பகிர்ந்து கொள்வது அல்லது ஒருமித்த கருத்து கொண்டது என்ற பொருளை அது அளிக்காது. மதத்தினால் விளக்கிக் கூறப்பட்டுள்ள பல மத சமூகங்களிடையே நிலவும் பிரிவினை மற்றும் பகைமை என்ற பொருளை அது அளிக்கிறது. மோடி யுகத்தில் வாழும் இந்தியர்களுக்கு அது கலக்கத்தை ஏற்படுத்தும்  உள்ளு ணர்வை அளிப்பதாக இருப்பதாகும்.  இந்த இரண்டு பொருள்களையும் ஒன் றாக எடுத்துக் கொண்டால்,  மதவெறி என்னும் இச்சொல் மற்றொன்றைச் சார்ந்திருக்கும் ஒரு சொல்லாக ஆகி விடுகிறது.    ஒன்றுக்கொன்று முரண் பட்ட,   ஒற்றுமைகளால் ஏற்பட்ட நாம் என்ற உணர்வையும், பகைமையைத் தூண்டிவிடும் அவர்கள் என்ற உணர் வையும் ஒன்றுடன் ஒன்றை அது இணைத்து விடுகிறது. நம் காலத்தில் இத்தகைய இரட்டைநிலை, சங்க டத்தை அளிக்கும் கேள்வியை எழுப்பு கிறது.  நமது மத சமூகங்களின் மிகுந்த பயனளிக்கும் வடிவங்கள், நம் அனை வராலும் பகிர்ந்துகொள்ளப்பட்ட  அல் லது ஏற்றுக் கொள்ளப்பட்ட லட்சி யங்கள் அல்லது கோட்பாடுகளின்படி அமைந்தனவா அல்லது ஒருவர் மீது மற்றவர் கொண்டிருக்கும் வெறுப்புணர் வால் கட்டமைக்கப்பட்டனவா? என் பதே இக்கேள்வி.

எனது இரு தோழமைப் பணியாளர் களுடன் கடந்த வாரம் அடாலிக்குச் சென்று பார்த்தபோது, இக்கேள்வி என் மீது திணிக்கப்பட்டது. டில்லியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள, அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பரிதாபாத் மாவட்டத்தின் பல்லாபாகர் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம்தான் இந்த அடாலி என்ற கிராமம். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுக் கின்படி 1200 குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்தின் மக்கள் தொகை 7000 பேர்.  மதக்கலவரங்கள் ஏற்பட இயன்ற வாய்ப்புள்ள இடங்களின் பட்டியலில் மே மாதம் 25 ஆம் தேதி முதல் இந்தக் கிராமமும் இடம் பெற்றுவிட்டது. பல்லாண்டு காலமாக நீதிமன்ற வழக்கு களில் சிக்கியிருந்த இக்கிராமத்தின் ஓரிடத்தில் அமைந்திருந்த தற்காலிக மசூதியில்  அக்கிராம முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது, இந்துக்களின் கலவரக் கும்பல் ஒன்று அவர்களைத் தாக்கியது. மூன்று மணி நேரம் நடைபெற்ற, திட்டமிட்டு ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்த வன்முறைகளின்போது, முஸ்லிம் ஆண் களும், பெண்களும் தாக்கப்பட்டனர்; குழந்தைகள் அச்சுறுத்தப்பட்டனர்; வீடுகள் எரிக்கப்பட்டன அல்லது இடிக்கப் பட்டன; உடைமைகளுக்கு சேதமிழைக் கப்பட்டது, கால்நடைகள் திருடிச் செல்லப்பட்டன. இக்கலவரங்கள் நடந்து முடியும்வரை காவல்துறையினர் இந்தப் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. எல்லாம் 

முடிந்தபின் வந்தவர்கள் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களை பல்லாபாகர் காவல் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்; காயம்பட்டவர் களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  அக்கிராமத்தில் வசித்துவந்த 400  முஸ்லிம்களும் தங்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். பெண்களும், குழந் தைகளும் உள்ளிட்ட 150 முஸ்லிம்கள் கடந்த ஒரு வார காலமாக பல்லாபாகர் காவல் நிலையத்தில் முகாமிட்டுள்ளனர். தீக்காயங்கள், கோடாலிவெட்டுகள், முறிந்த எலும்புகளுடன் இக்கலவரத்தின் போது மூன்று பேர் படுகாயமடைந்த போதிலும், எவர் ஒருவரும் கொல்லப் படவில்லை. முஸ்லிம் பெண்கள் அடித்து உதைக்கப்பட்டபோதிலும்,  எவரும் பாலியல் வன்புணர்வு செய் யப்படவில்லை.

இதனால் தெரிவிக்கப்படுவது என்ன வென்றால் - இதைவிட மோசமானதாக வும் இத்தாக்குதல்கள் நடந்திருக்கக்கூடும்; ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை - என்று கூறப்பட்டது, ஒரே படம் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டது போலவும்,  கூட்டிசைப் பாடலின் ஒரு வரி மட்டும் அனைவராலும் பாடப்படுவது போலவும் இருந்தது. இக்கிராமத்தின் ஜாட் இனப் பெரியவர்களிடம் நாங்கள் பேசியபோது, இச்செய்தி தாராளமாகவும், திரும்பத் திரும்பவும் இடம் பெற்றிருந்தது. பெரும் பான்மையின மக்களான  இந்துக்களால் இதனைவிடக் கொடுமையான தீங்கினை ஏற்படுத்தியிருக்க முடியும் என்றாலும், அவர்கள் மிகுந்த கட்டுப்பாடுடன் அவ்வாறு செய்யாமல் இருந்தனர் என்ற செய்தி தாக்குதல் நடத்தியவர்களாலும், அவர்கள் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் உள்ள வேடிக்கை என்னவென் றால், பாதிக்கப்பட்டவர்களும் இதே கருத்தை எதிரொலித்தனர் என்பதுதான்; என்றாலும் ஒரு மாறுபட்ட கோணத்தில் அமைந்த கருத்து அது. நாங்கள் பேசிய அக்கம் பக்கத்திலிருந்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அனைத்தும் வல்ல அல்லாவின் கருணையே  சாவிலிருந்து எங்களைக் காப்பாற்றியது என்றே கூறினர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை நாங்கள் பார்வையிட்டபோது, பேரழிவுக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளின் இடிபாட்டுக் குப்பைகளையும், தீயினால் கருப்பாகிப் போன சுவர்களையும் கண்டு நாங்கள் மனம் நொந்தோம். கட்டுப்பாட்டுடன்தான் தாக்கினோம் என்று அவர்கள் கூறியதற்கு சாட்சியங்களும் காணப்பட்டன. ஆனால் அவர்களின் தாக்குதலுக்கான முக்கிய இலக்காக அமைந்தது முஸ்லிம்கள் தங்களுக்காக ஆதரவு திரட்ட மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள்தாமே அன்றி, உயிர் பலி வாங்குவதோ அல்லது கை கால்களை உடைப்பதோ அல்ல. அங்கு வாழ்ந்த இரண்டு மிகப்பெரிய பணக்கார முஸ்லிம்களின்   வீடுகளும், சொத்து களுமே அதிகப்படியான தாக்குதலுக்கு இலக்காயின. கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஒரு டிராக்டர், டெம்போ உள்பட 12 வாகனங்கள் முற்றிலுமாக நொறுக்கப்பட்டன அல்லது இழுத்துச் செல்லப்பட்டன. விலை உயர்ந்த எருது களும், ஆடுகளும் திருடிச் செல்லப்பட் டன. ஏர் கண்டிஷனர்கள், ரெப்ரிஜி ரேட்டர்கள்,  ஏர் கூலர்கள், வாஷிங் மெஷின்கள், எரிவாயு அடுப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. 

 அழகான வேலைப்பாடமைந்த தளவாடங்கள், மேஜை நாற்காலிகள், அலமாரிகள் எரிக்கப்பட்டன அல்லது உடைக்கப் பட்டன. சுவர்களிலும், தரையிலும் பதிக் கப்பட்டிருந்த ஓடுகள் பெயர்க்கப்பட்டு, உடைத்து நொறுக்கப்பட்டு, ஏழைகளின் வீடுகளைப் போல் அவர்கள் வீட்டுத் தரைகள் காட்சியளித்தன. முதன்மையான இலக்குகள் மீதான இத்தகைய தாக்குதல் களுடன் ஒப்பிடும்போது, மற்ற தாக்குதல் களைப் பெரிதற்றவை எனக்  கூறிவிட முடியாது. எரிக்கப்பட்ட மின்விசிறிகள் மூன்றடுக்கு மலர்கள் போன்று தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு குழந்தையின் புத்தகப் பை ஒரு வீட்டு மூலையில் கிடந்தது; அதன் உள்ளே எரிந்து போன புத்தகங்கள் காணப்பட்டன. சமைய லறைகளில் உடைத்து நொறுக்கப்பட்ட சமை யல் பாத்திரங்கள் சிதறிக்கிடந்தன.

இழைக்கப்பட்ட கொடுமைகளின் அளவு அடாலியை மாறுபட்டதாகச் செய்துவிட்டது. அடாலியை விட்டுச் சென்றுள்ள முஸ்லிம் மக்கள் ஊருக்குத் திரும்பி வருவதற்கு ஜாட் இனத் தலைவர்கள் அளித்த ஊக்கத்தையும், மேற்கொண்ட முயற்சிகளையும் கணக் கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், அண்மைக் கால மதக் கலவர வர லாற்றில்  அடாலி கலவரம் ஈடு இணை யற்றதாக ஆகிவிட்டது, மசூதி கட்டுவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்புக்குப் பிறகு ஒரு கலவரத் திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அறி விக்கப்பட்டுள்ளது.

இக்கலவரத்திற்குத் தேவையான கும்பலைத் திரட்ட அடாலியைச் சுற்றியிருந்த பத்துப் பன்னிரண்டு கிராமங்களில் பொது மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள் ளப்பட்டது. கலவரத்திற்குத் தேவை யான பெண்களைத் திரட்டி ஒரு வாகனத்தில் ஏற்றிவந்தும், ஆண் களுக்கு ஊக்கம் அளித்தும் ஓர் உள்ளூர் பெண்மணி கலவரத்தில்  பெரும்பங்காற்றியுள்ளார். இத்தாக்கு தலை வழிநடத்திச் செல்லக் கூறப்பட்ட காரணங்களும் வழக்கமானவையே. இந்து பெண்கள் கொடுமைப் படுத்தப் படுகின்றனர் என்றும், மசூதி கட்டப்பட இருக்கும் இடத்தைப் பற்றி நீதிமன்றத் தில்  வழக்கு உள்ளது என்றும் கார ணங்கள் கூறப்பட்டன. உண்மையோ இதற்கு நேர் எதிரானது; இந்த இடத்தை முஸ்லிம்கள் தங்கள் தொழுகைக்காக அய்ம்பது, அறுபது ஆண்டு காலத் திற்கும் மேலாகப் பயன்படுத்தி வரு கின்றனர். அரசு ஆவணங்களில் அந்த இடம் வஃக்ப் வாரியத்துக்கு சொந்த மானது என்று பதிவுகள் உள்ளன. 

அந்த இடத்தில் மசூதி கட்டுவதைத் தடுக்க பலப்பல வழக்குகள் தொடுக்கப்பட்ட போதிலும், அனைத்து வழக்குகளும் தோற்றுப் போயின. இறுதியாக இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் தேவையற்ற வழக்குகளைக் கொண்டு வருவதாக வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனால் மசூதி கட்டுவதற்கான எதிர்ப்பாளர்கள் பிடிவாதமாக இருப்பதுடன், அவர் களுக்கான ஆதரவும், அவர்களது பலமும் பெருகி வருகிறது. நீதிமன்றத் தீர்ப்பு அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுமே இல்லை; தங்கள் கிராமத்தில் ஒரு மசூதியைக் கட்டுவதற்கு அவர்கள் எப்போதுமே அனுமதிக்க மாட்டார்கள் என்று ஒரு ஜாட் இனத் தலைவர் கூறினார்.

2002 குஜராத் கலவரங்களின்போது தொடங்கி வைக்கப்பட்ட இந்துத்துவ செயல்பாட்டு மாதிரியின் புதிய சீர் திருத்தப்பட்ட வடிவம்தானா இது என்ற கேள்வியை நம்மை இது கேட்க வைக்கிறது. சமகால இந்துத்துவாவின் திருப்புமுனைக் கல்லாக, முக்கியக் கூறாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்விற்கு சாதாரண அள விலான ஒருதோற்றத்தை அளிக்கும் முயற்சி, 2002 குஜராத் கலவரங்களைப் பற்றிய வினை, எதிர்வினை என்ற புகழ் பெற்ற தத்துவத்தைத் தொடர்ந்து, மேற் கொள்ளப்பட்டது.

 முஸ்லிம்களுக்கு தூண்டில் போடுவது, இந்துத்துவத்தைப் போன்றே பழைமையானது என்றாலும், தற்போது அவர்கள் முன்னுள்ள சவாலே,  சாதாரண மக்களின் பார்வை யில் அதனை நியாயப்படுத்தும் வகை யிலும், தானாகவே அதனை உண்மை என்று அவர்கள் உணரும் வகையிலும்,  எவ்வாறு அதனைச் சாதாரணமானதாக ஆக்குவது என்பதுதான்.

  இதற்கு முன்னெப்போதுமே இந்தியாவில் நடந்தே இராத அளவில் கும்பல் கும்பலாக மக்கள் கொல்லப்பட்டது, இக்கலவரங்களில் மக்கள், கும்பல் கும் பலாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டது ஆகியவற்றின் மூலம் இதனைச் செய்து முடித்ததில்தான் குஜராத் மாதிரி இந்துத்துவா வெற்றி பெற்றிருக்கிறது;

அதே நேரத்தில் இது பற்றி எந்த விதமான வருத்தமும்  அவர்கள் பட்டது போலவே தெரியவில்லை. முதன் முதலாக நடந்த பல நிகழ்வுகளில், வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்தப் படுகொலைக் கலவரத்தில், பெண் களும், வசதிபடைத்த நடுத்தர மக்களும் தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டனர். என்பதும், கலவரம் செய்வதில் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று இருந்த பாகுபாடு உடைத்தெறி யப்பட்டதும், தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் இதில் பங்கெடுத்துக் கொண்டதும்தான். அனைத்திற்கும் மேலாக, இந்நிகழ்ச்சி யில் முக்கிய பங்காற்றியவர்கள் எவரும் எப்போதுமே வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்புக் கோரவோ செய்யாத முதல் கலவரம் இந்த குஜராத் கலவரம்தான். இதற்கு முன்பு, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மதக் கலவரங்கள் நடந் தேறிய பிறகு, கடுமையான கோபத் தைத் தூண்டிவிடும் வகையில் பேசி னார்கள் அல்லது செயல்பட்டார்கள் என்று ம், சில சமூக விரோதச் சக்திகள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு கலவரங்களை விளைவித்தார்கள் என்றும் ஏதேனும் ஒரு விளக்கம், சமா தானம் கூறப்பட்டு வருவதுதான் வழக்கம்.

குறிப்பிடத்தக்க கோட்பாட்டு புதுமைக் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகும், ஒரு வரையறைக்குட்பட்ட வெற்றியைத் தருவதாகவே குஜராத் மாதிரி இருந்தது. அதன் மாபெரும் சாதனை, கூட்டங்கூட்டமாக முஸ்லிம் கள் படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தியதுடன், அதற்காக பெரு மையும் பாராட்டிக் கொண்டதுதான். அதுவரை அனைத்து அரசியல் கட்சி களாலும் பின்பற்றப்பட்டு வந்த, கல வரத்திற்கு விளக்கம் அளிப்பது என்ற நிலை நாட்டப்பட்ட பாரம்பரியத்தில் இருந்த ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டது.  நரேந்திர மோடி பிரதமராக ஆவதற்கு ஒரு தடையாக அது இல்லை என்ற போதிலும்,  வாஜ்பேயியையும், அத் வானியையும் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வந்த ராமஜென்மபூமி பிரச்சாரத்தைப் போன்று தெளிவாக ஆதரவு சேர்ப்பதாகவும் அது இருக்க வில்லை. சுருங்கக் கூறின் குஜராத் மாதிரி வெற்றி பெற்றது: என்றாலும் நிலைத்து, நீடித்து நிற்கும் வெற்றியாக அது  அமையவில்லை.

இவ்வளவு விரைவாக, அடாலி கலவரங்கள் பற்றி அதிக அளவில் சிந்திக்காமல் இருப்பது முக்கியமானது என்றபோதிலும், அடாலி மாதிரியான இந்துத்துவ செயல்திட்டங்கள் நீடித்து நிலைக்க இயன்றவையா என்பது போன்ற பாதிப்புகளைப் பற்றிய ஆய்வு ஒன்றினை நாம் மேற்கொள்ளவேண் டியது அவசியமானதாகும். அது போன்ற தொரு செயல்திட்டத்தில், கொலை, பாலியல் வன்புணர்வு முஸ்லிம்களை கட்டாயப் படுத்தி வெளியேற்றுதல் போன்ற மிகைப்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளாமல் இருப்பதன் மூலம் அரசியல் செல்வாக்கு, ஆதாயம் ஆகியவற்றை இழந்துவிடாமல்,

  தக்க வைத்துக் கொள்ள முடியும். நிரந்தரமாக தங்களைத் தாங்களே அடிமைப்படுத்திக் கொள்ள முஸ்லிம்களைக் கட்டாயப் படுத்துவதன் மூலம் சாதாரணமான முறையிலான அடக்குமுறையை இன் னமும் நீண்டதொரு காலத்துக்கு நிலைக்க வைக்க அது முயற்சிக்கும். இதில் உள்ள முக்கியமான கூறே, அவர்களது குடியுரிமையைக் காலம் மற்றும் தன்மையை வரையறுக்கும் நிபந்தனைகள் விதிக்கப்படும் என்பது தான்.  இரண்டாம் நிலை குடியுரிமை என்ற அடிப்படைக் கோட்பாடு ஒரு முறை நியாயப்படுத்தப்பட்டுவிட்டால், மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ்வது, கலாச்சார ஒருங்கிணைப்பு, இந்து மதத்தின் உள்ளுறை சகிப்புத் தன்மை போன்ற பழைய கதைகளை தாராள மாகவும், துணிவுடனும் அவிழ்த்து விடலாம்.

இவற்றில் பலவும் ஏற்கெனவே நடந்துதான் வருகின்றன.  அடக்கம் நிறைந்த முஸ்லிம்கள் தங்களின் இந்து புரவலர்களுடன்  ஒரே தட்டில் இருந்து உணவு உண்ணும் அளவுக்கு நல் லிணக்கத்துடன் வாழ்ந்த கடந்த காலமே சிறப்பான காலம் என்று    அடாலி ஜாட் இனத்தவர்கள் திரும்ப நினைவு கூர்ந்து தெரிவிக்கின்றனர். இப்போது ஏற்பட்ட உரசலுக்குக் காரணமே, மிகவும் பணக்காரர்களாக ஆகிவிட்ட அந்த இரண்டு முஸ்லிம் குடும்பத்தினர்தான்.  

முஸ்லிம்கள் எங்களுடன் அனுசரித்துக் கொண்டும், கிராமத்தவரின் விருப்பத் திற்கு மதிப்பளித்தும், அவர்களது மசூ தியைக் கட்டாமலும் இருந்தால்,  எங் களுடன் சேர்ந்து வாழ முஸ்லிம்களை இப்போதும் கூட நாங்கள் வரவேற் கிறோம். என்றாலும் வன்முறை பற்றிய முக்கியமான கேள்வி பதிலளிக்கப்படா மலேயே தவிர்க்கப்பட்டுவிட்டது. அதனைத் தொடர்ந்து எதிர் கேள்விகள் கேட்கப்படத் தொடங்கின: எவர் ஒரு வரும் கொல்லப்படவில்லை; பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்பது உண்மையல்லவா? அவர் களைத் திரும்பவும் கிராமத்துக்கு வந்து வாழ எங்கள் பெரியவர்கள் அழைக்க வில்லையா? இந்தக் கேள்விகளும், அவற்றை எழுப்பச் செய்யும்  கட்டுப் படுத்தப்பட்ட கலவரங்களும் நீடிப்பதற் கான திறவு கோலைக் கொண்டிருக் கின்றன; இதன் காரணமே அவை வரவு செலவு விகிதத்தை உயர்த்துவதுதான்.  உயிரிழப்பு ஏற்படாத ஒரு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலை யத்தில் இருப்பதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப இயலாத ஊடகத்தினரின் ஆர்வமின்மையும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பாதிக்கப்பட்டவர்களால் பெயர் குறிப் பிடப்பட்ட வன்முறையாளர்களை காவல்துறையினர் கைது செய்யாமல் இருப்பதை அவர்கள் பார்த்துக் கொண் டனர். பின்னர் பாதிக்கப்பட்டவர் களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு அளிக்கப்படும் நிர்ப்பந்தங்கள், இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர பயன்படுத்திக் கொள்ளப்படும். அனைத் துக்கும் முன்னதாக  தங்கள் வாழ்வை யும், வாழ்வாதாரத்தையும் கட்டமைத் துக் கொள்ளவேண்டிய பாதிக்கப் பட்டவர்களுக்கு எதிராக காலம் வேலை செய்யும்.  இதற்கிடையில், அவர்களைத் தாக்கியவர்கள், இரண்டு பணக்கார முஸ்லிம்களை, அடக்கம் நிறைந்தவர்களாகச் செய்துவிட்டனர், தங்கள் ஆதரவாளர்களை ஒன்று திரட்டி இதைப் போன்ற இன்னுமொரு கலவரத்தை தாங்கள் விரும்பும்போது நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் மற்ற முஸ்லிம்களை அச்சுறுத்தி வைத்துள்ளனர்.

அடாலி மாதிரி இந்துத்துவ செயல் திட்டம் வெற்றிபெறவும், நீடித்து நிலைக் கவும் இயன்றவை என்ற போதிலும்,  இரு பெரும் சாவல்களை அது இன் னமும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  ஜாதிச் சமூக சூழலில் ஒருவரோடு ஒருவர் எதிர்வினையாற்றுவதும், தேர்தல் அரசியலும்தான் அவை. அடாலி முஸ்லிம்கள் தாழ்ந்த பிரிவு பக்கீர்களும், தெலிசுகளும் ஆவர். அக்கிராமத்தில் ஒரு பெரிய இந்து தலித் மக்கள்தொகையும் உள்ளது. சட்ட மன்றத் தேர்தலும் நெருங்கி வரும் நிலையில் உள்ளது. இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்ப்பது தகுதியுடையதே.

நன்றி: தி இந்து  20.06.2015

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்



இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...